மேலும் அறிய

Cinema Headlines: ராமோஜி ராவுக்கு சினிமா பிரபலங்கள் அஞ்சலி.. திருமணத்தை உறுதி செய்த சுனைனா: சினிமா செய்திகள்!

Cinema Headlines: சினிமா வட்டாரத்தில் இன்று நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பைப் பார்க்கலாம்.

“எனக்கு கல்யாணம் நிச்சயம் ஆகிடுச்சு” - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சுனைனா!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் சுனைனா தனக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளதாக தன் சமூக வலைத்தளப் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 2005ல் தெலுங்கில் வெளியான குமார் vs குமாரி என்ற படம் மூலம் திரையுலகில் அறிமுகமான சுனைனா, தமிழ் சினிமாவில் காதலில் விழுந்தேன் படம் மூலம் கோலிவுட்டில் கால் பதித்தார். வம்சம், நீர்ப்பறவை, சமர், வன்மம், சில்லுக்கருப்பட்டி, லத்தி, தெறி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள சுனைனா, முன்னதாக ஒருவருடன் கைகோர்த்து இருப்பது போல புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருந்தார். இதனையடுத்து சுனைனாவுக்கு நிச்சயம் முடிந்துவிட்டதா எனப் பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில் தற்போது சுனைனா அதிகாரப்பூர்வமாக இது பற்றி அறிவித்துள்ளார்.

“கிங் மேக்கராக வரலாறு படைத்தவர்” - மறைந்த ராமோஜி ராவ் மறைவுக்கு ரஜினி புகழஞ்சலி!

பத்திரிகையாளராக தன் வேலையைத் தொடங்கி, பிற்காலத்தில் ஆந்திராவின் பெரும் தொழிலதிபராக வலம் வந்த ராமோஜி ராவ்,  இன்று அதிகாலை உடல்நலக்குறைவால் காலமானார். 87 வயதான ராமோஜி ராவ் ராமோஜி ராவ் பிலிம் சிட்டி,  ஈநாடு நியூஸ் பேப்பர், ஈ டிவி நெட்வொர்க், உஷா கிரண் மூவிஸ் மார்கதர்சி சிட் ஃபண்ட்,ரமாதேவி பப்ளிக் ஸ்கூல், பிரியா ஃபுட்ஸ், கலாஞ்சலி,ஹோட்டல் டால்பின் குரூப் ஆகியவற்றையும் நிர்வகித்து வந்தார். இந்நிலையில், “எனது வழிகாட்டியும், நலம் விரும்பியுமான ஸ்ரீ ராமோஜி ராவின் மறைவைக் கேட்டு நான் மிகவும் வருந்துகிறேன். பத்திரிகை, சினிமா, அரசியலில் சிறந்த வரலாறுகிங் மேக்கராக  படைத்தவர். அவர் என் வாழ்க்கையில் எனக்கு வழிகாட்டியாகவும் உத்வேகமாகவும் இருந்தார்” என ரஜினிகாந்த் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.

ராமராஜனை பின்னுக்குத் தள்ளிய மோகன்...ஹரா படம் பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரம்!

சில்வர் ஜூப்ளி ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்ட மோகன் நடிப்பில் நேற்று ஹரா திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. ஹரா படம் மோகனின் கம்பேக் படமாக அமையும் என ரசிகர்கள் எதிபார்த்து வந்த நிலையில் ஹரா படம் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. ஹரா படம் முதல் நாளில் ரூ.50 லட்சம் வரை வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆஃபிஸ் தரவுகளைப் பகிரும் சாக்னிக் தளம் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் மற்றொரு பிரபல 80ஸ் நடிகர் ராமராஜன் நடித்து வெளியான சாமானியன் படம் முதல் நாளில் ரூ.25 லட்சங்கள் மட்டுமே வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.

கேம் சேஞ்சர் படப்பிடிப்பு தளத்தில் ராமோஜி ராவுக்கு நடிகர் ராம் சரண், இயக்குநர் ஷங்கர் அஞ்சலி!

மறைந்த இந்தியாவின் முன்னணி ஊடகத்துறை தொழிலதிபர் ராமோஜி ராவுக்கு திரைப்பிரபலங்கள் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சினிமா உலகம் மட்டும் இன்றி ஊடக உலகத்திலும் ராமோஜி ராவின் மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், கேம் சேஞ்சர் படப்பிடிப்பு தளத்தில் ராமோஜி ராவுக்கு நடிகர் ராம் சரண், இயக்குநர் ஷங்கர் உள்ளிட்ட படக்குழுவினர் அஞ்சலி செலுத்தினர்.

ஆவேஷம் படத்தை அடுத்து சீரியஸ் ஆக்‌ஷன் கதை.. வெளியான ஃபகத் ஃபாசில் பட போஸ்டர்!

மலையாளம் தாண்டி, தமிழ், தெலுங்கு என தென்னிந்திய சினிமா உலகினரால் கொண்டாடப்படும் நடிகர் ஃபஹத் ஃபாசில் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஆவேஷம் திரைப்படம் சக்கைபோடு போட்டு 100 கோடிகளுக்கு மேல் வசூலைக் குவித்தது. இந்நிலையில், ஆவேஷம் படத்தைத் தொடர்ந்து ஃபகத் ஃபாசில் நடிக்க இருக்கும் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது . இந்தப் படத்தை ஃபகத் ஃபாசிலின் நெருங்கிய நண்பரான அமல் நீரட் இயக்கவிருக்கிறார். ஃபகத் ஃபாசில் மற்றும் குஞ்சக்கோ போபன் உள்ளிட்டவர்கள் நடிக்க இருக்கும் நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது. விரைவில் டைட்டில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget