மேலும் அறிய

“ஆஸ்கர் விருதால் ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்படுகிறோம்” - ராஜமெளலிக்கு சிரஞ்சீவி வாழ்த்து

'நாட்டு நாட்டு' பாடல் சிறந்த பாடலுக்கான விருதையும், ‘தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்’ திரைப்படம் சிறந்த டாக்குமென்டரி குறும்படப் பிரிவிலும் ஆஸ்கர் வென்ற நிலையில் நடிகர் சிரஞ்சீவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் சிறந்த பாடலுக்கான விருதையும், ‘தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்’ திரைப்படம் சிறந்த டாக்குமென்டரி குறும்படப் பிரிவிலும் ஆஸ்கர் விருதை வென்றுள்ள நிலையில் அந்தந்த படக்குழுவினருக்கு நடிகர் சிரஞ்சீவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

விருதைக் குவித்த இந்திய படங்கள்:

உலக சினிமா கலைஞர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான ஆஸ்கர் விருதுகள். அந்த வகையில் 95-ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் டால்பி தியேட்டரில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த பாடல் , சிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள் என பல பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்டது. 

அந்த வகையில் இந்த ஆண்டு நமது இந்திய திரையுலகம் சந்தோஷ வெள்ளத்தில் மிதந்து கொண்டு இருக்கிறது என்றே சொல்ல வேண்டும் அதற்கு காரணம் இந்திய திரைப்படங்களான ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் சிறந்த பாடலுக்கான விருதையும், ‘தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்’ திரைப்படம் சிறந்த டாக்குமென்டரி குறும்படப் பிரிவிலும் ஆஸ்கர் விருதை குவித்து சாதனை படைத்துள்ளது.

சிரஞ்சீவி வாழ்த்து:

எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், ஸ்ரேயா, அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்த இப்படம் கடந்த ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் சக்கை போடு போட்டது. சர்வதேச அளவில் பாராட்டுகளையும் அங்கீகாரத்தையும் குவித்த இப்படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஏற்கனவே கோல்டன் குளோப் விருதை கைப்பற்றியதை தொடர்ந்து ஆஸ்கர் விருதுகளுக்கான நாமினேஷன் பட்டியலிலும் இடம்பெற்றது.

அந்த வகையில் நேற்று நடைபெற்ற ஆஸ்கர் விருது விழாவில் 'நாட்டு நாட்டு' பாடல் சிறந்த பாடல் என இரு பிரிவுகளின் கீழ் ஆஸ்கர் விருதை பெற்றது. பாடலாசிரியர் சந்திரபோஸ் மற்றும் இசையமைப்பாளர் கீரவாணி விருதுகளை பெற்றுக்கொண்டனர். 

இந்நிலையில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி வெளியிட்டுள்ள வாழ்த்து வீடியோவில், "ஆர்ஆர்ஆர் திரைப்படம் ஆஸ்கர் வென்ற முதல் இந்தியப் படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இது மிகவும் அற்புதமானது. இதற்காக நான் பாடலாசிரியர் சந்திரபோஸ், இசையமைப்பாளர் கீரவாணி, பாடலைப் பாடிய ராகுல் சிப்லிகுஞ்சும், காலபைரவா ஆகியோருக்கு எனது வாழ்த்துகள். நடனக் கலைஞர்கள் நடனமாடிய ராம்சரண், ஜூனியர் என்டிஆர் ஆகியருக்கும் எனது வாழ்த்துகள். ‘தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்’ திரைப்படம் சிறந்த டாக்குமென்டரி குறும்படப் பிரிவிலும் ஆஸ்கர் விருதை வென்றுள்ளதற்கு வாழ்த்துகள்.நீங்கள் அனைவரும் வரலாறு படைத்து நம் நெஞ்சங்கள் பெருமிதம் கொள்ளச் செய்துள்ளீர்கள்." என்று தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget