மேலும் அறிய

ஷாலினிக்கு இப்படித்தான் ப்ரொபோஸ் பண்ணிருக்கார் அஜித்.. வைரலாகும் ஃப்ளாஷ்பேக் மொமெண்ட்..

பின் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் என்பது அனைவருக்கும் தெரிந்த செய்தி, ஆனால் அது எப்படி தெரியப்படுத்தினார் என்பதுதான் ஹைலைட்.

தமிழ் திரையுலகில் நட்சத்திர ஜோடிகளாக ஜொலிப்பவர்கள் அஜித் - ஷாலினி தம்பதி.      வளரும் நடிகராக இருந்த அஜித் அமர்க்களம் படத்தில் தன்னுடன் நடித்த ஷாலினி மீது காதலில் விழுந்தார். இன்று 22 வது வருட மணநாளை கொண்டாடும் இந்த ஜோடியின் காதல் அமைந்த விதமே வித்தியாசமனதுதான். ஷாலினி குழந்தை நட்சத்திரமாக தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மோ;மொழிகளில் கிட்டத்தட்ட 55 படங்களில் வெற்றிகரமாக குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். பின்னர் 7 வருட இடைவேளைக்கு பிறகு ஷாலினி நாயகியாக என்ட்ரி கொடுத்து ஷாலினி மலையாளம் மற்றும் தமிழில் 12 படங்களில் மட்டுமே நாயகியாக தோன்றினார். விஜய் அஜித், மாதவன் என முன்னணி நாயகர்களுடன் ஷாலினி முன்னணி பாத்திரங்களில் நடித்த படங்களில் பெரும்பான்மையான படங்கள்  பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுத்தது.

1990-ஆம் ஆண்டு என் வீடு என் கணவர் என்ற படத்தில் பள்ளி சிறுவனாக சிறிய ரோலில் நடித்து சினிமாவிற்கு வந்தவர் அஜித். மூன்று ஆண்டுகளுக்கு பிறகு 1993-இல் அமராவதி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்த படத்திற்கு பிறகு பைக் விபத்தில் படுகாயம் அடைந்த அஜித், சில ஆண்டுகள் சினிமாவில் ஹீரோக்களுக்கு வாய்ஸ் கொடுத்து டப்பிங் கலைஞராக பணியாற்றினார்.

பாசமலர்கள், ராஜாவின் பார்வையிலே, பவித்ரா போன்ற படங்களில் கேரக்டர் ரோல்களில் நடித்து வந்த அஜித்திற்கு ஆசை படம் முதல் கமர்ஷியல் வெற்றியை தந்தது. அதற்கு பிறகு 1996 ல் நடித்த காதல் கோட்டை படத்தின் பிரம்மாண்ட வெற்றி அஜித்தை புகழின் உச்சிக்கே கொண்டு போனது. அதற்கு பிறகு தொடர்ந்து பல வெற்றி படங்களைக் கொடுத்தார். தீனா, சிட்டிசன் படங்களுக்கு பிறகு ஆக்ஷன் ஹீரோவாக, டாப் ஹீரோக்களில் ஒருவராக வளர்ந்தார் அஜித்.

ஷாலினிக்கு இப்படித்தான் ப்ரொபோஸ் பண்ணிருக்கார் அஜித்.. வைரலாகும் ஃப்ளாஷ்பேக் மொமெண்ட்..

இருவரும் இணைந்து அமர்க்களம் திரைப்படத்தில் நடித்துள்ளனர். அப்படத்தின் படப்பிடிப்பின் போதுதான் அஜித்திற்கு நடிகை ஷாலினி மீது காதல் வந்தது. ஆரம்பத்தில் இருவரும் தங்கள் காதலை வெளிகாட்டாமல் பழகி வந்தனர். பிறகு நாளுக்கு நாள் இவர்கள் நெருங்கி பழக ஒருவரையொருவர் காதலிக்க ஆரம்பித்தனர். பிறகு அவர்களுக்கு திருமணமாகி ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். கணவனுக்கு உறுதுணையாக வெற்றிகரமாக 22 வருட திருமண பந்தத்தில் ஜொலித்து வருகிறார் ஷாலினி. நடிகர் அஜித்குமார், நடிகை ஷாலினியின் 22 வது திருமண நாள் இன்று சோஷியல் மீடியாவில் வேற லெவலில் அமர்க்களமாக கொண்டாடி வருகிறார்கள். இந்த தம்பதிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

முதலில் அமர்க்களம் படத்தில் நடிப்பதற்காக ஷாலினியை அணுகியபோது நடிக்க முடியாது என மறுத்துவிட்டார். பின் ஷாலினி அஜித் கேட்டுக்கொண்டதற்கு பிறகு அமர்க்களம் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். அதன் பிறகு இந்த படத்தில் நடிக்கும்போது ஷாலினி இடம் அஜித் தனது காதலை வெளிப்படுத்தினார். பின் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் என்பது அனைவருக்கும் தெரிந்த செய்தி, ஆனால் அது எப்படி தெரியப்படுத்தினார் என்பதுதான் ஹைலைட்.

View this post on Instagram
 
A post shared by Shalini Ajithkumar (@shaliniajithkumarofficial)

ஒரு நாள் அமர்க்களம் படப்பிடிப்பின்போது அஜித் இயக்குநர் சரணிடம் சென்று விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிடுங்கள் என்றாராம். அதற்கு ஏன் என சரண் கேட்க , அஜித் இப்படப்பிடிப்பை முடிப்பதற்குள் எனக்கு ஷாலினியின் மேல் காதல் வந்துவிடும்போல் உள்ளது அதனால்தான் விரைவில் படப்பிடிப்பை முடிக்குமாறு கேட்டுக்கொண்டேன் என்றாராம். இதை பார்த்துக்கொண்டிருந்த ஷாலினி அஜித்திடம் இருவரும் என்ன பேசிக்கொண்டிருந்தீர்கள் என கேட்க அதற்கு அஜித், உங்கள் மீது எனக்கு காதல் வருவதற்குள் இப்படத்தின் படப்பிடிப்பை முடிக்க சொன்னேன் என்றார். இதை சற்றும் எதிர்பாராத ஷாலினி வெட்கத்தின் மூலம் தன் காதலை வெளிப்படுத்தினாராம். ஆனால் 1999-ஆம் ஆண்டு ஜுன் மாதம் ஷாலினியிடம் தனது காதலை வெளிப்படையாக கூறி உள்ளார் அஜித். ஷாலினியும் உடனடியாக அதை ஏற்றுக்கொண்டதால், பெற்றோர்களிடம் பேசி 2000-ஆம் ஆண்டு ஏப்ரல் 24-ஆம் தேதி இவர்களின் திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"'யோக்கியன் வரான் சொம்பைத் தூக்கி உள்ளே வை" EPS-க்கு எதிராக கொதித்த அமைச்சர் சிவசங்கர்!
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TPDK vs Seeman : ”சீமான் வீட்டு கார் கண்ணாடி  உடைப்பு” பெரியார் ஆதரவாளர்கள் ஆவேசம்!Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல்..  எதிர்க்கும் விசிக, காங். , CPM  தலைவலியில் திமுக தலைமை!Tirupati Stampede: கூட்டநெரிசல்- தள்ளு முள்ளு..கண்ணீர் வெள்ளத்தில் திருப்பதி!காலையிலேயே நடந்த சோகம்ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"'யோக்கியன் வரான் சொம்பைத் தூக்கி உள்ளே வை" EPS-க்கு எதிராக கொதித்த அமைச்சர் சிவசங்கர்!
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
"நானா இருந்தா தோற்கடிச்சிருப்பேன்" டிரம்ப் வெற்றி குறித்து பைடன் ஒபன் டாக்!
Ajithkumar Accident: கார் ரேஸில் அஜித் உயிர் தப்பியது எப்படி? மருத்துவர் தந்த பரபரப்பு விளக்கம்
Ajithkumar Accident: கார் ரேஸில் அஜித் உயிர் தப்பியது எப்படி? மருத்துவர் தந்த பரபரப்பு விளக்கம்
வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சித்தர் பீடத்தில் இந்து முறைப்படி திருமணம் - வாழ்த்திய சொந்தங்கள்
வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சித்தர் பீடத்தில் இந்து முறைப்படி திருமணம் - வாழ்த்திய சொந்தங்கள்
Embed widget