மேலும் அறிய

Producer K. Rajan | ‛தமிழ் தயாரிப்பாளர் தவிச்சுப்போய் நிக்குறான்.. தெலுங்கு படத்திற்கு இத்தனை தியேட்டரா?’ -கொதிக்கும் கே.ராஜன்!

‛‛சம்பளம் அதிகம் கிடைக்கும் என்பதற்காக தெலுங்கிற்கு போகக்கூடாது. அங்கு வாங்கும் சம்பளத்தை, மீண்டும் இங்கு வந்து தமிழ் தயாரிப்பாளரிடம் கேட்கக்கூடாது’’ -கே.ராஜன்

அடிக்கடி பரபரப்பான சினிமான உண்மைகளை போட்டு உடைப்பவர். தயாரிப்பாளர், நடிகர் கே.ராஜன், சமீபத்திய லாக்டவுன், அதனால் தள்ளிப்போகும் சினிமா ரிலீஸ் பற்றி பேசியுள்ளார். இணையத்திற்கு அவர் அளித்த பேட்டியின் ஒரு பகுதியை சுவாஸ்யமாக வழங்குகிறோம். இதோ அவரது பேட்டி:

Producer K. Rajan | ‛தமிழ் தயாரிப்பாளர் தவிச்சுப்போய் நிக்குறான்.. தெலுங்கு படத்திற்கு இத்தனை தியேட்டரா?’ -கொதிக்கும் கே.ராஜன்!
தயாரிப்பாளர் கே.ராஜன்

‛‛புத்தாண்டு நன்றாக தான் ஆரம்பித்தது. ஒமிக்ரான் கொஞ்சம் பயம் கொடுக்கிறது. நோயை தடுக்க, அரசு ஜாக்கிரதையா இருக்கனும். வலிமை ரசிகர்களுக்கான படம், நன்றாக இருந்தால் குடும்பங்கள் வருவார்கள். நல்லா இருப்பதாக தான் கேள்விப்பட்டேன். டாக்டர் தியேட்டரா, ஓடிடியா என மாறி மாறி வந்தது. தியேட்டர் தான், என சிவகார்த்திகேயன் உறுதியாக இருந்தார். தியேட்டரில் வந்தது, நல்ல வசூல். பெரிய வரவேற்பு. இரண்டு அல்லது மூன்று வாரம் தியேட்டர்; அதன் பின் ஓடிடி நல்ல வருவாய். 

வலிமை ஓடிடியில் வருவதை அஜித் ஒத்துக் கொள்ள மாட்டார். நான்கு வாரம் என்பதை இரண்டு வாரமாக குறைத்து, அதன் பின் வேண்டுமானால் ஓடிடியில் கொடுக்கலாம். பெரிய படங்களுக்கு விற்பனையில் பிரச்சனை இல்லை . சின்னப்படங்களுக்கு தான் பிரச்சனை. தியேட்டர் கிடைக்க மாட்டேங்குது. தமிழ் படங்கள் இங்கு திண்டாடுகின்றன. தெலுங்கு படம் ஆர்.ஆர்.ஆர்.,க்கு தியேட்டரை அள்ளிக் கொடுக்குறாங்க. தியேட்டர்களுக்கு கலெக்ஷன் முக்கியம் தான். ஆனால், வீடு வாசலை விற்று படம் எடுத்த தமிழ் தயாரிப்பாளர்களுக்கு யார் தியேட்டர் தருவது? தமிழ் படங்களுக்கு தியேட்டர் இல்லாமல், ஸ்பைடர்மேனுக்கு தியேட்டர் கிடைக்குது. இதையெல்லாம் அரசு தான் சரிபண்ணனும். 

Producer K. Rajan | ‛தமிழ் தயாரிப்பாளர் தவிச்சுப்போய் நிக்குறான்.. தெலுங்கு படத்திற்கு இத்தனை தியேட்டரா?’ -கொதிக்கும் கே.ராஜன்!
அஜித், சிவகார்த்திகேயன், விஜய்

திரைப்படத்திற்கு சம்மந்தமே இல்லாத, ஆன்லைன் டிக்கெட் நிறுவனங்கள் பார்க்கும் லாபம் கூட தயாரிப்பாளருக்கு இல்லை. வாரம் வாரம் ஷோ முறையில் க்யூப்புக்கு பணம் கட்ட வேண்டும். ஒரு வாரத்திற்கு பணம் கட்டி, 3 நாளில் ஒரு படம் தூக்கிவிடுவார்கள். எஞ்சியுள்ள நாளுக்குரிய பணத்தை திரும்ப தருணும்ல? அப்படி திரும்ப தராத பணமே க்யூப்பில் கோடி கணக்கில் வரணும். சினிமாவில் எல்லாரும் வாழ்றாங்க, தயாரிப்பாளர் மட்டும் சாவுறான். கொரோனா காலத்தில் யார் தயாரிப்பாளருக்கு உதவி பண்ணினா? தாணு கொஞ்சம் அரிசி, பருப்பு கொடுத்தார். ரஜினி சாரிடம் பேசுனேன். அவர் நிறைய உதவி பண்ணார். வேறு யாரு உதவி பண்ணாங்க? உன்னை வளர்த்த தயாரிப்பாளரை எப்படி இருக்கான்னு நீ பார்க்க வேண்டாமா?

எஸ்.ஏ.சி இயக்குனரா இருந்தாரு, அவர் மகனை நோகாம சினிமாவுக்குள் கொண்டு வந்தார். அஜித் கஷ்டப்பட்டு தான் இந்த சினிமாக்குள்ள வந்தாரு. ரஜினி எத்தனை படியேறினார். பாலசந்தர் கண்ணில் பட்டார், ஹீரோ ஆனார். இன்று பாலசந்தர் சார் குடும்பம் கஷ்டப்படுறாங்க. போனி கபூர் பெரிய ஆள்; பைனாஸ் கிடைக்கும். ஆனால், தள்ளிப்போவது நஷ்டம் நஷ்டம் தான். அது அஜித்திற்கு தெரிந்திருக்கும்; அதனால் தான் அந்த தயாரிப்பாளரை காப்பாற்ற, அடுத்த படத்தையும் அதே போனிகபூருக்கு கொடுத்துள்ளார். மற்ற ஹீரோக்கள் இங்கே என்ன செய்கிறீர்கள்? இங்கு தயாரிப்பாளர் நினைத்த பணம் தரவில்லையென்றால், தெலுங்கு தயாரிப்பாளரிடம் போகும் ஹீரோக்கள் உள்ளனர். 

Producer K. Rajan | ‛தமிழ் தயாரிப்பாளர் தவிச்சுப்போய் நிக்குறான்.. தெலுங்கு படத்திற்கு இத்தனை தியேட்டரா?’ -கொதிக்கும் கே.ராஜன்!
ஆர்.ஆர்.ஆர்., விழாவில் வெளியீட்டாளர் உதயநிதி-இயக்குனர் ராஜமெளலி

தெலுங்கு மாநிலத்தை உலகம் எல்லாம் கொண்டு சேர்த்தவர் ராஜமெளலி. ஈ படத்திலேயே அவர் சாதித்துவிட்டார். பாகுபலிக்கு முன்பே அவர் தன்னை நிரூபித்த இயக்குனர். ஆர்ஆர்ஆர் பெரிய அளவில் பிசினஸ் ஆகும். உலக மார்க்கெட் அந்த படத்திற்கு கிடைக்கும். அதனால், தள்ளிப்போவது பாதிப்பை ஏற்படுத்தியது. தயாரிப்பாளர் சங்கத்தை சீரழித்த விஷால், அண்ணாத்த படத்தின் போது எனிமி படத்தை வெளியிட்டு அந்த படத்தை ஒன்னும் இல்லாமல் செய்துவிட்டார். விஷால் இந்த எல்லாத்தையும் விட்டு விட்டு, நடிகராக மட்டும் கவனம் செலுத்த வேண்டும். விஷாலின் செயல் மீது தான் எனக்கு வருத்தம், அவர் மீது இல்லை. 

சிவகார்த்திகேயன் தெலுங்கு படம் பண்ணுவதால் தப்பில்லை. ஆனால், இங்குள்ள தயாரிப்பாளர்களுக்கும் தேதி தர வேண்டும். அந்த வகையில் வருத்தம்தான். அதே நேரத்தில் இங்கிருந்து வேறு மொழிக்கு நம்ம நடிகர்கள் போவது பெருமையானது தான். 5 கோடி வாங்கின நடிகர்களை 20 கோடி கொடுத்து ஏற்றி விட்டு சீரழித்தது கார்ப்பரேட் நிறுவனங்கள் தான். சம்பளம் அதிகம் கிடைக்கும் என்பதற்காக தெலுங்கிற்கு போகக்கூடாது. அங்கு வாங்கும் சம்பளத்தை, மீண்டும் இங்கு வந்து தமிழ் தயாரிப்பாளரிடம் கேட்கக்கூடாது. தெலுங்கு சினிமாத்துறை செழிப்பா இருக்கு. தமிழ் சினிமா இங்கு மோசமா உள்ளது,’’ என்றார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!
”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!
”அதிமுக கூட்டத்தில் அடிதடி” முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே மோதல்..!
”அதிமுக கூட்டத்தில் அடிதடி” முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே மோதல்..!
”ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை; பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” - கடுப்பான முதல்வர் ஸ்டாலின் 
”ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை; பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” - கடுப்பான முதல்வர் ஸ்டாலின் 
”தலைமைக்கு நீங்க ஆலோசனை சொல்லாதீங்க” அதிமுக கூட்டத்தில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன்..!
”தலைமைக்கு நீங்க ஆலோசனை சொல்லாதீங்க” அதிமுக கூட்டத்தில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kongu Eswaran on Aadhav Arjuna : ’’ஜாக்கிரதை திருமா!ஆதவ்-ஆல் விசிக உடையும்’’எச்சரிக்கும்  ஈஸ்வரன்Ravichandran Ashwin on CSK : ’’வாழ்க்கை ஒரு வட்டம் மீண்டும் மஞ்சள் ஜெர்சி!’’உணர்ச்சிவசப்பட்ட அஸ்வின்IPL Auction 2025 | மீண்டும் இந்திரன் சந்திரன் Combo!CSK வில் RRR கேங்!தோனியின் மாஸ் ப்ளான் | AshwinIPL Auction 2025 | ராகுலின் STATS தெரியுமா?கோட்டைவிட்ட RCB - CSK..தட்டி தூக்கிய டெல்லி | KL Rahul

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!
”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!
”அதிமுக கூட்டத்தில் அடிதடி” முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே மோதல்..!
”அதிமுக கூட்டத்தில் அடிதடி” முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே மோதல்..!
”ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை; பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” - கடுப்பான முதல்வர் ஸ்டாலின் 
”ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை; பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” - கடுப்பான முதல்வர் ஸ்டாலின் 
”தலைமைக்கு நீங்க ஆலோசனை சொல்லாதீங்க” அதிமுக கூட்டத்தில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன்..!
”தலைமைக்கு நீங்க ஆலோசனை சொல்லாதீங்க” அதிமுக கூட்டத்தில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன்..!
TNPSC: தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை- ’’இதையெல்லாம் செய்தால் விடைத்தாள் செல்லாதது ஆக்கப்படும்’’
TNPSC: தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை- ’’இதையெல்லாம் செய்தால் விடைத்தாள் செல்லாதது ஆக்கப்படும்’’
TRUST Exam: பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை: ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!
TRUST Exam: பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை: ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!
TVK Vijay: பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறி: அரசுக்கு ஐடியா கொடுக்கும் தவெக தலைவர் விஜய் 
TVK Vijay: பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறி: அரசுக்கு ஐடியா கொடுக்கும் தவெக தலைவர் விஜய் 
”நாடாளுமன்றத்திற்கு உள்ளே செல்லும் முன் மோடி செய்த சம்பவம்” அதிர்ச்சியில் எதிர்க்கட்சிகள்..!
”நாடாளுமன்றத்திற்கு உள்ளே செல்லும் முன் மோடி செய்த சம்பவம்” அதிர்ச்சியில் எதிர்க்கட்சிகள்..!
Embed widget