Lavanya Tripathi: மீண்டும் தாத்தாவாகப் போகும் சிரஞ்சீவி..! மெகா ஸ்டார் குடும்பத்துக்கு வரும் புது வாரிசு!
மெகா ஸ்டார் குடும்பத்து மருமகளும், நடிகையுமான லாவண்யா திரிபாதி கர்ப்பமாக இருக்கும் தகவலை அறிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பிறந்தவர் நடிகை லாவண்யா திரிபாதி. அதன் பிறகு உத்தரகாண்டில் உள்ள டெஹ்ராடூனில் வளர்ந்தார். ஆண்டாள ராட்சசி என்ற தெலுங்கு படம் மூலமாக சினிமாவில் அறிமுகமான லாவண்யா திரிபாதி 3ஆவது படத்திலேயே தமிழிலும் அறிமுகமானார்.
சசிகுமார் நடிப்பில் 2014ல் திரைக்கு வந்த 'பிரம்மன்' படத்தில் நடித்தார். அதன் பிறகு 3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டு தமிழ் சினிமாவில் மாயவன் என்ற படத்தில் நடித்தார். இப்போது 8 ஆண்டுகளுக்கு பிறகு, 'தணல்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில் பல தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போது, தெலுங்கு நடிகர் வருண் தேஜை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த 2023 ஆம் ஆண்டு இவர்களது திருமணம் நடைபெற்ற நிலையில் அதன் பிறகு ஓரிரு வருடங்கள் சினிமாவிலிருந்து ஒதுங்கியே இருந்தார்.
இந்த நிலையில் தான், லாவண்யா திரிபாதி கர்ப்பமாக இருப்பதாக இன்ஸ்டா பக்கத்தில் அறிவித்துள்ளார். விரைவில் இருவரும் வாழ்க்கையின் அடுத்தகட்டத்திற்கு செல்ல இருப்பதாக பதிவிட்டுள்ளனர்.
'முகுந்தா' படம் மூலாக ஹீரோவாக அறிமுகமான வருண் தேஜ், லோஃபெர், மிஸ்டெர், ஃபிடா, ஹானி, ஆபரேஷன் வாலண்டைன் என்று பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram






















