மேலும் அறிய

’அந்த’ மாதிரி பாலியல் தொல்லை எனக்கு.. அதிர்ச்சி கொடுத்த குக் வித் கோமாளி புகழ் சந்தோஷ் பிரதாப்

எனது சிறு வயதில் எனக்குப் பாலியல் தொல்லை நடந்தது.. என்று கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார் குக் வித் கோமாளி சந்தோஷ் பிரதாப்.

எனது சிறு வயதில் எனக்குப் பாலியல் தொல்லை நடந்தது.. என்று  கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார் குக் வித் கோமாளி சந்தோஷ் பிரதாப்.

ஒரு யூடியூப் சேனலுக்கு அவர் அளித்தப் பேட்டியில், “சிறு வயதில் நானும் சிறு வயதில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறேன். மீ டூ பெண்களுக்கு மட்டுமே நடப்பதில்லை. ஆண்களுக்கும் பாலியல் தொல்லை நடக்கிறது. ஆண்களுக்கு நடக்கும் துயரம் பற்றியும் பேச வேண்டும். என்னை சிறு வயதில் துன்பபடுத்தியவர்களை இப்போதும் நான் பார்க்கிறேன். ஆனால் நான் அவர்களிடம் பேசுவதில்லை” எனத் தெரிவித்தார். 

விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்கள் என்றாலே பெரும் எதிர்ப்பார்ப்போடு தான் ரசிகர்கள் பார்க்க ஆரம்பிப்பார்கள். அப்படி அவர்களின் எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றிய நிகழ்ச்சிகளில் ஒன்று தான் குக் விக் கோமாளி. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிப்பார்க்கக்கூடிய இந்த நிகழ்ச்சி சீசன் 1 மற்றும் சீசன் 2 என வெற்றியைக்கண்டது. இதன் தொடர்ச்சியாக தற்போது குக் வித் கோமாளி சீசன் 3 தற்போது நடைபெற்றுவருகிறது.   இதில் வெங்கடேஷ் பட் மற்றும் தாமு நடுவர்களாகவும், ரக்ஷன் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் தொடர்ந்து கொண்டு உள்ளார்கள்.  

போட்டியின் பங்கேற்பாளர்களில், பழைய கோமாளிகளான ஷிவாங்கி, மணிமேகலை, பாலா, சக்தி, சுனிதா ஆகியோரும் புதிய கோமாளிகளாக குரேஷி, பரத், ஷீத்தல், அருண், மூக்குத்தி முருகன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். புதிய குக்குகளாக கிரேஸ் கருணாஸ், மனோ பாலா, ரோஷினி, வித்யூலேகா, சந்தோஷ் பிரதாப், அம்மு அபிராமி, ராகுல் தாத்தா, ஸ்ருதிகா மற்றும் தர்ஷன் என 10 பிரபலங்கள் கலந்து கொண்டனர். குக் விக் கோமாளின் சீசன் 3 நிகழ்ச்சியின் முதல் போட்டியாளராக வெளியேறினார் ராகுல் தாத்தா. அடுத்ததாக இயக்குநர் மனோபாலா வெளியேறினார். இப்போது 8 குக்குகளுடன் போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

விஜய் டிவிக்கு வந்துவிட்டால் புது முகங்கள் பிரபல முகங்கள் ஆகும், சுமார் முகங்கள் சூப்பர் முகங்களாகும், சூப்பர் முகங்கள் சூப்பர் டூப்பர் முகங்கள் ஆகும். அதுதான், விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்களின் மகிமை.
சந்தோஷ் பிரதாப் இது தான் இவரின் சினிமா பெயர். இவர் அரக்கோணத்தைச் சேர்ந்தவர். அப்பா, அம்மா, அக்கா என சிறிய குடும்பம். பி டெக் படித்த இவர் துபாயில் வெஸல் ஆபரேட்டர் பணியில் இருந்தார். இருந்தாலும் சிறு வயதிலிருந்தே இவருக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்துள்ளது.


’அந்த’ மாதிரி பாலியல் தொல்லை எனக்கு.. அதிர்ச்சி கொடுத்த குக் வித் கோமாளி புகழ் சந்தோஷ் பிரதாப்

சிறு வயதிலிருந்தே பள்ளிகளில் சின்ன ஸ்டேஜ் ஷோக்களில் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளார். ஆசிரியர்களின் பாராட்டு, கமல் சார் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர். சினிமாவில் நடித்தே ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் துபாய் வேலையைவிட்டு வந்தவர். சென்னையில் சினிமா கம்பெனிகளில் ஏறி இறங்கினார். கல்லூரி நாட்களில் மாடலிங் செய்த அனுபவத்தையும், கல்லூரி கலாச்சார நிகழ்ச்சிகளில் பட்டையைக் கிளப்பிய அனுபவத்தையும் கொண்டு கோலிவுட்டில் வாய்ப்பு தேடியுள்ளார். இவர் ஆரம்பத்தில் இருந்தே ஃபிட்நஸ் ஃப்ரீக்காகவே இருந்துள்ளார். கோலிவுட்டில் வாய்ப்புக்காக சுற்றித் திரிந்த இவர் இயக்குநர் பார்த்திபன் கண்களில் பட்டார். கதை திரைக்கதை வசனம் இயக்கம் பட வாய்ப்பை பார்த்திபன் கொடுத்தார். 2014ல் வெளியான இந்தப் படம் இவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. விஜய் டிவி விருது நிகழ்ச்சியில் சிறந்த அறிமுக நடிகருக்கான நாமினேஷனில் இடம் பெற்றிருந்தார்.

அதன் பின்னர் தாயம், பயமா இருக்கு, மிஸ்டர் சந்திரமவுலி, பொதுநலன் கருதி, நான் அவளை சந்தித்தபோது, ஓ மை கடவுளே, இரும்பு மனிதன், என் பெயர் ஆனந்தன் ஆகிய படங்களில் நடித்தார். 2021ல் சார்ப்பட்டா பரம்பரையில் இவரது ராமன் கதாபாத்திரம் கவனம் ஈர்த்தது.

இப்போது மிஷ்கினின் பிசாசு 2 படத்திலும் நடித்து வருகிறார். ஆனந்தம் ஆரம்பம், போலீஸ் டைரி, 2.0, போன்ற வெப் சீரிஸ்களும் செய்துள்ளார். இவர் நன்றாகப் பாடுவாராம், நன்றாக சமைப்பாராம். நன்றாகப் படமும் வரைவாராம். 

இதுதாங்க நம்ம சந்தோஷ் பிரதாப்பின் புரொஃபைல்.

இதெல்லாம் விட முக்கியம் மீடூ இயக்கம் குறித்து அவர் கூறியுள்ள கருத்து. மீ டூ குறித்து இவர் கூறும்போது நானும் சிறு வயதில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறேன். மீ டூ பெண்களுக்கு மட்டுமே நடப்பதில்லை. ஆண்களுக்கும் நடக்கிறது. இதைப் பற்றியும் பேச வேண்டும். என்னை சிறு வயதில் துன்படுத்தியவர்களை இப்போதும் நான் பார்க்கிறேன். ஆனால் நான் அவர்களிடம் பேசுவதில்லை என்று கூறியிருக்கிறார்.

தலைப்பு செய்திகள்

பில்லியன் நிமிடங்களுக்கும் அதிகமான பார்வை நேரத்தைப் பதிவு செய்த Premier League
பில்லியன் நிமிடங்களுக்கும் அதிகமான பார்வை நேரத்தைப் பதிவு செய்த Premier League
‘அரசன்’ காட்சிகளை பார்த்து அசந்த சிம்பு..சந்தோஷத்தில் வெற்றிமாறனுக்கு கொடுத்த வாக்குறுதி
‘அரசன்’ காட்சிகளை பார்த்து அசந்த சிம்பு..சந்தோஷத்தில் வெற்றிமாறனுக்கு கொடுத்த வாக்குறுதி
Actress Vaishali: ப்ளீஸ்.. 200 யூனிட் இலவச மின்சாரமே வேண்டாம்.. விஜயால் மன்னிப்பு கேட்ட நடிகை!
Actress Vaishali: ப்ளீஸ்.. 200 யூனிட் இலவச மின்சாரமே வேண்டாம்.. விஜயால் மன்னிப்பு கேட்ட நடிகை!
Trisha: விஜயும் - த்ரிஷாவும் லவ் பண்ணாங்க... கொளுத்திப்போட்ட குட்டி பத்மினி.. கடுப்பான த்ரிஷா?
Trisha: விஜயும் - த்ரிஷாவும் லவ் பண்ணாங்க... கொளுத்திப்போட்ட குட்டி பத்மினி.. கடுப்பான த்ரிஷா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Holiday Special Bus : சுதந்திர தின தொடர் விடுமுறை.! வெளியூர் செல்ல சிறப்பு பேருந்து- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
சுதந்திர தின தொடர் விடுமுறை.! வெளியூர் செல்ல சிறப்பு பேருந்து- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
Maruti Suzuki SUV: 7 எஸ்யுவிக்களை நாங்க கொடுக்கிறோம்..! மாருதி அதிரடி - 7 சீட்டர், ஹைப்ரிட், EV, CNG - முழு லிஸ்ட்
7 எஸ்யுவிக்களை நாங்க கொடுக்கிறோம்..! மாருதி அதிரடி - 7 சீட்டர், ஹைப்ரிட், EV, CNG - முழு லிஸ்ட்
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Embed widget