Vijay : நெல்சன் , லோகேஷ் , அட்லீ விஜய்கிட்ட அட்வாண்டேஜ் எடுத்துகிட்டாங்க...விஜய் பற்றி லியோ ஓளிப்பதிவாளர் மனோஜ்
அட்லீ , லோகேஷ் கனகராஜ் மற்றும் நெல்சன் போன்ற இளம் இயக்குநர்களுடன் விஜய் பணியாற்றியது குறித்து லியோ பட ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார்
விஜய்
நடிகர் விஜய் தற்போது எச்.வினோத் இயக்கும் தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார். அட்லீ , நெல்சன் , நெல்சன் போன்ற இன்றைய தலைமுறை இயக்குநர்களுடன் சமீப காலத்தில் விஜய் அதிகம் பணியாற்றி வருகிறார் . மற்ற இயக்குநர்களைக் காட்டிலும் இவர்களின் இயக்கத்தில் விஜய் தனது நடிப்பிலும் நிறைய புது முயற்சிகளை எடுத்துள்ளார். இது குறித்து லியோ படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா விளக்கமாக பேசியுள்ளார். விஜய் நடித்த நண்பன் , பீஸ்ட் , லியோ அகிய படங்களுக்கு மனோஜ் பரமஹம்ஸா ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.
விஜய்கிட்ட அட்வாண்டேஜ் எடுத்துக்கிட்டாங்க
Vijay sir was initially more reserved during the filming of #Nanban with Shankar sir, however, he was more friendly and shares a special bond with directors Nelson , Lokesh, and Atlee. - @manojdft pic.twitter.com/EJ2ci3PYLG
— VTL Team (@VTLTeam) October 23, 2024
லோகேஷ் , விஜய் , அட்லீ ஆகிய மூவரும் விஜய்க்கு ஒரு தனி கெமிஸ்ட்ரி இருப்பது எனக்கு கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது. நண்பன் படத்தில் நடிக்கும்போது ஷங்கர் சாரிடம் விஜய் ரொம்ப ரிஸர்வ்டா இருந்தார். அந்த விஜய் இப்போ இல்ல. இவர்கள் மூவருடன் விஜய் சரிக்கும் சமமாக உட்கார்ந்து பேசுவார். அவர்களும் இவரை அண்ணா அண்ணா என்று தான் கூப்பிடுவார்கள். லோகேஷ் ஏற்கனவே மாஸ்டர் படம் பண்ணதால் லியோ படத்தின் முதல் நாளில் இருந்தே அவர்கள் இருவரும் ரொம்ப க்ளோஸாக பழகினார்கள். நெல்சன் இரண்டாவது நாளில் இருந்தே அந்த ஐஸ் பிரேக் பண்ணிட்டாரு. இவர்கள் விஜய் சாரை ரொம்ப கம்ஃபர்டா வைத்துக் கொண்டதால் தான் விஜயும் தன்னுடைய இயல்பை மாற்றி இந்த ட்ரெண்டுக்கு தன்னை மாற்றிக்கொண்டார் என்று நினைக்கிறேன். அதனால் தான் அவரால் இவர்களின் படங்களில் நிறைய படங்களில் புதுசாக ஏதாவது முயற்சி செய்கிறார். விஜய் சார் முன்பெல்லாம் பேப்பரில் என்ன இருக்கிறதோ அதை தான் படமாக எடுக்கச் சொல்வார். ஆனால் இப்போது அவர் தன்னை நிறைய மாற்றிக் கொண்டிருக்கிறார். நான் இப்படியே தான் இருப்பேன் என்றிருந்தால் எதுவுமே புதிதாக வந்திருக்காது. இந்த இயக்குநர்களும் அந்த அட்வாண்டேஜ் எடுத்துக்கொண்டு ஒரு சீன் நன்றாக இல்லை என்றால் அதையே புதுசாக மாற்றி வேற சீன் சொல்வது போன்ற விஷயங்களை செய்தார்கள். விஜய் சாருக்கும் இந்த மூன்று பேருக்கும் இடையில் ஒரு ஸ்பெஷல் பாண்ட் இருக்கிறது. " என மனோஜ் பரமஹம்சா தெரிவித்துள்ளார்