Cinema Headlines: தக் லைஃப் முதற்கட்ட ஷூட்டிங் ஓவர்: ப்ளூ ஸ்டார் வெற்றிவிழாவில் கண்கலங்கிய சாந்தனு: சினிமா செய்திகள்!
Cinema Headlines: தமிழ் திரையுலகில் இன்று ஜனவரி 31ஆம் தேதி நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளைக் கீழே காணலாம்.
தக் லைஃப் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு: கமல் உடன் பணியாற்றிய அபிராமி, ஜோஜூ ஜார்ஜ்!
1987ஆம் ஆண்டு வெளியான நாயகன் திரைப்படத்துக்குப் பிறகு நடிகர் கமல்ஹாசன் - இயக்குநர் மணிரத்னம் இருவரும் சுமார் 36 ஆண்டுகள் கழித்து இணைந்துள்ள திரைப்படம் ‘தக் லைஃப்'. கமல்ஹாசனின் 234ஆவது திரைப்படமாக பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இப்படம் உருவாகி வருகிறது. மேலும் கமல்ஹாசனுடன் த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, துல்கர் சல்மான், கௌதம் கார்த்திக், ஜெயம் ரவி, அபிராமி, ஜோஜூ ஜார்ஜ் என மிகப்பெரும் நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் இணைந்துள்ளது. மேலும் படிக்க
ப்ளூ ஸ்டார் வெற்றி விழாவில் அப்பா பாக்கியராஜை நினைத்து கண்கலங்கிய சாந்தனு!
ப்ளூ ஸ்டார் படத்தால் தனது தந்தையின் ஆசை நிறைவேறியதாகக் கூறி நடிகர் சாந்தனு கண்ணீர் விட்டு பேசியது கேட்போரை நெகிழ்ச்சி அடையச் செய்தது. நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் சாந்தனு நடிப்பில் வெளிவந்த ‘ப்ளூ ஸ்டார்’ படம் திரைக்கு வந்து வரவேற்பைப் பெற்று வருகிறது. இயக்குநர் எஸ். ஜெயகுமார் இயக்கத்தில் உருவான ப்ளூ ஸ்டார் படத்தில் கீர்த்தி பாண்டியன், பிரித்வி ராஜன், பகவதி பெருமாள் என பலர் நடித்துள்ளனர். மேலும் படிக்க
இந்தப் படத்தில் நடிக்கும்போது தாய்மையின் வலி உணர்ந்தேன்: உணர்ச்சிவசப்பட்ட மிருணாள் தாக்கூர்!
இன்று தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக வலம் வருபவர் நடிகை மிருணாள் தாகூர். இந்தி தொலைக்காட்சியில் பிரபலமான நடிகையாக இருந்த மிருணாள் தாகூர் பாலிவுட் சினிமாவில் என்ட்ரி கொடுத்தாலும் அங்கு அவரால் பெரிய அளவில் ஜொலிக்க முடியவில்லை. அதற்குப் பிறகு தெலுங்கில் வெளியான 'சீதா ராமம்' படம் மூலம் மிருணாள் தாகூர் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகி, சீதா மஹாலட்சுமி என்றே அடையாளப்படுத்தப்படும் அளவுக்கு பிரபலமானார். மேலும் படிக்க
டெவில் முதல் சைரன் வரை... பிப்ரவரியில் வெளியாக காத்திருக்கும் படங்களின் லிஸ்ட் இதோ...
திரை ரசிகர்களுக்கு ஒவ்வொரு வாரமும் விருந்து படைக்க வரிசையாக திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. அயலான், கேப்டன் மில்லர், மிஷன் சேப்டர் 1 , மெர்ரி கிறிஸ்துமஸ், ப்ளூ ஸ்டார், சிங்கப்பூர் சலூன், தூக்குதுரை என ஏராளமான திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தின. அந்த வகையில் பிப்ரவரி 2024ல் வெளியாக திட்டமிடப்பட்டு இருக்கும் திரைப்படங்கள் குறித்த விவரங்கள் ஒரு பார்வை.. மேலும் படிக்க
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் காதல் செய்யும் விஷ்ணு விஷால்: வெளியான லால் சலாம் பாடல் மேக்கிங் வீடியோ!
ஜெயிலர்' படத்திற்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லால் சலாம்'. லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால், விக்ராந்த் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில், நடிகர் ரஜினிகாந்த் மற்றும் முன்னாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் கபில் தேவ் ஆகியோர் கேமியோ ரோலில் நடித்துள்ளனர். மேலும் படிக்க
சிறு வயது கமல்ஹாசனுடன் மடிசார் உடையில் பிரபல நடிகர்! வைரலாகும் ஃபோட்டோ! எந்தப் படம் தெரியுமா?
திரையுலகில் அவ்வப்போது நடிகர்கள் பெண் வேடமிட்டு நடிப்பது என்பது சகஜமான ஒன்றாகி விட்டது. சிவாஜி கணேசன் முதல் ரஜினி, கமல், விஜய், விக்ரம், விஷால், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், பிரஷாந்த் என டாப் ஹீரோக்கள் லிஸ்டில் இருக்கும் பெரும்பாலானவர்கள் பெண் வேடமிட்டு ஒரு படத்திலாவது நடித்து விடுவார்கள். ஒரு சில ஹீரோக்கள் பெண் வேடங்களில் படு சூப்பராக இருந்தாலும் ஒரு சிலருக்கு அது பொருத்தமாக அமைவதில்லை. மேலும் படிக்க