Cinema News Today LIVE : எப்படி இருக்கு பகாசுரனின் முதல் பாதி..படம் பார்த்தவர்கள் கூறுவது என்ன?
Cinema News Today LIVE Updates, 16 February : நாளை தனுஷின் வாத்தியும், பகாசுரனும் வெளியாகவுள்ள நிலையில், அந்த இரு படங்கள் பற்றியும் மற்ற சினிமா தகவல்கள் குறித்த அப்டேட் பற்றியும் இங்கு காணலாம்.
LIVE
Background
இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள பகாசூரன் படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது.
பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் படங்களை தொடர்ந்து மோகன் ஜி அடுத்ததாக பகாசூரன் என்ற படத்தை இயக்கியுள்ளார்.இந்த படத்தில் நடிகர்கள் செல்வராகவன், ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி ஆகியோர் முதன்மை கேரக்டரில் நடித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் ராதாரவி, தயாரிப்பாளர் கே.ராஜன், ராம்ஸ், சரவணன் சுப்பையா, தேவதர்ஷினி ஆகியோரும் பகாசூரனில் இணைந்துள்ளனர்.
சாம் சி.எஸ். இசையமைத்துள்ள இப்படம் நாளை மறுநாள் (பிப்ரவரி 17) வெளியாகிறது. இதேநாளில் நடிகர் தனுஷ் நடித்துள்ள வாத்தி படம் வெளியாகிறது. ஒரே நாளில் அண்ணன் செல்வராகவன் - தம்பி தனுஷ் படங்கள் மோதுவது பெரும் எதிர்பாரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் தனுஷ் படத்துக்கு போட்டியாக பகாசூரன் வெளியாகிறது என்ற தகவலையும் மோகன் ஜி மறுத்தார். முன்னதாக நேர்காணல் ஒன்றில் பகாசூரன் படத்தின் ட்ரெய்லர் கடந்த டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி வெளியானது. தொடர்ந்து பல ரிலீஸ் தேதிகள் முடிவு செய்யப்பட்டு தற்போது பிப்ரவரி 17 ஆம் தேதி வெளியாகவுள்ளது என மோகன் ஜி கூறியிருந்தார்.
தமிழ்நாடு முழுக்க உள்ள மசாஜ், ஸ்பா போன்றவற்றில் வேலை செய்யும் பெண்கள், அந்த தொழிலுக்குள் எப்படி வருகிறார்கள்?, ஆன்லைன் பாலியல் மோசடிகள் ஆகியவற்றை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள பகாசூரன் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தான் பகாசூரன் படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. செல்வராகவன் நடித்திருப்பது பெரிய பலம் என்பதால் பலரும் இப்படத்தை பார்க்க ஆர்வமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Bakasuran : எப்படி இருக்கு பகாசுரனின் முதல் பாதி?
செல்வராகன் நடித்த பகாசுரனின் முதல் பாகம், மிகவும் நீளமாக உள்ளது. செல்வராகவனின் நடிப்பு கொஞ்சம் சுமாராகவே உள்ளது. இருப்பினும், பகாசுரன், போர் அடிக்காத கதையை கொண்டுள்ளது.
மலேசியா விமானம் பற்றிய ஆவணப்படத்தை ரிலீஸ் செய்யவிருக்கும் ஓடிடி தளம்
மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் MH370 மர்மமான முறையில் காணாமல் போனது குறித்த ஆவணப்படத்தை நெட்ஃபிக்ஸ் வெளியிட உள்ளது.
மலேசியா விமானம் பற்றிய ஆவணப்படத்தை ரிலீஸ் செய்யவிருக்கும் ஓடிடி தளம்
மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் MH370 மர்மமான முறையில் காணாமல் போனது குறித்த ஆவணப்படத்தை நெட்ஃபிக்ஸ் வெளியிட உள்ளது.
AdiPurush : ராம நவமி அன்று வெளியாகுமா ஆதிபுருஷின் ட்ரெய்லர்..?
பிரபாஸ் நடிப்பில் வெளியாகும் இதிகாச கதை கொண்ட படமான, ஆதிபுருஷின் ட்ரெய்லர், வரும் ராம நவமி (மார்ச் 30) அன்று வெளியிட அப்படத்தின் குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர்.
MS Dhoni - Yogi babu : யோகி பாபுவிற்கு கிரிக்கெட் பேட்டினை பரிசாக கொடுத்த தோனி!
கேப்டன் கூல் என்று அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி, யோகி பாபுவிற்கு, தனது பயிற்சியில் பயன்படுத்திய பேட்டினை பரிசாக கொடுத்துள்ளார். லெட்ஸ் கெட் மேரிட் படத்தை தோனியின் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. அப்படத்தில், நடிக்கும் யோகி பாபுவிற்கு இந்த பரிசை தோனி கொடுத்துள்ளார். இந்த பேட்டில், யோகி பாபுவிற்கு வாழ்த்துக்கள் என்று எழுதி ஆட்டோகிராப் போட்டு கொடுத்துள்ளார்.