Chinni Jayanth : “பழைய விக்ரம் பாட்டு பாடிக்கொண்டே தியேட்டரில் டிக்கெட் விற்றேன்” - சின்னி ஜெயந்த் சொன்ன சீக்ரெட்
"ஈரமான ரோஜாவில் உள்ள அந்தக் காட்சி சத்யம் திரையரங்கில் படமாக்கப்பட்டது. மேலும், ’விக்ரம் 1’ படத்தில் நான் நடித்துள்ளேன். அதற்காக நான் பெருமைப்படுகிறேன்" - சின்னி ஜெயந்த்
கடந்த ஜூன் 3ஆம் தேதி கமல், விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில், சூர்யா நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் பிரம்மாண்ட வெற்றி பெற்றுள்ளது.
விக்ரம் ரெஃபரன்ஸ்!
இந்நிலையில், படம் வெளிவருவதற்கு சில நாள்களுக்கு முன், பிரபல நகைச்சுவை நடிகர் சின்னி ஜெயந்த் விக்ரம் பட பாடலை பாடியபடி, அப்படத்தின் டிக்கெட்டுகளை விற்கும்படியான வீடியோ ஒன்று இணையத்தில் ட்ரெண்ட் ஆனது.
குறிப்பாக விக்ரம் பட ரிலீஸுக்கு முந்தைய தேதிகளில் இந்த வீடியோ பலரது வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைதள ஸ்டேட்டஸ்களை ஆக்கிரமித்து ட்ரெண்ட் ஆனது.
80களின் வெற்றிப் படமான ’ஈரமான ரோஜாவே’ எனும் படத்தில் இடம்பெற்றிருந்த இக்காட்சி குறித்த சுவாரஸ்யத் தகவல்கள் குறித்து தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு சின்னி ஜெயந்த் பேட்டியளித்துள்ளார்.
Ha ha ha ... But Chinni Jayanth did it way bank though from eeramana rojave pic.twitter.com/psiQqWTkMR
— Jagan krishnan (@jaggenius) October 30, 2019
”ஈரமான ரோஜாவில் உள்ள அந்தக் காட்சி சத்யம் திரையரங்கில் படமாக்கப்பட்டது. மேலும், ’விக்ரம் 1’ படத்தில் நான் நடித்துள்ளேன். ஒரு சிறிய காட்சியில் நான் நடித்தேன். அதற்காக நான் பெருமைப்படுகிறேன்.
கமல் குறித்து பெருமிதம்
இப்போது ’விக்ரம் 2’ வந்துள்ளது. அந்தக் காலத்தில் பெரிய தொழில்நுப்பங்கள் இல்லாத போதே கமல் பிரமாதப்படுத்தி இருந்தார். ராஜசேகர் இயக்கம். இப்போது விக்ரம் 2 பான் இந்தியா படமாக வந்திருப்பது பெருமையாக உள்ளது. தமிழ் படங்கள் எங்கே எனத் தேடப்பட்டு வந்த சூழலில், தமிழ் ஸ்டாண்டர்ட் மற்றும் ஸ்டெடி என தற்போது கமல் காண்பித்துள்ளார்” என சின்னி ஜெய்ந்த் தெரிவித்துள்ளார்.
1980-90 களில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்த சின்னி ஜெயந்த், ரஜினி, கமல் உள்ளிட்ட பல நடிகர்களுடனும் நடித்துள்ளார்.
சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் இயங்கி வரும் சின்னி ஜெயந்த், ரஜினிகாந்த் - மகேந்திரன் கூட்டணியில் வெளியான 'கை கொடுக்கும் கை’ படத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள சின்னி ஜெயந்த் பல குரல் ஆராய்ச்சிக்காகவும் நடிப்புத் திறமைக்காகவும் பல விருதுகளைக் குவித்துள்ளார்.
முன்னதாக சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன் சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றிபெற்று, தூத்துக்குடி மாவட்டத்தில் பயிற்சி உதவி ஆட்சியராக நியமிக்கப்பட்டபோது திரையுலகினர், சின்னி ஜெயந்தின் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் அவரை வாழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்