நயன்தாரா பற்றி மருத்துவர் அநாகரிகமான கமெண்ட்.... ட்விட்டரில் வறுத்தெடுத்த சின்மயி!
மருத்துவர் ஒருவர் நடிகை நயன்தாரா குறித்து பகிர்ந்த மோசமான கமெண்ட் ஒன்றை, பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கண்டனம் தெரிவித்துள்ளார்.
![நயன்தாரா பற்றி மருத்துவர் அநாகரிகமான கமெண்ட்.... ட்விட்டரில் வறுத்தெடுத்த சின்மயி! Chinmayi condemns doctor who shared crappy comment about Nayanthara wedding on social media நயன்தாரா பற்றி மருத்துவர் அநாகரிகமான கமெண்ட்.... ட்விட்டரில் வறுத்தெடுத்த சின்மயி!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/14/8d2d9496f926e9d92f9f3b2078484699_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கோலிவுட்டின் ’லேடி சூப்பர் ஸ்டார்’ எனக் கொண்டாடப்படும் நடிகை நயன்தாரா, முன்னதாக ஜூன் 9ஆம் தேதி தன் நீண்ட கால காதலர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார்.
நயன்தாரா திருமணம் பற்றிய பதிவுகள்
கோலாகலமாக நடைபெற்ற இத்திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் தொடங்கி பல நட்சத்திரங்களும் நேரில் கலந்து கொண்டு நயன்தாரா - விக்னேஷ் சிவனை வாழ்த்தினர்.
தன் 37ஆவது வயதில் தனது 7 ஆண்டு கால காதலர் விக்னேஷ் சிவனை நயன்தாரா திருமணம் செய்துள்ள நிலையில், ஒருபுறம் அவருக்கு வாழ்த்து மழையும், மறுபுறம் அவரது கடந்த கால உறவுகள் பற்றிய அநாகரிகமான பதிவுகளும் சமூக வலைதளங்களை தொடர்ந்து ஆக்கிரமித்து வருகின்றன.
மருத்துவரின் மோசமான கமெண்ட்
அந்த வகையில் முன்னதாக மருத்துவர் ஒருவர் நடிகை நயன்தாரா குறித்து பகிர்ந்த மோசமான கமெண்ட் ஒன்றை, பாடகி சின்மயி தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அறிவன்பன் திருவள்ளுவன் எனும் அம்மருத்துவரின் ஐடியில் இருந்து பகிரப்பட்டுள்ள கமெண்டில், ”நான் நயன்தாராவின் நடிப்புத் திறமையை மதிக்கிறேன். ஆனாலும் 40 வயது / பாட்டி வயதை நெருங்கும் நேரத்தில் குடும்பம் நடத்தி குழந்தை பெற நினைக்கும் அவரது திட்டம் பற்றி வருத்தப்படுகிறேன். அவருக்கு ஐவிஎஃப் செண்டர்கள் உதவும் என நம்புகிறேன்” என அநாகரிகமான முறையில் பதிவிட்டிருந்தார்.
சீறிய சின்மயி...
இந்நிலையில், மருத்துவரின் இந்த கமெண்ட்டையும், மருத்துவர் குறித்த விவரங்களையும் தன் பக்கத்தில் பகிர்ந்துள்ள சின்மயி, மருத்துவக் கல்லூரிகளில் பெண் மருத்துவர்கள், பெண் அறுவை சிகிச்சை நிபுணர்கள் நடைமுறையில் சந்திக்கும் பாலின பாகுபாடு குறித்து பேசிக் கொண்டிருந்தபோது எனக்கு இந்த கமெண்ட் அனுப்பப்பட்டது.
We happened to be speaking about sexism in Medical colleges and the gender bias female doctors, surgeons face on my Instagram page and I got this sent this.
— Chinmayi Sripaada (@Chinmayi) June 12, 2022
A female actor gets married and this amazing doctor immediately leaves this crappy comment. pic.twitter.com/A4rwGyCd30
ஒரு பெண் நடிகை திருமணம் செய்து கொண்டுள்ள நிலையில், இந்த அற்புதமான மருத்துவர் இந்த மோசமான முட்டாள்தனமான கமெண்டை அனுப்பியுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.
பாடலாசிரியர் வைரமுத்து மீதான ’மீ டூ’ புகாரை அடுத்து, சின்மயி தொடர்ந்து திரைத்துறையிலும், சமூக வலைதளங்களிலும் அத்துமீறும் ஆண்களை வெளிப்படுத்தியும் கண்டித்தும் வருவது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)