சியான் -60 திரைப்படத்தின் இசையமைப்பாளர் மற்றம்
சியான் -60 திரைப்படத்திற்கு அனிருத் இசைமைக்கிறார் என்று கூறப்பட்ட நிலையில், அவர் மாற்றப்பட்டு சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.
நடிகர் விக்ரம் , இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் உடன் இணைந்து தனது 60வது படத்தை நடிக்கிறார் .இன்னும் இந்த திரைப்படத்திற்கு பெயர் சூட்டப்படவில்லை . தற்காலிகமாக சியான் -60 என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது .இதில் விக்ரம் மகன் துருவ் இணைந்து நடிக்கிறார் .விக்ரம் ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார் , பாபிசிம்ஹா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் .
விக்ரமின் கோப்ரா, துருவநட்சத்திரம் , பொன்னியின் செல்வன் ஆகிய படங்களுக்கு அடுத்து இந்தப் படம் திரைக்கு வரும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கு முதலில் அனிருத் இசையமைப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அவர் மாற்றப்பட்டு அவருக்கு பதில் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அனிருத் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களில் பிஸியாக இருப்பதால் அவரால் சியான் -60 படத்தில் பணிபுரிய முடியவில்லை என்றும், எனவே இப்படத்தில் சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக பட குழுவினர் கூறியுள்ளனர்.