மேலும் அறிய

Daniel Balaji: நான் ரசிக்கும் கலைஞன்.. டேனியல் பாலாஜி நடிப்பைப் பார்ந்து மெய்மறந்து சேரன் செய்த செயல்!

Daniel Balaji Death: இயக்குநர் சேரனின் பதிவினைப் பகிர்ந்து தற்போது ரசிகர்கள் இணையத்தில் டேனியல் பாலாஜிக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

டேனியல் பாலாஜி மறைவு

தமிழ் சினிமாவின் பலராலும் ரசித்துக் கொண்டாடப்பட்ட பிரபல வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி (Daniel Balaji), இன்று தன் 48ஆவது வயதில் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நடிகர் முரளியின் உறவினரான டேனியல் பாலாஜி, சித்தி சீரியலில் தான் ஏற்று நடித்த கதாபாத்திரத்தின் மூலம் ‘டேனியல்’ எனும் அடைமொழியைப் பெற்று பிரபலமானார். தரமணி ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் இயக்குநர் பயிற்சி பெற்று படித்த இவர், தொடர்ந்து வெள்ளித்திரைக்குப் பயணித்து தேர்ந்த வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டார்.

Daniel Balaji: நான் ரசிக்கும் கலைஞன்.. டேனியல் பாலாஜி நடிப்பைப் பார்ந்து மெய்மறந்து சேரன் செய்த செயல்!

கண்கள் தானம்

தமிழ் தவிர மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பிற மொழிகளிலும் நடித்துள்ள டேனியல் பாலாஜியின் அம்மா தமிழ், அப்பா தெலுங்குக்காரர். இறுதியாக தமிழில் அரியவன் எனும் திரைப்படத்தில் நடித்த டேனியல் பாலாஜியின் வேட்டையாடு விளையாடு சைக்கோ கதாபாத்திரம், வட சென்னை, பொல்லாதவன் கதாபாத்திரங்கள் இன்றும் ரசிகர்களால் தொடர்ந்து சிலாகிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் நேற்று இரவு மாரடைப்பால் காலமான டேனியல் பாலாஜியின் கண்கள் இன்று தானம் செய்யப்பட்டது. இவரது இறுதிச்சடங்குகள் இன்று மாலை சென்னை, புரசைவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் நடைபெற்று, ஓட்டேரியில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரசிகர்கள் அஞ்சலி

இந்நிலையில் டேனியல் பாலாஜிக்கு நேரிலும் இணையத்திலும் ரசிகர்கள், திரை உலகினர் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஒருபுறம் அவரது பழைய நேர்க்காணல்களை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து நினைவுகூர்ந்து வருகின்றனர். அந்த வகையில் தேசிய விருது வென்ற தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநரான சேரன் தான் ரசிக்கும் கலைஞன் என டேனியல் பாலாஜியின் புகைப்படத்தை முன்னதாகப் பகிர்ந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிலாகித்த சேரன்

நந்தா பெரியசாமி இயக்கத்தில் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ திரைப்படத்தில் ஒன்றாக நடிக்கும்போது இயக்குநர் சேரன் பகிர்ந்த இந்தப் பதிவில், “ஒரு குளோசப் ஷாட் எடுக்கப்பட எத்தனை பேர் உழைப்பு... எவ்வளவு கூட்டத்தின் நடுவில் ஒரு நடிகன் தனது திறமையை உணர்வுகளை எந்த அச்சமும் பதட்டமுமின்றி காட்டவேண்டும், இங்கே டேனியல் பாலாஜி. நான் மிகவும் ரசிக்கும் கலைஞன். முகத்தில் காண்பிக்கும் மாற்றங்கள் ரசித்துக்கொண்டே இருக்கலாம். வளரும் கலைஞன்” என அவரது புகைப்படங்களுன் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவினைப் பகிர்ந்து தற்போது ரசிகர்கள் இணையத்தில் டேனியல் பாலாஜிக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

View this post on Instagram
 
A post shared by Cheran 👑 (@cherandirector)

மேலும் சேரன் குறித்து தனியார் ஊடகத்துடனான நேர்க்காணல் ஒன்றில் முன்னதாகப் பேசியுள்ள டேனியல் பாலாஜி, "சேரன் சாரை எனக்கு முதலில் இருந்தே தெரியும். தவமாய் தவமிருந்து மற்றும் அவரது இன்னொரு 
படத்தில் என்னால் சில காரணங்களால் நடிக்க முடியாமல் போனது. இந்தப் படத்தில் நான் நடிக்கும்போது அவரது காட்சிகள் எடுக்கப்படவில்லை.

ஆனால் ஒரு ஓரத்தில் இருந்து பார்த்துவிட்டு ஃபோட்டோஸ் எடுத்துவிட்டு, “என்னயா இவ்வளவு கும்பல வச்சிட்டு இப்படி நடிக்கிற” எனக் கூறினார். "நாங்கள் வேறு எமோஷன்ஸ் நடிக்கிறோம். ஆனால் நீ புதிதாய் ஒன்று க்ரியேட் செய்கிறாய். பரவாயில்லயே” என்று பாராட்டினார்” என டேனியல் பாலாஜி மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vaibhav Suryavanshi:  வெறும் 13 வயசுதான்! கோடிக்கணக்கில் ஏலம் போன சின்னப்பையன் - யார் இந்த சூர்யவன்ஷி?
Vaibhav Suryavanshi: வெறும் 13 வயசுதான்! கோடிக்கணக்கில் ஏலம் போன சின்னப்பையன் - யார் இந்த சூர்யவன்ஷி?
IPL Auction 2025 LIVE: கமலஷே் நாகர்கோட்டியை 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது சென்னை
IPL Auction 2025 LIVE: கமலஷே் நாகர்கோட்டியை 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது சென்னை
Rishabh Pant: ரோகித் கேப்டன்சி பிடிக்கவில்லையா? ரிஷப் பண்ட் மறைமுக தாக்கு! அடுத்த கேப்டன் பும்ராவா?
Rishabh Pant: ரோகித் கேப்டன்சி பிடிக்கவில்லையா? ரிஷப் பண்ட் மறைமுக தாக்கு! அடுத்த கேப்டன் பும்ராவா?
IPL 2025 CSK Squad: இதான்டா டீம்! சிங்கம் போல சீறும் CSK - ஸ்குவாடை பாருங்க!
IPL 2025 CSK Squad: இதான்டா டீம்! சிங்கம் போல சீறும் CSK - ஸ்குவாடை பாருங்க!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vaibhav Suryavanshi:  வெறும் 13 வயசுதான்! கோடிக்கணக்கில் ஏலம் போன சின்னப்பையன் - யார் இந்த சூர்யவன்ஷி?
Vaibhav Suryavanshi: வெறும் 13 வயசுதான்! கோடிக்கணக்கில் ஏலம் போன சின்னப்பையன் - யார் இந்த சூர்யவன்ஷி?
IPL Auction 2025 LIVE: கமலஷே் நாகர்கோட்டியை 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது சென்னை
IPL Auction 2025 LIVE: கமலஷே் நாகர்கோட்டியை 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது சென்னை
Rishabh Pant: ரோகித் கேப்டன்சி பிடிக்கவில்லையா? ரிஷப் பண்ட் மறைமுக தாக்கு! அடுத்த கேப்டன் பும்ராவா?
Rishabh Pant: ரோகித் கேப்டன்சி பிடிக்கவில்லையா? ரிஷப் பண்ட் மறைமுக தாக்கு! அடுத்த கேப்டன் பும்ராவா?
IPL 2025 CSK Squad: இதான்டா டீம்! சிங்கம் போல சீறும் CSK - ஸ்குவாடை பாருங்க!
IPL 2025 CSK Squad: இதான்டா டீம்! சிங்கம் போல சீறும் CSK - ஸ்குவாடை பாருங்க!
School Leave: நாளை ரெட் அலர்ட்.! ஒரு மாவட்டத்திற்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
School Leave: நாளை ரெட் அலர்ட்.! ஒரு மாவட்டத்திற்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் - அன்புமணி ஆவேசம்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் - அன்புமணி ஆவேசம்
IND vs AUS Test: வம்பிழுத்த ஆஸிஸ்.. இந்திய அணியின் தரமான பதிலடி போட்டிகள்
IND vs AUS Test: வம்பிழுத்த ஆஸிஸ்.. இந்திய அணியின் தரமான பதிலடி போட்டிகள்
IPL 2025 Unsold Players:
IPL 2025 Unsold Players: "வார்னர் டூ பார்ஸ்டோ" அடிமாட்டு விலைக்கு கூட போகாத அதிரடி மன்னர்கள்!
Embed widget