Cool Suresh: "எனக்கும் வயிறு இருக்குல்ல.." கூல் சுரேஷின் குமுறல்கள்!
வெந்து தணிந்தது காடு படத்தின் மூலம் பிரபலமான கூல் சுரேஷ் ரசிகர்களுடன் உரையாடல் நடத்தினார்.
வெந்து தணிந்தது காடு கூல் சுரேஷிற்கு வணக்கத்த போடு!
தமிழ் சினிமாவில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வருபவர் கூல் சுரேஷ். தனுஷின் படிக்காதவன், ஜீவாவின் சிங்கம் புலி, விக்ரம் பிரபுவுடன் வெள்ளைக்கார துறை உள்ளிட்ட படத்தில் நடித்துள்ளார் இவர். நடிகர் சந்தானம் ஹீரோவாக நடித்து வெளியான வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்திலும், இனிமே இப்படித்தான் அகிய படங்களில் சந்தானத்துடன் காமெடி காட்சிகளில் நடித்தும் மக்களின் மனதில் நின்றார். நடிகர் சிம்புவின் தீவிர ரசிகனான இவர், வெந்து தணிந்ததது காடு படத்திற்கு ‘ட்ரேட் மார்க்’ ஆகவே மாறி விட்டார்.
வெந்து தணிந்தது காடு:
நடிகர் சிம்பு நடிப்பில் இம்மாதம் 15-ஆம் தேதி வெளிவந்த படம் வெந்து தணிந்தது காடு. கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கிய இப்படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார். கலவையான விமர்சனங்களுடன், சினிமா ரசிகர்களிடையே ஓரளவு வரவேற்பை பெற்றுள்ளது இப்படம்.
View this post on Instagram
‘வெந்து தணிந்தது காடு’ என பெயர் வைக்கப்பட்டது முதல், நடிகர் கூல் சுரேஷ் எங்கு சென்றாலும் இந்த படத்தை விடாமல் பிடித்துக்கொண்டார். எந்த படம் ரிலீஸானாலும், ‘ஃபர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோ’வைப் பார்த்துவிட்டு அந்த படத்திற்கு ஒரு வணக்கத்தை போடுவதை வழக்கமாக மாற்றிக்கொண்டார் கூல் சுரேஷ். இந்த வணக்கம் போடும் வழக்கம் பயங்கர பிரபலமானது. இதனை பிடித்துக் கொண்ட மீம்ஸ் க்ரியேட்டர்கள் சமூக வலைதளங்களில் கூல் சுரேஷின் டைலாக்குகளை வைரலாக்கினர். அதையடுத்து, கல்யாண பத்திரிக்கைகளிலும், பரோட்டா கடைகளின் போடுகளிலும் எழுதிப்போடும் அளவிற்கு பிரபலமானது கூல் சுரோஷின் ரைமிங் ‘வெந்து தணிந்தது காடு’ ரைமிங் வணக்கம். படத்தை ப்ரமோஷன் செய்வதில் படக்குழுவினரைேய கூல் சுரேஷ் மிஞ்சிவிட்டதாக ஒரு திரையுலக ரசிகர் பட்டாளம் தெரிவித்தது.
ரசிகர்களை சந்தித்த கூல் சுரேஷ்!
வெந்து தணிந்தது காடு படத்தின் ரிலீஸிற்கு பிறகு, கூல் சுரேஷ் ரசிகர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் “காசு வாங்காமல் எப்படி இந்த அளவிற்கு படத்தை பற்றி பேசினீரகள்?” என்பது போன்ற கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு அவர், “காசு கொடுத்தா வேணாம்னா சொல்றேன்..” என்று பதிலளித்தார். அந்த பதிலுக்கு அழகான ஒரு உவமையையும் கூறினார். “சாமி கும்பிடும் போது, சாமி என்ன பாவம் பார்த்து காசா தருகிறது? அங்கே பூஜை செய்பவர்தான் பிரசாதம் தருவார். அது போலத்தான் இதுவும். படத்தின் ப்ரெட்யூசரோ, இயக்குந்ரோ பாவம் பார்த்து ஏதாவது கொடுத்தால் நன்றாகத்தான் இருக்கும்” என கூறினார். மேலும், “அப்படி கொடுத்தால் நான் வாங்கக்கூடாதா? எனக்கு குடும்பம் இல்லையா? எனக்கும் வயிறு இருக்குல்ல..” என்று பேசினார்.
Also Read| கண்ணீர் விட்டு அழுத கூல் சுரேஷ்!
முன்னதாக, சமூக வலைதளங்களில் வெந்து தணிந்தது காடு படத்திற்காக கூல் சுரேஷ் பணம் வாங்கியதாக அவதூறு பரவியது. பின்னர், படத்தின் ரிலீஸின் போது, கூல் சுரேஷின் கார் அவரது ரசிகர்களால் சேதப்படுத்தப்பட்டது. அப்போது, அவர் “ஒரு மனிதன் முன்னுக்கு வரக்கூடாதா?” என கேள்வி எழுப்பி கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.