மேலும் அறிய

Maruti Suzuki SUV: 7 எஸ்யுவிக்களை நாங்க கொடுக்கிறோம்..! மாருதி அதிரடி - 7 சீட்டர், ஹைப்ரிட், EV, CNG - முழு லிஸ்ட்

Maruti Suzuki Upcoming SUV: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அடுத்தடுத்து 7 எஸ்யுவி கார் மாடல்களை அறிமுகப்படுத்த உள்ளதாக மாருதி சுசூகி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

Maruti Suzuki Upcoming SUV: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மாருதி அறிமுகப்படுத்த உள்ள  புதிய எஸ்யுவி கார் மாடல்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

7 புதிய எஸ்யுவிக்கள் - மாருதி அதிரடி

இந்திய ஆட்டோமொபைல் சந்தையின் மிகப்பெரிய கார் உற்பத்தியாளரும், விற்பனையாளருமான மாருதி சுசூகி தனது எஸ்யுவி போர்ட்ஃபோலியோவை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக அடுத்த 5 ஆண்டுகளில் 7 புதிய எஸ்யுவிக்களை களமிறக்க உள்ளதாம். வரவிருக்கும் லைன் - அப்களானது  பெட்ரோல், சிஎன்ஜி, பெட்ரோல், ஹைப்ரிட் மின்சாரம், ஃப்ளெக்ஸ் ஃப்யூயல் போன்ற பலதரப்பட்ட பவர்ட்ரெயின் ஆப்ஷன்களை கொண்ட, முற்றிலும் புதிய மாடல்கள் மற்றும் ஃபேஸாலிஃப்ட் எஸ்யுவிக்களாக இருக்குமாம். இந்தோ ஜப்பானிய வாகன ப்ராண்டாப்னது, பல்வேறு புதிய மாடல்கள், பல்திறன் கொண்ட உத்தி, டிஜிட்டல் சந்தைப்படுத்தல் ஆகியவற்றில் மேம்படுத்தப்பட்ட கவனம் செலுத்தி ஆண்டுக்கு 30 லட்சம் யூனிட் விற்பனையை இலக்காக நிர்ணயித்துள்ளது.

மாருதியின் விரிவாக்க திட்டம்

மாருதி சுசூகி நிறுவனம் இந்தியா முழுவதும் தனது உற்பத்தித் திறன், கிடங்குகள் மற்றும் உதிரிபாகங்கள் விநியோக மையங்களை விரிவுபடுத்த உள்ளது. 2026-2027 நிதியாண்டில் ஹரியானாவின் கார்கோடா மற்றும் குஜராத்தின் ஹன்சல்பூர் ஆகிய இடங்களில் உள்ள தனது ஆலைகளை விரிவாக்குவதன் மூலம், தனது உற்பத்தித் திறனை கூடுதலாக 5 லட்சம் யூனிட்களுக்கு அதிகரிக்க உள்ளது. இதனிடையே,  குஜராத்தின் சனந்தில் உள்ள கோராஜ் தொழிற்பேட்டையில், ஆண்டுக்கு ஒரு மில்லியன் யூனிட்கள் உற்பத்தித் திறன் கொண்ட ஒரு புதிய கிரீன்ஃபீல்டு உற்பத்தி ஆலையையும் அமைத்து வருகிறது.

மாருதியின் திட்டத்தில் உள்ள மாடல்கள் என்ன?

மாருதி சுசூகி நிறுவனம், அடுத்தடுத்து சந்தைப்படுத்த உள்ள எஸ்யுவிகளின் பெயர்களையும் விவரங்களையும் இன்னும் வெளியிடவில்லை. அதேநேரம் இந்த வரிசையில் ஒரு புதிய சப்-4 மீட்டர் எஸ்யுவி, க்ராண்ட் விட்டாராவை அடிப்படையாகக் கொண்ட 7 சீட்டர் கொண்ட எஸ்யயுவி, க்ராண்ட் விட்டாரா ஃபேஸ்லிஃப்ட், ஃப்ராங்க்ஸ் ஃபேஸ்லிஃப்ட் மற்றும் ஜிம்னி ஃபேஸ்லிஃப்ட் ஆகியவை இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கிய அப்க்ரேடாக, மாருதி சுசூகி நிறுவனம், முற்றிலும் புதிதாக, உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஒரு வலிமையான ஹைப்ரிட் பவர்ட்ரெய்னை (HEV என்ற கோட்நேம்) அறிமுகப்படுத்த உள்ளது. இது 2027-ஆம் ஆண்டில் ஃப்ராங்க்ஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்: Indias Cheapest Car: அது எனக்கு தான்..! நாட்டின் மலிவான காரை மீண்டும் களமிறக்கும் டாடா - மின்சார எடிஷன், ரேஞ்ச்

அறிக்கைகளின்படி, புதிய மாருதி ஸ்ட்ராங் ஹைப்ரிட் சிஸ்டம் 1.2-லிட்டர் பெட்ரோல் இன்ஜினை அடிப்படையாகக் கொண்டிருக்கும் என்றும், இது ஒரு லிட்டருக்கு 35 கி.மீ. வரை எரிபொருள் சிக்கனத்தை வழங்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது. இது ஒரு சீரிஸ் ஹைப்ரிட் அமைப்பாக இருக்கும் என்றும், தற்போது கிராண்ட் விட்டாரா, விக்டோரிஸ் மற்றும் இன்விக்டோ கார்களில் பயன்படுத்தப்படும் டொயோட்டாவின் அட்கின்சன் ஸ்ட்ராங் ஹைப்ரிட் பவர்டிரெய்னை விட இது குறிப்பிடத்தக்க அளவில் அதிக சிக்கனமாகவும் திறமையாகவும் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

மாருதி சுசுகி, டாடா பஞ்ச் மற்றும் ஹூண்டாய் எக்ஸ்டர் கார்களுக்குப் போட்டியாக, 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட புதிய எஸ்யூவி (Y43 என்ற குறியீட்டுப் பெயர்) ஒன்றையும் உருவாக்கி வருகிறது. இது இக்னிஸ் காருக்கு மாற்றாக அறிமுகப்படுத்தப்படும். வரவிருக்கும் இந்த மாருதி மினி-எஸ்யூவியில், ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் கார்களில் இருந்து பெறப்பட்ட 1.2 லிட்டர், மூன்று சிலிண்டர் Z12E பெட்ரோல் இன்ஜின் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சிஎன்ஜி பவர்டிரெய்ன் தேர்வுடனும் வழங்கப்படலாம்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

Hero Xoom on EMI: சல்ல்லுனு பறக்க ரூ.78,000-த்தில் ஹீரோ ஜூம் ஸ்கூட்டர்.! இத லோன்ல வாங்க முன்பணம், EMI விவரங்கள் இதோ
சல்ல்லுனு பறக்க ரூ.78,000-த்தில் ஹீரோ ஜூம் ஸ்கூட்டர்.! இத லோன்ல வாங்க முன்பணம், EMI விவரங்கள் இதோ
Hero Bikes Under Rs.1 Lakh: ஹீரோன்னா ஹீரோ தான்.! ரூ.1 லட்சத்திற்கும் குறைவாக 17 வண்டிகளா.?! பைக், ஸ்கூட்டர் லிஸ்ட்ட பாருங்க
ஹீரோன்னா ஹீரோ தான்.! ரூ.1 லட்சத்திற்கும் குறைவாக 17 வண்டிகளா.?! பைக், ஸ்கூட்டர் லிஸ்ட்ட பாருங்க
Baleno Facelift AMT Vs Manual: மாருதியின் புதிய பலேனோ ஆட்டோமேட்டிக்கா.? மேனுவலா.? எந்த மாடலை வாங்குவது பெஸ்ட்.? அலசுவோம் வாங்க
மாருதியின் புதிய பலேனோ ஆட்டோமேட்டிக்கா.? மேனுவலா.? எந்த மாடலை வாங்குவது பெஸ்ட்.? அலசுவோம் வாங்க
ரூபாய் 1.80 லட்சம் தள்ளுபடி.. ஆஃபர்னா இதான் ஆஃபர்! பட்ஜெட் விலையில் Renault கார்களை தள்ளிட்டு போங்க!
ரூபாய் 1.80 லட்சம் தள்ளுபடி.. ஆஃபர்னா இதான் ஆஃபர்! பட்ஜெட் விலையில் Renault கார்களை தள்ளிட்டு போங்க!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay Ajith:
Vijay Ajith: "மகிழ்ச்சியா இருக்கு.." லண்டனில் நடக்கப்போகும் விஜய் - அஜித் சந்திப்பு! ஏகே என்ன சொன்னார் தெரியுமா?
Modi Pezeshkian Meet: போருக்கு நடுவே இந்தியா வந்த ஈரான் அதிபர் பெஷெஷ்கியன்; பிரதமர் மோடியுடன் விவாதித்தது என்ன.?
போருக்கு நடுவே இந்தியா வந்த ஈரான் அதிபர் பெஷெஷ்கியன்; பிரதமர் மோடியுடன் விவாதித்தது என்ன.?
Xi Jinping India Visit: 7 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா வரும் ஷி ஜின்பிங்; பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை; எகிறும் எதிர்பார்ப்பு
7 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா வரும் ஷி ஜின்பிங்; பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை; எகிறும் எதிர்பார்ப்பு
Thirumavalavan: திமுக-வை திடீரென திட்டித் தீர்த்த திருமா.. ஓ.. இதுதான் காரணமா?
Thirumavalavan: திமுக-வை திடீரென திட்டித் தீர்த்த திருமா.. ஓ.. இதுதான் காரணமா?
Omni Bus Ticket: யார் ஆட்சிக்கு வந்தாலும் இவங்க அநியாயம் நிக்காது போல? ஆம்னி பஸ்களின் தொடரும் கட்டண கொள்ளை!
Omni Bus Ticket: யார் ஆட்சிக்கு வந்தாலும் இவங்க அநியாயம் நிக்காது போல? ஆம்னி பஸ்களின் தொடரும் கட்டண கொள்ளை!
Suriya: நெட்ஃப்ளிக்ஸ் இதெல்லாம் நியாயமா? கிளாரிட்டியே இல்லாம ஒளிபரப்பாகிய விஸ்வநாத் அன் சன்ஸ்!
Suriya: நெட்ஃப்ளிக்ஸ் இதெல்லாம் நியாயமா? கிளாரிட்டியே இல்லாம ஒளிபரப்பாகிய விஸ்வநாத் அன் சன்ஸ்!
Modi Putin Meet: கைகுலுக்கி, கட்டித்தழுவி.! பிரதமர் மோடியும் விளாடிமிர் புதினும் சந்திப்பு; ஆலோசித்தது என்ன.?
கைகுலுக்கி, கட்டித்தழுவி.! பிரதமர் மோடியும் விளாடிமிர் புதினும் சந்திப்பு; ஆலோசித்தது என்ன.?
Gold Silver Rate Sep.11th: ஐயோ, போச்சே.! காலையில மகிழ்ச்சி கொடுத்து மாலையில கவுத்துவிட்ட தங்கம்.! இவ்ளோ கூடிடுச்சே.!
ஐயோ, போச்சே.! காலையில மகிழ்ச்சி கொடுத்து மாலையில கவுத்துவிட்ட தங்கம்.! இவ்ளோ கூடிடுச்சே.!
Embed widget