மேலும் அறிய

Ranjana Nachiyar: நடிகை ரஞ்சனா நாச்சியாருக்கு நிபந்தனை ஜாமீன்! நீதிமன்றத்தில் நடந்த வாதம் என்ன?

மாணவர்களை அடித்து அவதூறாகப் பேசியதற்காக கைது செய்யப்பட்ட நடிகை ரஞ்சனா நாச்சியாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

மாணவர்களை அடித்து அவதூறு

அரசு பேருந்தின் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு சென்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை அடித்து அவதூறாகப் பேசிய காரணத்துக்காக நடிகை ரஞ்சனா நாச்சியாரை இன்று காலை காவல் துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

பள்ளி மாணவர்கள் தவிர்த்து அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரையும் அவர் அவதூறாகப் பேசிய வீடியோ இணையதளத்தில் வெளியானதைத் தொடர்ந்து ரஞ்சனா நாச்சியாருக்கு சமூக வலைதளத்தில் எதிர்ப்புகள் வரத் தொடங்கின.

இதனையடுத்து இன்று காலை மாணவர்களை அடித்தது, அரசு பஸ் கண்டக்டர் மற்றும் டிரைவர்களை அவதூறாக பேசியது, அரசு பேருந்தை வழிமறித்தது உள்ளிட்ட சம்பவத்திற்காக கைது செய்து விசாரணைக்காக போலீசார் அழைத்துச் சென்றனர். முன்னதாக காவலர்கள் கைது செய்ய வந்தபோது அவர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் நடிகை ரஞ்சனா. அதே போன்று பெண் காவலர்கள் மூலமாகவே அவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஞ்சனா மீது வழக்குப் பதிவு

இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகவே இது சம்பந்தமாக அவரிடம் விசாரணை நடத்த மாங்காடு இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் தலைமையில் போலீசார் அவரது வீட்டிற்குள் சென்று, ரஞ்சனா நாச்சியாரை கைது செய்து விசாரணைக்காக போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.  மாணவர்களை அடித்ததும் அரசு பஸ் கண்டக்டர் மற்றும் டிரைவர்களை அவதூறாக பேசியது அரசு பேருந்தை வழிமறித்தது உள்ளிட்ட சம்பவத்திற்காக நடிகை ரஞ்சனா மீது 294b, 323, 341, 353,Sec 75 உள்ளிட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் போடப்பட்டது. ஶ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் நடிகை ரஞ்சனா நாச்சியாரை மாங்காடு போலீசார் ஆஜர்படுத்தினர். 

ரஞ்சனா தரப்பு வாதம்

மாணவர்களின் உயிர் மேல் உள்ள அக்கறையிலே பேருந்தை நிறுத்தி வாக்குவாதம்  செய்ததாகவும், தன் குழந்தையை போல் பாவித்து தான் மாணவர்களை தான் அடித்தார் எனவும் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு போவதால்  உயிர் சேதத்தை தவிர்க்கவே ஒரு தாய் ஸ்தானத்தில் இருந்து  தான் இப்படி செய்ததாகவும் நடிகை ரஞ்சனா தரப்பு வாதமாக முன்வைக்கப் பட்டது.

மேலும் அவரது இந்த நடத்தையை  சாலையில் இருந்த பொதுமக்கள் அனைவரும் பாராட்டினர் என்றும் கூறப்பட்டது. இதனால் ரஞ்சனாக்கு  நிபந்தனை ஜாமீன் வழங்க இந்த வழக்கை விசாரித்த குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ராம்குமார் உத்தரவிட்டுள்ளார் . 40 நாட்கள் காலை மாலை மாங்காடு காவல் நிலையத்தில் நடிகை ரஞ்சனா கையெழுத்திட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார் நீதிபதி.

தலைப்பு செய்திகள்

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!
‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லர் வெளியீட்டு விழா !
‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லர் வெளியீட்டு விழா !
செத்தால் செத்துப்போ.. சித்திக்கு பளார் பளார்..! ரேவதி ஆக்ஷனில் அதிரும் கார்த்திகை தீபம்
செத்தால் செத்துப்போ.. சித்திக்கு பளார் பளார்..! ரேவதி ஆக்ஷனில் அதிரும் கார்த்திகை தீபம்
அசோக் செல்வனின் அடுத்த காதல் பயணம்.. வெளியானது ‘அன்பில் அவன்’ ஃபர்ஸ்ட் லுக்!
அசோக் செல்வனின் அடுத்த காதல் பயணம்.. வெளியானது ‘அன்பில் அவன்’ ஃபர்ஸ்ட் லுக்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
விவசாயிகளுக்கு தமிழக அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு 'ஆப்' இருந்தா போதும்... லாபம் அள்ளலாம்!
விவசாயிகளுக்கு அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு ஆப் இருந்தா போதும்! லாபம் அள்ளலாம்!
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
Honda Scooters: Dio முதல் Activa 125 வரை.. ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்னென்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி?
Honda Scooters: Dio முதல் Activa 125 வரை.. ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்னென்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி?
Embed widget