மேலும் அறிய

The Flash Trailer: மிரட்டலாக ரிலீசானது ஃப்ளாஷ் ட்ரெய்லர்..! இனிதான் டி.சி.யோட ஆட்டம் ஆரம்பம்..!

டிசி(dc movie)நிறுவனத்தின் தி ப்ளாஷ் (The Flash) திரைப்படத்தின் இரண்டாவது ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

டிசி(dc movie)நிறுவனத்தின் தி ப்ளாஷ் (The Flash) திரைப்படத்தின் இரண்டாவது டிரெய்லர் வெளியாகியுள்ளது. ஜுன் 15ம் தேதி உலகம் முழுவதும் இந்த திரைப்படம் வெளியாக உள்ளது.

தி ஃப்ளாஷ் டிரெய்லர்:

பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் ஆண்டி முஷெட்டி இயக்கத்தில் எஸ்ரா மில்லர் நடிப்பில் உருவாகியுள்ள தி ஃப்ளாஷ் திரைப்படத்தின் இரண்டாவது டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்தில் இரண்டு ஃப்ளாஷ் கதாபாத்திரங்களுடன் மைக்கல் கீட்டன் மற்றும் பென் அஃப்லெக் ஆகியோர் பேட் மேனாக நடிக்க, சூப்பர் கேர்ள் கதாபாத்திரமும் இடம்பெற்றுள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த திரைப்படம் வரும் ஜுன் 15ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. முதல் டிரெய்லரை காட்டிலும் இரண்டாவது டிரெய்லரில் கூடுதல் ஆக்‌ஷன் காட்சிகள் இடம்பெற்றுள்ளதோடு,  எதைநோக்கி இந்த படம் நகர உள்ளது என்பதும் தெளிவாக காட்டப்பட்டுள்ளது. 

டிசி நிறுவனம்:

காமிக்ஸ் புத்தக விற்பனையில் முன்னோடியான டிசி நிறுவனம், திரைப்பட தயாரிப்பில் இன்னும் தனக்கான ஒரு நிலையான இடத்தை பிடிக்க முடியாமல் உள்ளது. அதே நேரம், அதன் போட்டி நிறுவனமான மார்வெல் தனக்கென ஒரு பெரும் சாம்ராஜ்ஜியத்தையே கட்டி எழுப்பியுள்ளது. இந்நிலையில் தான், டிசி சினிமாட்டிக் யூனிவெர்ஸை புதியதாக கட்டமைக்கும் பொறுப்பை இயக்குனர் ஜேம்ஸ் கன் தொடங்கியுள்ளார். அதற்கான தொடக்கப்புள்ளியாக தான்  தி ப்ளாஷ் திரைப்படம் வெளியாக உள்ளது.

தி ஃப்ளாஷ் டிரெய்லர்:

உலகின் மிகவும் வேகமான நபராக கருதப்படும் ஃப்ளாஷ் கதாபாத்திரம் டைம் டிராவல் செய்து, தனது அம்மா உயிருடன் இருக்கும் டைம் லைனிற்கு செல்கிறார். அங்கு அவர் செய்யும் ஒரு சிறிய மாற்றம், ஒட்டு மொத்த உலகத்தையே மாற்றி அமைக்கிறது. இதனால் ஏற்படும் பிரச்னைகளை அவர் எவ்வாறு எதிர்கொள்கிறார் என்பதை மையப்படுத்தி தான், தி ஃப்ளாஷ் திரைப்படம் உருவாகியுள்ளது.

டிரெய்லர் சொல்வது என்ன?

வேறு ஒரு டைம் லைனிற்கு செல்வதன் அடிப்படையில் ஃப்ளாஷ் கதாபாத்திரத்தில் நடித்துள்ள எஸ்ரா மில்லர் இரட்டை வேடத்தில் தோன்றுகிறார். பிரச்னையை தீர்க்க மற்ற சூப்பர் ஹீரோக்களின் உதவி அவசியம் என்பதை உணர்ந்து, பேட்மேனை தேடி செல்கிறார். அந்த வகையில் உண்மையான டைம் லைனில் பென் அஃப்லெக் பேட் மேன் கதாபாத்திரமும், மாற்றியமைக்கப்பட்ட டைம் லைனில் மைக்கல் கீட்டன் பேட் மேன் கதாபாத்திரமும் இடம்பெற்றுள்ளது.

இதோடு, சூப்பர் கேர்ள் கதாபாத்திரமும், மேன் ஆஃப் ஸ்டீல் எனும் சூப்பர் மேன் படத்தில் தோன்றிய ஜாட் எனும் வில்லன் கதாபாத்திரமும், தி ஃப்ளாஷ் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளன.  பிரமாண்ட கிராபிக்ஸ் உடன் ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த இந்த டிரெய்லர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. குறிப்பாக பேட்மேனின் ஐகானிக் வசனமான “im batman”  நீண்ட காலத்திற்குப் பிறகு இந்த படத்தில் இடம்பெற்றுள்ளது. பென் அஃப்லெக்கை காட்டிலும் மைக்கேல் கீட்டனுக்கு அதிகப்படியான ஆக்‌ஷன் கட்சிகளும், ஃப்ளாஷின் கருப்பு யூனிபார்மும் புதிய டிரெய்லரின் காட்டப்பட்டுள்ளது.

ஃப்ளாஷ் ஏன் மிக முக்கிய திரைப்படம்?

பல்வேறு பிரச்னைகளுக்கு பின் தற்போது தான், டிசி நிறுவனத்தை ஒரு பெரிய சினிமாடிக் யூனிவர்ஸ் ஆக கட்டமடைக்க ஜேம்ஸ் கன் பணிகளை மேற்கொண்டுள்ளார். இதையடுத்து ஏற்கனவே வெளியாகி உள்ள அனைத்து டிசி படங்களையும் ஓரம்கட்டி விட்டு, வரும் 2025ம் ஆண்டு முதல் அடுத்த 10 ஆண்டுகளுக்கான ஒரு புதிய கதைக்களத்தை அவர் வடிவமைத்துள்ளார். அதற்கான முதல் உந்துகோலாகவும், டிசி சினிமாக்களில் இதுவரை நடந்த அனைத்தையும் மாற்றி அமைக்கும் வகையிலும் தான் தி ஃப்ளாஷ் திரைப்படம் உருவாகியுள்ளது. எனவே, இந்த திரைப்படம், ஒட்டுமொத்த டிசி சினிமாடிக் யூனிவர்ஸிற்கே புதிய தொடக்கமாக அமைய உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: குவிக்கப்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீஸ் - வேலூரில் பரபரப்பு
அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: குவிக்கப்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீஸ் - வேலூரில் பரபரப்பு
Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!
Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!
வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
Tamilnadu Roundup: பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம்! துரைமுருகன் வீட்டில் ரெய்டு - தமிழ்நாட்டில் 10 மணி வரை!
Tamilnadu Roundup: பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம்! துரைமுருகன் வீட்டில் ரெய்டு - தமிழ்நாட்டில் 10 மணி வரை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஹெல்மெட் போட்டா தங்க காசு! NEW YEAR சர்ப்ரைஸ்! துள்ளிக் குதித்த வாகன ஓட்டிகள்Zomato Search in 2024 | ”எனக்கு Girlfriend வேணும்” மிரளவைத்த YOUNGSTERS! ஷாக்கான Zomato |‘’முகுந்தனுக்கு பதவி உறுதி!’’  அடித்து சொன்ன ராமதாஸ்   அதிர்ச்சியில் பாமகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: குவிக்கப்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீஸ் - வேலூரில் பரபரப்பு
அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: குவிக்கப்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீஸ் - வேலூரில் பரபரப்பு
Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!
Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!
வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
Tamilnadu Roundup: பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம்! துரைமுருகன் வீட்டில் ரெய்டு - தமிழ்நாட்டில் 10 மணி வரை!
Tamilnadu Roundup: பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம்! துரைமுருகன் வீட்டில் ரெய்டு - தமிழ்நாட்டில் 10 மணி வரை!
Vijayakanth: விஜயகாந்த் பார்த்து பார்த்து கட்டிய வீட்டின் கிரகப்பிரவேசம் - எப்போது? வெளியான தகவல்!
Vijayakanth: விஜயகாந்த் பார்த்து பார்த்து கட்டிய வீட்டின் கிரகப்பிரவேசம் - எப்போது? வெளியான தகவல்!
ரயிலில் மதுரைக்கு பார்சலில் வந்த 240 கிலோ கணேஷ் புகையிலை பறிமுதல்
ரயிலில் மதுரைக்கு பார்சலில் வந்த 240 கிலோ கணேஷ் புகையிலை பறிமுதல்
ஸ்பீடு பிரேக்கரில் ஏறி இறங்கிய ஆம்புலன்ஸ்! உயிரிழந்தவர் உயிர் பெற்ற அதிசயம்! அதிர்ச்சியில் மருத்துவர்கள்!
ஸ்பீடு பிரேக்கரில் ஏறி இறங்கிய ஆம்புலன்ஸ்! உயிரிழந்தவர் உயிர் பெற்ற அதிசயம்! அதிர்ச்சியில் மருத்துவர்கள்!
பெண்கள் இருக்கும் வீடுகளில் ஜன்னல் இருக்கக்கூடாது: ஆப்கனில் தலிபான் அரசு புது உத்தரவு 
பெண்கள் இருக்கும் வீடுகளில் ஜன்னல் இருக்கக்கூடாது: ஆப்கனில் தலிபான் அரசு புது உத்தரவு 
Embed widget