D50 First Look: டி50 ஃபர்ஸ்ட் லுக்குக்கு தயாராகுங்க ரசிகர்களே.. ஃபோட்டோவுடன் மாஸ் அப்டேட் தந்த தனுஷ்!
D50 First Look: தனுஷ் இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகி வரும் டி50 படத்தின் மாஸ் அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களுள் ஒருவராக வலம் வரும் தனுஷ் (Dhanush), பவர் பாண்டி திரைப்படத்துக்குப் பிறகு மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுக்கும் திரைப்படம் D50.
சன் பிக்சர்ஸ் பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் இந்தப் படத்தில் நடிகைகள் துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, நடிகர்கள் சந்தீப் கிஷன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் இபடத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக தனுஷ் தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
இந்தப் படத்துக்காக மொட்டை அடித்திருந்த நடிகர் தனுஷின் லுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன் வைரலானது. இந்நிலையில் டி50 படத்தின் மாஸ் அப்டேட் ஒன்றை தற்போது மீண்டும் தனுஷ் பகிர்ந்துள்ளார். மொட்டை அடித்தபடி, ரத்தம் வழிய கேங்ஸ்டர் லுக் போன்று தன் பின்பக்க புகைப்படம் ஒன்றை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள தனுஷ், நாளை மறுநாள் அதாவது பிப்.19ஆம் தேதி டி50 ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்றும் அறிவித்துள்ளார்.
#D50 FIRST LOOK ON 19th FEB @sunpictures pic.twitter.com/E2Bf3TuMU5
— Dhanush (@dhanushkraja) February 17, 2024
தனுஷின் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.