Cooku With Comali 6: என்னம்மா ராமர் vs லட்சுமி ராமகிருஷ்ணன்.. என்ன ஆகப்போகுதோ? CWC சீசன்6 போட்டியாளர் லிஸ்ட் இதோ!
Cooku With Comali Season 6: நடுவர்களாக செஃப் தாமு, மாதம்பட்டி ரங்கராஜ் ஆகியோருடன் மூன்றாவது நடுவராக செஃப் கெளசிக் கலந்துக்கொள்ளவுள்ளார். இந்த நிகழ்ச்சி இன்று இரவு 8 மணிக்கு ஒளிப்பரப்பாகவுள்ளது.

அதிவேகமாக இந்த பரபரப்பு உலகில் மக்களுக்கு சிரிப்பு என்பதே சில சமயங்களில் மறந்து விடுகிறது, மக்களுக்கு சிரிப்பை கொடுக்கும் வகையிலும் கொஞ்சம் சமையலை கொடுக்கும் வகையில் விஜய் டி.வி.யில் பரபரப்பாக ஒளிபரப்பான நிகழ்ச்சி தான் “குக் வித் கோமாளி”. அந்த வகையில் குத் வித் கோமாளி சீசன் 6-ல் கலந்துக்கொள்ளும் போட்டியாளார்கள் யாராக இருக்கும் என்பதை காணலாம்.
குக் வித் கோமாளி:
கொஞ்சம் சமையல் நிறைய காமெடி என கலப்பாக இந்த நிகழ்ச்சியில் தற்போது 5 சீசன்கள் இதுவரை நடந்து முடிந்துள்ளது. குக் வித் கோமாளி 4 சீசன்களை வழங்கி வந்த செஃப் வெங்கட் பட் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். அவரை தொடர்ந்து அந்த நிகழ்ச்சியை தயாரித்து வந்த தயாரிப்பு நிறுவனமும் வெளியேறியது. அதுபோல் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கோமாளிகளும் விலகினர். ஆறாவ
குக் வித் கோமாளி சீசன் 6:
என்ன தான் சர்ச்சை, சண்டையுடன் குக் வித் கோமாளி சீசன் நடந்த்ய் முடிந்திருந்தாலும் , சீசன் 6 எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த நிலையில் சீசன் 6 அடுத்த வாரம் அதாவது மே-4 ஆம் தேதி சீசன் 6 தொடங்க உள்ளது. இந்த சீசனில் ஏற்கெனவே நடுவர்களாக செஃப் தாமு, மாதம்பட்டி ரங்கராஜ் ஆகியோர் உள்ள நிலையில் தற்போது மூன்றாவது நடுவராக செஃப் கெளசிக் கலந்துக்கொள்ளவுள்ளார். இந்த நிகழ்ச்சி இன்று இரவு 8 மணிக்கு ஒளிப்பரப்பாகவுள்ளது.
போட்டியாளர்கள் யார் யார்?
இந்த சீசனில் புது கோமாளிகள் அறிமுகமாகி உள்ள நிலையில் புதிய போட்டியாளர்கள் யார் என்கிற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே எழும்பிய நிலையில் முதல் ப்ரோமோவில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான லட்சுமி ராமகிருஷ்ணன், சீரியல் நடிகை ஷபானா, அமரன் படத்தில் நடித்த உமர் லத்தீப், பிக்பாஸ் பிரபலமான நடிகர் கஞ்சா கருப்பு, நடிகை மதுமிதா, யூடியூப் பிரபலமான செளந்தர்யா, பிக் பாஸ் வின்னர் ராஜூ, விவசாயி நந்தகுமார், டியூப் பிரபலம் சுந்தரி, ஆகியோர் கலந்துக்கொள்ளவுள்ளனர். இந்த முறை ஏரளாமான சமூக வலைதள பிரபலங்களை விஜய் டிவி களமிறக்கியுள்ளது.
மேலும் சொல்வதெல்லாம் நிகழ்ச்சியையும் லட்சுமி ராமகிருஷ்ணனை வைத்து கலாய்த்து தள்ளிய ராமர் ஆகிய இருவரும் ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொள்வதால் நிகழ்ச்சின் எப்படி இருக்கப்போகிறது என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.






















