‛அரபிக் குத்து’ ஜானி மாஸ்டர் ஹீரோவாக அறிமுகம்... பூஜையோடு தொடங்கிய படப்பிடிப்பு!
Yatha Raja Tatha Praja : பிரபல நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் "யதா ராஜா ததா பிரஜா" என்ற திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது.
தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி மொழி படங்களில் 150ற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடன கலைஞராக முன்னணி நட்சத்திரங்களுடன் பணியாற்றியுள்ளார் பிரபல நடன இயக்குனர் ஜானி மாஸ்டர். தற்போது "யதா ராஜா ததா பிரஜா" என்ற திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம் :
ஓம் மூவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா மூவி கிரியேஷன்ஸ் பேனர்களின் கீழ் ஸ்ரீனிவாஸ் விட்டலா மற்றும் ஹரேஷ் படேல் இயக்கும் இப்படத்தின் பூஜையுடன் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது. "சினிமா பாண்டி" படம் மூலம் அறியப்பட்ட ஸ்ரஸ்தி வர்மா இப்படத்தின் மற்றுமொரு கதாநாயகனாகவும், ஷ்ரஸ்தி வர்மா கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். சல்மான் கானின் மருமகன் ஆயுஷ் சர்மா ஒளிப்பதிவு செய்ய கதை, திரைக்கதை, வசனம் எழுதி படத்தை தயாரித்தும் உள்ளார் ஸ்ரீனிவாஸ் விட்டலா. "யதா ராஜா ததா பிரஜா" திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியிடப்படும்.
ஜானி மாஸ்டர் எப்படி நடிக்க வந்தாரு :
ஒரு முக்கிய கதாபாத்திரத்தை ஜானி மாஸ்டருடன் சேர்ந்து தேடுகையில் பழக்கம் ஏற்பட்டு பின்னர் அவரையே அந்த கதாபாத்திரத்திற்காக தேர்வு செய்துள்ளார் ஸ்ரீனிவாஸ் விட்டலா. மேலும் அவர் கூறுகையில் இப்படம் ஒரு சமூகம், அரசியல், வணிகம், நகைச்சுவை, நையாண்டி, பொழுதுபோக்கு என அனைத்தின் கலவையாகவும் இப்படம் அமையும். இப்படத்தில் நான்கு பாடல்கள் இடம் பெரும் அதை இசையமைக்கிறார் ரதான்.
It's going to be a crazy new journey in #YathaRajaTathaPraja 💥
— Jani Master (@AlwaysJani) August 22, 2022
Need all your blessings 🙏🏼😇@imVdeshK @verma_shrasti #SrinivasVittala #HareshPatel #OmMovieCreations #SriKrishnaMovieCreations @PulagamOfficial pic.twitter.com/sFIx6nEPdO
நடன இயக்குனர் டூ நடிகர் :
ஜானி மாஸ்டர் இப்படத்தில் நடிப்பது குறித்து பேசுகையில் " ஸ்ரீனிவாஸ் விட்டலா சொன்ன கதை மிகவும் பிடித்திருந்ததால் நடிக்க ஒத்து கொண்டேன். நடனத்தை விட வேறு அடையாளத்தை வளர்க்க எண்ணி இந்த படத்தில் நடிக்க ஒத்து கொண்டேன். நான் 'சினிமா பாண்டி' படத்தை பார்த்துள்ளேன். விகாஸோடு இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி. மேலும் மெகா ஸ்டார் சிரஞ்சீவின் பிறந்தநாள் அன்று எங்களின் படப்பிடிப்பை தொடங்கியதில் மகிழ்ச்சி " என்றார்.
Thank you for gracing the Pooja Ceremony of my new film #YathaRajaTathaPraja 🙏🏼@ImSharwanand garu, #AayushSharma ji & #JKarunaKumar garu 😇@imVdeshK @verma_shrasti #SrinivasVittala #HareshPatel #OmMovieCreations #SriKrishnaMovieCreations @PulagamOfficial pic.twitter.com/ggVBogGXSL
— Jani Master (@AlwaysJani) August 22, 2022
மேலும் இப்படம் குறித்து நடன இயக்குனர் கணேஷ் பேசுகையில் "யதா ராஜா ததா பிரஜா" படக்குழுவினருக்கு நல்வாழ்த்துகளை தெரிவித்து படம் ஒரு பிளாக் பஸ்டர் படமாக அமைய வேண்டும் என வாழ்த்தினர். ஜானி மாஸ்டருக்கு இந்த வாய்ப்பினை வழங்கியதற்கு இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றிகள் என தெரிவித்தார்.