மேலும் அறிய

‘அரசன்’ காட்சிகளை பார்த்து அசந்த சிம்பு..சந்தோஷத்தில் வெற்றிமாறனுக்கு கொடுத்த வாக்குறுதி

சிம்பு ‘அரசன்’ படத்தின் காட்சிகளை பார்த்து பாராட்டியதுடன், படத்திற்காக எப்போது அழைத்தாலும் தேதிகள் வழங்கத் தயார் என தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் TR நடித்து வரும் ‘அரசன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் சென்னையில் தொடங்கியுள்ளது. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மற்றும் படப்பிடிப்பு தொடர்பான தகவல்கள் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகின்றன.

வடசென்னை கதையுலகை மையப்படுத்தி வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் அரசன் திரைப்படம் உருவாகி வருகிறது. கலைப்புலி எஸ் தானு இப்படத்தை தயாரித்து வருகிறார். கிஷோர் , சமுத்திரகனி  , ஆன்ட்ரியா என தனுஷின் வடசென்னை படத்தில் நடித்த பெரும்பாலான நடிகர்கள் இந்த படத்திலும் நடித்து வருகிறார்கள். கூடுதலாக டூரிஸ்ட் ஃபேமிலி யோகலட்சுமி , கென் கருணாஸ் , விஜய் சேதுபதி ஆகிய புதிய  நடிகர்களும் படத்தில் இணைந்துள்ளார்கள். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

அரசன் படம் பார்த்து அசந்துபோன சிம்பு 

ஒரு சிறிய இடைவெளிக்குப் பின்  அரசன் திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.  இந்த நிலையில், ‘அரசன்’ படத்தின் சுமார் 1 மணி நேரம் 15 நிமிடங்கள் எடிட் செய்யப்பட்ட காட்சிகளை இயக்குநர் வெற்றிமாறன் சமீபத்தில் சிலம்பரசனிடம் காண்பித்ததாக கூறப்படுகிறது. படத்தின் காட்சியமைப்பு, நடிப்பு மற்றும் ஒட்டுமொத்த உருவாக்கம் ஆகியவை சிம்புவை மிகவும் கவர்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அன்லிமிடட் டேட்ஸ் 

காட்சிகளை பார்த்த பிறகு, படக்குழுவினரிடம் சிலம்பரசன் தனது முழுமையான ஆதரவை தெரிவித்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக, இனிமேல் படப்பிடிப்புக்கு எப்போது அழைத்தாலும் தான் தயாராக இருப்பதாகவும், படத்துக்காக எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் தேதிகளை ஒதுக்கித் தருவதாகவும் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதன் பின்னர் ‘அரசன்’ படத்தின் மீதான சிலம்பரசனின் ஆர்வம் மேலும் அதிகரித்துள்ளதாகவும், படப்பிடிப்பில் அவர் தீவிரமாக பங்கேற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வெற்றிமாறன் - சிலம்பரசன் கூட்டணியில் உருவாகி வரும் இப்படம் ஆரம்பத்திலிருந்தே ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே, ‘அரசன்’ படத்தின் காட்சிகள் படக்குழுவைச் சேர்ந்த மற்றவர்களையும் கவர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் காட்சிகளை பார்த்த அனிருத், அவற்றை வெகுவாக பாராட்டியதாகவும், இயக்குநர் நெல்சன் திலீப்குமாரை தொடர்புகொண்டு ‘அரசன்’ காட்சிகள் மிகவும் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஒருபுறம் வெற்றிமாறனின் இயக்கம், மறுபுறம் சிலம்பரசனின் நடிப்பு, அதனுடன் அனிருத் இசை என ‘அரசன்’ படத்தின் ஒவ்வொரு அம்சமும் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இதுவரை படக்குழுவினர் வெளியிட்ட தகவல்களை விட, படத்தை பார்த்தவர்களிடமிருந்து வெளியாகும் பாராட்டுகள் ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் தூண்டியுள்ளது.

Advertisement

தலைப்பு செய்திகள்

SOLO-வாக களமிறங்கும் ரஜினிகாந்த்...வழிவிட்டு ஒதுங்கிய தனுஷ்...
SOLO-வாக களமிறங்கும் ரஜினிகாந்த்...வழிவிட்டு ஒதுங்கிய தனுஷ்...
Rashmika Mandanna: கண்ணீரில் முடிந்த முதல் சந்திப்பு.. கத்தி விட்ட விஜய் தேவரகொண்டா.. ராஷ்மிகா பகிர்ந்த தகவல்!
Rashmika Mandanna: கண்ணீரில் முடிந்த முதல் சந்திப்பு.. கத்தி விட்ட விஜய் தேவரகொண்டா.. ராஷ்மிகா பகிர்ந்த தகவல்!
மறுவெளியீட்டில் சாதனை படைத்த சிம்பு...இந்திய அளவில் முதன்முறை...
மறுவெளியீட்டில் சாதனை படைத்த சிம்பு...இந்திய அளவில் முதன்முறை...
Jailer 2 Pre Release Business : ரிலீஸ் முன்பே இத்தனை கோடியா! எகிறிய ஜெயிலர் 2 வியாபாரம்
Jailer 2 Pre Release Business : ரிலீஸ் முன்பே இத்தனை கோடியா! எகிறிய ஜெயிலர் 2 வியாபாரம்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!
திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்
VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
Hyundai Offer: ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
Embed widget