கூலி படத்தை கெடுத்ததே லோகேஷ் தான்.. A சர்டிபிகேட் யார் கேட்டா?.. 25 நாளில் எவ்வளவு வசூல் தெரியுமா?
கூலி படத்தின் வசூலை பாதிக்க காரணம் லோகேஷின் பிடிவாதம் தான் பிரபல திரை விமர்சகர் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படம் கடந்த மாதம் 14ஆம் தேதி வெளியானது. இப்படத்தில் நாகர்ஜூனா, சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், செளபின் சாஹிர், அமீர்கான் உபேந்திரா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். லாகேஷ் ராஜ் - ரஜினி கூட்டணியில் உருவான இப்படம் 1,000 கோடி அடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படம் வெளியான முதல் நாளே கலவையான விமர்சனத்தை பெற்று வணிகரீதியாக பாதிப்படைந்தது. விமர்சனத்தை தாண்டியும் இப்படம் 500 கோடி வசூல் செய்துள்ளது.
லோகேஷ் பிடிவாதத்தால் மாறிப்போச்சு
தற்போது கூலி திரைப்படம் வெளியாகி 25 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் 600 கோடி வசூலை தொட்டிருக்கிறது. இதற்கு முன் ரஜினியின் 2.0 மற்றும் ஜெயிலர் ஆகிய இரண்டு படங்களும் 600 கோடி வசூலை தாண்டியது. தற்போது மூன்றாவதாக கூலி 600 கோடி வசூலை பெற்றிருக்கிறது. இப்படி கோலிவுட்டில் மூன்று முறை 600 கோடி வசூலை கொடுத்த நடிகராக ரஜினி இருக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் வசூலை பாதிப்படைய வைத்தது ஏ சர்டிபிகேட் தான். லோகேஷின் பிடிவாதத்தால் இப்படி நடந்துள்ளது என திரை விமர்சகர் செய்யாறு பாலு ஆதங்கத்துடன் பேசி வீடியோ வெளியிட்டுள்ளார்.
ரஜினியை கொண்டாடும் குடும்பங்கள்
மற்ற நடிகர்களை காட்டிலும் ரஜினியின் படங்களை குடும்பத்தோடு வந்து பார்ப்பார்கள். அவரது படங்களில் காமெடி ஆக்சனும் இரண்டுமே சரிசமமாக இருக்கும். ஆனால், இப்படத்தை வெளியிடுவதற்கு முன்பே சென்சார் செய்ய வேண்டும். அப்படி இந்த படத்திற்கு செய்யப்படும்போது சில இடங்களில் கட் மற்றும் மியூட் செய்ய வேண்டும் இன்று சென்சார் அதிகாரிகள் லோகேஷிடம் கூறியுள்ளார்கள். ஆனால், லோகேஷ் கடைசி வரை ஒத்துக்கொள்ளவில்லை. அன்றைக்கு அவர் ஓகே சொல்லியிருந்தால், திரையரங்குகளில் குழந்தைகள் கூட்டம் நிரம்பி வழிந்திருக்கும். யாரும் திரும்பி சென்றிருக்க மாட்டார்கள்.
கூலி 800 கோடி தொட்டிருக்கும்
சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் மதராஸி படத்தில் இதைவிட கொடுமையான வயலன்ஸ் காட்சிகள் எல்லாம் உள்ளது. அந்தப் படத்திற்கு UA சர்டிபிகேட் கிடைத்திருக்கிறது. ஆனால் கூலி படத்திற்கு சில காம்ப்ரமைஸ் லோகேஷ் செய்திருந்தால் இன்று கூலி படம் 800 கோடியை அசால்டாக தொட்டிருக்கும் என்று கூறியுள்ளார்.






















