19 ஆண்டுகளுக்கு பின் சுந்தர்.சி - யுவன் கூட்டணி: ‛காஃபி வித் காதல்’ இரண்டாவது பாடல் இன்று!
Coffee with Kadhal : இன்று "காஃபி வித் காதல்" படத்தின் இரண்டாம் பாடலான "நாளைய பொழுது..."எனும் பாடல் வெளியாகவுள்ளது. இந்த அறிவிப்பை நடிகர் ஜீவா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
சுந்தர். சி இயக்கத்தில் உருவாகியுள்ள மல்டி ஸ்டாரர் திரைப்படம் "காஃபி வித் காதல்". நடிகர்கள் ஜெய், ஜீவா மற்றும் ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளியாக இருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியானது. இப்படத்தில் நடிக்கும் முக்கிய கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தும் வகையில் அப்போஸ்டர் இருந்தது குறிப்பிடத்தக்கது.
படத்தின் கதாபாத்திரங்கள் :
"காஃபி வித் காதல்" படத்தில் டிடி, மாளவிகா சர்மா, ரைசா வில்சன், அமிர்தா, ஐஸ்வர்யா தத்தா, சம்யுக்தா, யோகி பாபு மற்றும் ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். உடன் பிறந்தவர்கள் நான்கு பேரை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருக்கும் ஒரு குடும்ப கதை.
நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும்:
பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் மற்றும் குஷ்பூ சுந்தரின் அவ்னி சினிமாக்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் யுவன் ஷங்கர் ராஜா. "வின்னர்" படத்திற்கு பிறகு சுமார் 19 ஆண்டுகளுக்கு பின்னர் சுந்தர்.சி - யுவன் ஜோடி மறுபடியும் இப்படம் மூலம் இணைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சூப்பர் ஹிட் பாடலின் ரீமாஸ்டர் :
இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 1990ல் வெளியான நடிகர் கமல்ஹாசனின் "மைக்கேல் மதன காமராஜன்" திரைப்படத்தில் சூப்பர் ஹிட் பாடலான "ரம் பம் பம்..." பாடலை ரீமாஸ்டர் செய்துள்ளார்.
செகண்ட் சிங்கள் இன்று வெளியீடு:
இந்த பாடலை தொடர்ந்து ஆகஸ்ட் 24 இன்று "காஃபி வித் காதல்" படத்தின் இரண்டாம் பாடலான "நாளைய பொழுது..."எனும் பாடல் மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது. இந்த அறிவிப்பை நடிகர் ஜீவா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
#CoffeeWithKadhal's next musical delight #NaalaiyaPozhuthu releasing at 5 pm tomorrow! 🎼😎
— Kollywood Cinema (@KollywoodCinima) August 23, 2022
A #SundarCEntertainer
A @thisisysr Musical#SundarC @khushsundar #AvniCinemax #BenzzMedia @U1Records @JiivaOfficial @Actor_Jai @Act_Srikanth @ImMalvikaSharma @Actor_Amritha pic.twitter.com/7p9CwbGqFW
குடும்ப கதை:
ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் மற்றும் திவ்யதர்ஷினி ஆகிய நான்கு உடன்பிறந்தவர்களை பற்றி திரைக்கதை அமைந்துள்ளது. இந்த படத்தில் ஜீவா IT ஊழியராகவும், ஜெய் சமையல் செஃப் கதாபாத்திரத்திலும், ஸ்ரீகாந்த் இசையமைப்பாளராகவும் நடித்திருக்கிறார்கள் என கூறப்படுகிறது.
மறுபடியும் சேரும் வெற்றி கூட்டணி:
சுந்தர். சி இயக்கத்தில் ஜீவா, ஜெய், யோகி பாபு நடிப்பில் வெளியான "கலகலப்பு 2" திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. அந்த கூட்டணி மீண்டும் இப்படம் மூலம் இணைவதால் நிச்சயம் இதும் ஒரு முழு நீள நகைச்சுவை படமாக அமையும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு.