நடிகர் சதீஸ் படத்தில் குக் வித் கோமாளி பிரபலம் ரித்திவிகா!
நசைச்சுவை கதாப்பாத்திரத்தில் நடிக்கும் சதீஸின் அடுத்த படத்தில் குக் வித் கோமாளி பிரபலம் ரித்திவிகா தமிழ் செல்வி ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
ரித்திகா தமிழ் செல்வி (Rithika Tamil Selvi ), விஜய் டிவி சேனலில் ஒளிப்பரப்பாகும் ‘குக் வித் கோமாளி’ என்ற பிரபல நிகழ்ச்சியின் மூலம் அனைவரின் மனதை கொள்ளை கொண்டவர். அதன் பின்னர், பிரபல சீரியலான ராஜா ராணியில் நடித்தார். தற்போது, சூப்பர் ஹிட் சீரியலான, பார்வையாளர்களை எப்போதும் விறுவிறுப்புடன் வைத்திருக்கும் சீரியல், பாக்கியலட்சுமியில் அமிர்தா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.
With all ur blessings I am happy to share My next as a lead titled #SattamEnKaiyil #சட்டம்என்கையில் @chachi_dir @Gk_0747 @sriramproducer @bharathwaj1119 @MSJonesRupert @MuthaiahG @editorkathir @vidya_pradeep01 @ajayraaj @Pavelnavagethan @Im_Rajakutty @teamaimpr
— Sathish (@actorsathish) April 9, 2022
Bless us 🙏🏻 pic.twitter.com/v7ghNM8brj
விஜய் டிவி நிகழ்ச்சிகள், சீரியல்களில் நடிப்பவர்கள், வெள்ளித்திரையில் ஜொலிப்பது அனைவரும் அறிந்ததே. நகைச்சுவை நடிகராக இருந்து முன்னணி நடிகரான சதீஷ் நடிக்கும் சட்டம் என் கையில் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிப்பதன் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமாகிறார் ரித்திகா. இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிம்பு வெளியிட்டார்.
View this post on Instagram
இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், திரைப்படத்தின் வீடியோ ஒன்றை வெளியிட்டு, அதோடு, இந்த படத்தில் நடித்திருக்கிறேன் என்பதை உங்களிடம் பகிந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். என் மீது நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் சர்ச்சி அவர்களுக்கும், படக்குழுவினருக்கும் நன்றிகள்.” என்று தெரிவித்துள்ளார்.
சண்முகம் கிரியேஷன்ஸ், சீட்ஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் க்ரிஷ் புரொடக்ஷன் ஹவுஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை 'சிக்சர்' புகழ் இயக்குனர் சாச்சி இயக்குகிறார். இப்படத்தில் வித்யா பிரதீப், பாவெல் நவகீதன் மற்றும் அஜய் ராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர், பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்ய, ஜோன்ஸ் ரூபர்ட்டின் இசையமைக்கிறார்.
மேலும், தனது ஸ்டோரியிலும் சட்டம் என் கையில் படத்தின் ஃப்ஸ்ட் லுக் போஸ்டரை ஷேர் செய்துள்ளார். அதில் ரித்திவிகா பெயர் இருப்பதை குறிப்பிட்டு மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்