Watch Video: ஐ பட விக்ரமாக மாறிய டேவிட் வார்னர்... நெருப்பு எமோஜிகளை பறக்கவிடும் நெட்டிசன்கள்!
ஐ படத்தில் இடம்பெற்றுள்ள பிரபல ஜிம் ஃபைட் காட்சியில் தன்னைப் பொருத்தி ஆக்ஷனில் மாஸ் காட்டும் வீடியோவை டேவிட் வார்னர் பகிர்ந்துள்ளார்.
சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டர் டேவிட் வார்னர் இன்றைய 2கே கிட்ஸூக்கு சவால் விடும் வகையில் ரீல்ஸ், வீடியோக்கள், புகைப்படங்கள் என தன் இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ந்து ஆச்சர்யப்படுத்தி வருகிறார்.
குழந்தைகள் போல் இன்ஸ்டாவில் சுட்டித்தனம் செய்யும் அவரின் க்யூட் செய்கைகளை ரசிக்காதவர்களே இருக்க முடியாது. தனது மனைவியுடனும் குழந்தைகளுடனும் சுவாரஸ்யமான பாடல்கள், காட்சிகளுக்கு நடனமாடி, நடித்து தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோக்கள் பகிர்ந்து லைக்ஸ் அள்ளி வருகிறார் டேவிட் வார்னர்.
இந்தியப் படங்களின் ரசிகர்
டோலிவுட், பாலிவுட் என இந்தியப் படங்கள், பாடல்களுக்கும் தீவிர விசிறியாக உள்ள டேவிட் வார்னர், நடிகர் அல்லு அர்ஜூனின் பெரும் ரசிகராய் உருவெடுத்து, புஷ்பா படக் காட்சிகள், வீடியோக்களை மார்ஃப் செய்து பகிர்ந்த வீடியோக்கள் பெரும் ஹிட் அடித்தன.
அந்த வரிசையில் தற்போது கோலிவுட்டின் ஐ பட விக்ரம் பாத்திரத்தில் தன் முகத்தைப் பொருத்தி டேவிட் வார்னர் பகிர்ந்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. ஐ படத்தில் இடம்பெற்றுள்ள பிரபல ஜிம் ஃபைட் காட்சியில் தன்னைப் பொருத்தி ஆக்ஷனில் மாஸ் காட்டும் வீடியோவை டேவிட் வார்னர் பகிர்ந்துள்ளார்.
மேலும் இந்தப் படம் தனக்குப் பிடித்த படங்களில் ஒன்று என்றும் கூறி, படத்தின் பெயரைக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் என்று தன் ரசிகர்களுக்கு சவால் விட்டு கேப்ஷன் பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram
இந்நிலையில் ”இத்தகைய காட்சிகள் நீங்கள் உங்கள் முகத்தைப் பொருத்தி பகிர்வதற்காக உங்களுக்காகவே எடுக்கப்பட்டவை” என்றும், ”ஆஸ்கர் பரிந்துரை வந்து கொண்டிருக்கிறது” என்றும் ரகளையாக ரசிகர்கள் கமெண்ட் செய்து பகிர்ந்து வருகின்றனர்.
பதான் ஷாருக்
முன்னதாக இதேபோல் பதான் பட ஷாருக்கான் கதாபாத்திரத்தில் தன் முகத்தைப் பொருத்தி எடிட் செய்த வீடியோவைப் பகிர்ந்து வைரலானார் டேவிட் வார்னர்.
பதான் ஷாருக்கின் மாஸ் காட்சிகளான புல்லட்டில் சென்று வெடிகுண்டு வீசுவது, ரத்தம் சொட்ட செட்ட 8 பேக்ஸில் போஸ் கொடுப்பது உள்ளிட்ட காட்சிகளில் தன்னைப் பொருத்தி பதிவிட்டதுடன், என்ன ஒரு படம் என்றும் பதான் படத்தைப் டேவிட் வார்னர் புகழ்ந்திருந்தார்.
”இவர் இந்தியாவின் மீது பைத்தியமாகியுள்ளார், யாராவது வார்னருக்கு இந்திய குடியுரிமை வழங்குங்கள்” என இந்த வீடியோவிலும் நெட்டிசன்கள் உற்சாக கமெண்ட் செய்து வைரலாக்கினர்.