February release movies: டெவில் முதல் சைரன் வரை... பிப்ரவரியில் வெளியாக காத்திருக்கும் படங்களின் லிஸ்ட் இதோ...
February release movies : பிப்ரவரி மாதம் திரையரங்கில் வெளியாக இருக்கும் படங்களின் பட்டியல் இதோ
திரை ரசிகர்களுக்கு ஒவ்வொரு வாரமும் விருந்து படைக்க வரிசையாக திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. அயலான், கேப்டன் மில்லர், மிஷன் சேப்டர் 1 , மெர்ரி கிறிஸ்துமஸ், ப்ளூ ஸ்டார், சிங்கப்பூர் சலூன், தூக்குதுரை என ஏராளமான திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தின. அந்த வகையில் பிப்ரவரி 2024ல் வெளியாக திட்டமிடப்பட்டு இருக்கும் திரைப்படங்கள் குறித்த விவரங்கள் ஒரு பார்வை:
மறக்குமா நெஞ்சம் :
இயக்குநர் ராகோ யோகன்றன் இயக்கத்தில் ரக்ஷன், மலினா, தீனா மற்றும் பலர் நடித்துள்ள திரைப்படம் இப்படம் பிப்ரவரி 2ம் வெளியாக உள்ளது.
டெவில் :
ஜி.ஆர். ஆதித்யா இயக்கத்தில் விதார்த், பூர்ணா மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்துக்கு முதல் முறையாக இயக்குநர் மிஷ்கின் இசையமைத்துள்ளார். இப்படம் பிப்ரவரி 2ம் தேதி வெளியாக உள்ளது.
சிக்லெட்ஸ் :
எம். முத்து இயக்கத்தில் சாத்விக் வர்மா, ரஹீம், ஜாக் ராபின்சன், அமிர்தா ஹல்தார், நயன் கரிஷ்மா உள்ளிட்டோரின் நடிப்பில் இன்றைய இளைஞர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் இருக்கும் தலைமுறை இடைவெளியை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம் பிப்ரவரி 2ம் வெளியாக உள்ளது.
வடக்குப்பட்டி ராமசாமி :
கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம், மேகா ஆகாஷ் நடிப்பில் ஷான் ரோல்டன் இசையில் உருவாகியுள்ள இப்படத்தை பீப்பிள் மீடியா பேக்டரி தயாரித்துள்ளது. இப்படம் பிப்ரவரி 2ம் வெளியாக உள்ளது.
லால் சலாம் :
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ள திரைப்படம் 'லால் சலாம்'. கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம் பிப்ரவரி 9ம் தேதி வெளியாக உள்ளது.
லவ்வர் :
பிரபு ராம் வியாஸ் இயக்கத்தில் 'குட் நைட்' படம் மூலம் பிரபலமான நடிகை நடிகர் மணிகண்டன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லவ்வர்'. இப்படம் பிப்ரவரி 9ம் தேதி வெளியாக உள்ளது.
பிரம்மயுகம் :
ராகுல் சதாசிவன் இயக்கத்தில் மெகா ஸ்டார் மம்மூட்டி நடிப்பில் ஒய்நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள திரைப்படம் 'பிரம்மயுகம்'. ஹாரர் ஜானரில் உருவாகியுள்ள இப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் பிப்ரவரி 15ம் தேதி வெளியாக உள்ளது.
சைரன் :
ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், யோகி பாபு உள்ளிட்டோரின் நடிப்பில் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படம் பிப்ரவரி 16ம் தேதி வெளியாக உள்ளது.
தி பாய்ஸ் :
'கஜினிகாந்த்' படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குநர் பி. சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கத்தில் ஹர்ஷத், வினோத், ஷா ரா, யுவராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் ஐந்து பேச்சுலர்களின் வாழ்க்கையை சுற்றிலும் நகர்கிறது. இப்படம் பிப்ரவரி 16ம் தேதி வெளியாக உள்ளது.
வித்தைக்காரன் :
வெங்கி இயக்கத்தில் நடிகர் சதீஷ் சீரியஸ் கதாபாத்திரத்தில் க்ரைம் திரில்லர் ஜானரில் நடித்துள்ள இப்படத்தில் சிம்ரன் குப்தா, ஆனந்தராஜ், சுப்ரமணியம் சிவா, ஜான் விஜய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பிப்ரவரி 16ம் தேதி இப்படம் வெளியாக உள்ளது.
காசிமேடு கேட் :
ஒய். ராஜ்குமார் இயக்கத்தில் வேணுகோபால, யஷ்வன், சுரபி திவாரி, கிஷ்கை சவுத்ரி, ஏபிஎம்.சாய்குமார், பர்த்து, ராகம்மா ரெட்டி, கங்காதர், அனுஷா ஜெயின் உள்ளிட்டோரின் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் பிப்ரவரி 23ம் தேதி வெளியாக உள்ளது.
நினைவெல்லாம் நீயடா:
பள்ளி காதலை மையமாக வைத்து ஆதிராஜன் இயக்கத்தில் பிரஜின், மனிஷா யாதவ், ரெடின் கிங்ஸ்லி, மனோபாலா, மதுபாலா நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் பிப்ரவரி 23ம் தேதி வெளியாக உள்ளது.
ரணம் :
ஷெரீஃப் இயக்கத்தில் வைபவ், நந்திதா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ரணம். இப்படம் பிப்ரவரி 23ம் தேதி வெளியாக உள்ளது.