பிரபல நடன இயக்குநரின் முதல் படத்தில் நடிக்கும் ஆண்ட்ரியா!
லாரன்ஸ் மாஸ்டர் மற்றும் பிரபுதேவா மாஸ்டர் நடிப்பு, இயக்கம் என ஆல்ரவுண்டராக வலம் வந்துக்கொண்டிருக்கின்றனர். அந்த வரிசையில் தற்போது பிரபல நடன இயக்குநரும் இணைந்துள்ளார்
சமீப காலமாக சினிமாவில் குறி்ப்பிட்ட துறை சார்ந்த கலைஞர் அந்த துறையில் மட்டுமல்லாமல் அடுத்தடுத்த துறைகளிலும் கால் பதித்து அதிலும் கலக்கி வருகின்றனர். உதாரணமாக இசையமைப்பாளராக இருந்த விஜய் ஆண்டனி, ஜி.வி. பிரகாஷ் உள்ளிட்டோர் நடிகர்களாகவும் அவதாரம் எடுத்து கலக்கி வருகின்றனர். சமீபத்தில் கூட நடிகராக இருந்த ஜெய் , இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார்.அதே போல நடன இயக்குநர்களாக இருந்த லாரன்ஸ் மாஸ்டர் மற்றும் பிரபுதேவா மாஸ்டர்ஸ் நடிப்பு, இயக்கம் என ஆல்ரவுண்டராக வலம் வந்துக்கொண்டிருக்கின்றனர். அந்த வரிசையில் தற்போது பிரபல நடன இயக்குநரான பாபி ஆண்டனியும் இணைந்துள்ளார். பாபி மாஸ்டர் என்றால் திரையுலகில் அறியாதவர்களே இருக்க முடியாது. அந்த அளவிற்கு பல முன்னணி நடிகர்களும் இவரது இயக்கத்தில் நடனமாடியுள்ளனர். இந்நிலையில் விரைவில் தான் இயக்கவிருக்கும் முதல் படத்தில் நடிகை ஆண்ட்ரியாவை ஒப்பந்தம் செய்துள்ளார் பாபி மாஸ்டர்.
இந்த படத்தை பல வெற்றிப்படங்களை தயாரித்த சுஜாதா விஜயகுமார் அவர்களின் ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படத்திற்கு ரான் ஈதன் யோகன் இசையமைக்க, அகில் ராஜ் ஒளிப்பதிவு செய்கின்றார். மற்றும் சரத்குமார் படத்தொகுப்பு பணிகளை மேற்க்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Thank to lord My debut direction film started today @theHMMofficial #ProductionNo3
— bobbyantony (@its_mebobs) October 8, 2021
Produced by @sujataa_HMM
🌟ing @andrea_jeremiah #AshaSharath @Actorsanthosh @kaaliactor @Bala_actor
🎼 @RonYohann
🎥#AkhilArakkal@gn_murugan @iam_savari @sriryv @shachakra @teamaimpr pic.twitter.com/ZMH5YUUDSZ
காளி வெங்கட், சந்தோஷ் பிரதாப் ஷா ரா, ஜப்பான் குமார், வினோதினி, பால சரவணன், யுவலக்ஷ்மி, ஆஷா சரத் உள்ளிட்ட பலர் ஆண்ட்ரியாவுடன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.இந்த படத்தின் துவக்க பூகை சமீபத்தில் நடைப்பெற்றது. நடிகை ஆண்ட்ரியா தற்போது மிஷ்கின் இயக்கும் பிசாசு 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். படத்தில் தேசிய விருதினை பெறும் அளவிற்கு ஆண்டியா நடித்துள்ளதாக நம்பிக்கை தெரிவிக்கிறார் இயக்குநர் மிஷ்கின். சமீபத்தில் இந்த படத்தில் சிங்கிள் டிராக் வெளியாகி பலரின் வரவேற்பை பெற்றது . அதே போல படத்தில் ஆண்ட்ரியா நடிக்கும் கதாபாத்திரத்தின் புகைப்படங்களும் வெளியாகி பலரின் கவனத்தை ஈர்த்தது. படத்தில் ஆண்ட்ரியா ஆங்கிலோ இந்தியனாக வலம் வருவார் என தெரிகிறது. பிசாசு முதல் பாகத்தை காட்டிலும் இரண்டாம் பாகம் மிரட்டும் திகில் காட்சிகளுடன் படமாக்கப்பட்டுள்ளதாம். மேலும் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இது இல்லாமல் , மாறுபட்ட கதைக்களத்தை கொண்டதாக இருக்கும் என இயக்குநர் மிஷ்கின் தெரிவித்துள்ளார். படத்தில் நடிகை பூர்ணா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க 16 நிமிட காட்சிகளில் கவுரவ தோற்றத்தில் வரவுள்ளாராம் நடிகர் விஜய் சேதுபதி. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைப்பெற்று வருகிறது. விரைவில் படத்தின் டிரைலர் மற்றும் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.