மேலும் அறிய

Entertainment Headlines: வசூல் வேட்டையில் கல்கி! தங்கலான் ரிலீஸ் எப்போது? சினிமா செய்திகள் இன்று

Cinema Headlines: பிரபாஸ் நடித்த கல்கி படத்தின் வசூல் முதல் அஜித்தின் விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் வரை இன்று ஜூன் 30 ஆம் தேதிக்கான சினிமா செய்திகளைப் பார்க்கலாம்

வசூல் வேட்டையில் பிரபாஸின் கல்கி

பிரபாஸ் நடித்துள்ள கல்கி திரைப்படம் கடந்த ஜூன் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியது. இப்படத்தில் அமிதாப் பச்சன் , கமல்ஹாசன் , தீபிகா படூகோன் , பசுபதி , ஷோபனா , அனா பென் உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். துல்கர் சல்மான் , மிருணால் தாக்கூர் , ராஜமெளலி , ராம் கோபால் வர்மா , விஜய் தேவரகொண்டா , திஷா பதானி உள்ளிட்டவர்கள் இப்படத்தில் கெளரவ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கல்கி திரைப்படம் வெளியாகி முதல் 3 நாட்களில்  உலகளவில் ரூ 415 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு தகவல் வெளியிட்டுள்ளது.

விடாமுயற்சி ஃபர்ஸ்ட் லுக்

மகிழ் திருமேணி இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாக இருக்கிறது. த்ரிஷா , அர்ஜூன் , ரெஜினா உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் குட் பேட் அக்லி படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியானதைத் தொடர்ந்து தற்போது விடாமுயற்சி படத்தின் அப்டேட் வெளியாக இருப்பது அஜித் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை தந்துள்ளது.

தங்கலான் ரிலீஸ் தேதி

நடிகர் விக்ரம் கடைசியாக பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்ய கரிகாலனாக அசத்தியிருந்தார். இதனைத் தொடர்ந்து அவர் பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள இந்த படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி திருவொத்து, பசுபதி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள தங்கலான் படத்தின் ஷூட்டிங்கானது கர்நாடகாவில் உள்ள கோலார் தங்க வயலில் நடைபெற்ற சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

தங்கலான் படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகும் என நேர்காணல் ஒன்றில் தயாரிப்பாளர் தனஞ்சயன் உறுதி செய்துள்ளார். ஜூலையில் படத்தின் இறுதி காப்பி மற்றும் தணிக்கை சான்றிதழுக்கு அனுப்பும் பணி மேற்கொள்ளப்படும் என கூறப்படுகிறது. விரைவில் ரிலீஸ் தேதி படக்குழுவால் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பாரடைஸ் திரைப்பட விமர்சனம்

இலங்கையைச் சேர்ந்த இயக்குநர் பிரசன்னா விதனாகே இயக்கத்தில் கடந்த ஜூன் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள படம் பாரடைஸ். ரோஷன் மேத்யு மற்று தர்ஷனா ராஜேந்திரன் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். சர்வதேச திரைப்பட விழாக்களில் பரவலான கவனத்தைப் பெற்ற இப்படம் தற்போது வெகுஜன ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. பாரடைஸ் படத்தின் விமர்சனத்தைப் பார்க்கலாம்.

2022 ஆம் ஆண்டு இலங்கையில் நிதி நெருக்கடி நிலவுகிறது. அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் அரசுக்கு எதிரான போராட்டங்களை நடத்துகிறார்கள். இதே சூழலில் தான் தங்கள் ஐந்தாவது ஆண்டு திருமண தினத்தைக் கொண்டாட இலங்கை வந்துள்ளார்கள் கேசவ் (ரோஷன் மேத்யு) மற்றும் அம்ரிதா ( தர்ஷனா) . இந்த தம்பதியினருக்கு ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை சுற்றிக்காட்டுகிறார் வழிகாட்டியான ஆன்ட்ரூ. 

இதே சமயத்தில் தான் ரோஷன் இயக்கவிருக்கும் படம் ஒன்றை நெட்ஃப்ளிக்ஸ் தயாரிக்க ஒப்புக்கொள்வதாக அவனுக்கு இந்தியாவில் இருந்து தகவல் வருகிறது. இதனால் இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கிறான் கேசவ். இப்படியான சூழலில் தான் கேசவ் மற்றும் அம்ரிதா தங்கியிருந்த விடுதியில் புகுந்து அவர்களின் லேப்டாப் மற்றும் செல்ஃபோனை மர்ம நபர்கள் கொள்ளையடிக்கிறார்கள். திருட்டுப்போன தங்களது பொருட்களை காவல்துறையில் புகாரளிக்கிறார் கேசவ். அடுத்தடுத்த எதிர்பாராத சம்பவங்களால் மகிழ்ச்சியான திருமண நாள் கொண்டாட்டமாக இருக்க வேண்டிய இந்த பயணம் இந்த தம்பதியின் உறவுக்கே ஒரு அக்னிபரீட்சையாக மாறி இறுதியில் அம்ரிதாவின் கையில் இருந்து ஒரு துப்பாக்கி வெடிக்கிறது. 

முழு விமர்சனத்தை படிக்க : Paradise Movie Review: வீக்கெண்ட் கொண்டாட்டம்.. வெவ்வேறு பக்கங்களைக் கொண்ட ஒரே கதை... பாரடைஸ் திரைப்பட விமர்சனம்!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
Kanimozhi Karunanidhi : ’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
மதுரையில் 10,000 வேலைவாய்ப்புகள்.. பிரம்மாண்ட முகாம்: உடனே பதிவு செய்து பயன்பெறுங்கள்!
மதுரையில் 10,000 வேலைவாய்ப்புகள்.. பிரம்மாண்ட முகாம்: உடனே பதிவு செய்து பயன்பெறுங்கள்!
ABP Premium

வீடியோ

Kanimozhi 2026 election | தேர்தலில் கனிமொழி போட்டி? லிஸ்ட்டில் 4 தொகுதிகள்! மாநில அரசியலுக்கு RETURNS?
Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
Kanimozhi Karunanidhi : ’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
மதுரையில் 10,000 வேலைவாய்ப்புகள்.. பிரம்மாண்ட முகாம்: உடனே பதிவு செய்து பயன்பெறுங்கள்!
மதுரையில் 10,000 வேலைவாய்ப்புகள்.. பிரம்மாண்ட முகாம்: உடனே பதிவு செய்து பயன்பெறுங்கள்!
UKS: எம்கேஎஸ் கொண்டுவரும் யுகேஎஸ்; தமிழக அமைச்சரவை முக்கிய முடிவு- உங்கள் கனவுகளை நனவாக்க புதிய திட்டம்!
UKS: எம்கேஎஸ் கொண்டுவரும் யுகேஎஸ்; தமிழக அமைச்சரவை முக்கிய முடிவு- உங்கள் கனவுகளை நனவாக்க புதிய திட்டம்!
வல்லக்கோட்டை முருகன் கோவிலில் மார்கழி செவ்வாய்: திருமண வரம், செல்வ வளம் தரும் சிறப்பு தரிசனம்!
வல்லக்கோட்டை முருகன் கோவிலில் மார்கழி செவ்வாய்: திருமண வரம், செல்வ வளம் தரும் சிறப்பு தரிசனம்!
TN Weather: 5 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather: 5 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Bharat Taxi in Chennai: ஊபர், ஓலாவிற்கு நெருக்கடி; விரிவுபடுத்தப்படும் ‘பாரத் டாக்ஸி‘; சென்னைக்கும் வருகிறது; முழு விவரம்
ஊபர், ஓலாவிற்கு நெருக்கடி; விரிவுபடுத்தப்படும் ‘பாரத் டாக்ஸி‘; சென்னைக்கும் வருகிறது; முழு விவரம்
Embed widget