Chennai: வயிற்றுக்குள் வைர நகை! இப்படியும் ஒரு திருட்டு! பிரியாணியோடு நகையை விழுங்கி எஸ்கேப்பான நபர்!
ரம்ஜான் விருந்துக்கு அழைத்தவரின் வீட்டில் நகைகளை திருடி அதை பிரியாணியுடன் விழுங்கி நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ரம்ஜான் விருந்துக்கு அழைத்தவரின் வீட்டில் நகைகளை திருடி அதை பிரியாணியுடன் விழுங்கி நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை விருகம்பாக்கம் அடுத்த சாலிகிராம் அருணாச்சலம் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் தாட்சாயிணி (34). இவர் நகைக்கடை ஒன்றில் பணியாற்றி வந்த நிலையில், கடந்த ரம்ஜான் பண்டிகைக்காக கடையில் பண்புரியும் மேலாளர் சாராவை விருந்துக்கு தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். அவரது அழைப்பை ஏற்ற சாரா தனது நண்பர் சையத் முகமது அபு பக்கருடன் சேர்ந்து தாட்சாயிணி வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு இருவருக்கும் பிரியாணி விருந்து அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து இருவரும் அங்கிருந்து கிளம்பியுள்ளனர்.
அவர்கள் சென்ற சிறிது நேரத்தில் வீட்டில் இருந்த பீரோ திறந்து கிடந்ததை பார்த்து சாரா அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து பீரோவை சோதனை செய்த போது, அங்கு வைக்கப்பட்டிருந்த தங்கம் மற்றும் வைரம் 3 செயின்கள் காணாமல் போனது தெரிய வந்தது. இதனையடுத்து காணாமல் போன நகையை அவர் வீடு முழுவதும் தேடியுள்ளார். ஆனால் எங்கு தேடியும் கிடைக்க வில்லை. இதனையடுத்து தாட்சாயிணியிக்கு சாராவுடன் வந்த அபு பக்கர் மீது சந்தேகம் வந்துள்ளது.
இதனையடுத்து அவரை வீட்டிற்கு மீண்டும் அழைத்து விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில் இதுகுறித்து விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து அபு பக்கரை அழைத்து போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், “ பிரியாணி விருந்துக்கு வந்த போது வீட்டில் இருந்த நகைக்கு ஆசைப்பட்டு தங்க வரை நகைகள் திருடி பிரியாணியுடன் சேர்த்து வாயில் போட்டு விழுங்கியதாக தெரிவித்தார். இதனையடுத்து அவரது வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்த போது, அவரது வயிற்றில் நகைகள் இருப்பது உறுதியானது.
இதனையடுத்து அவற்றை வெளியே எடுக்க இனிமா கொடுக்கப்பட்ட போது நகைகள் வெளியே வரவில்லை. இந்த நிலையில் நேற்று அபு பக்கர் இயற்கை உபாதை கழித்த போது நகைகள் வெளியே வந்தது. அதை அவர் போலீசாரிடம் ஒப்படைக்க, போலீஸார் அதனை தாட்சாயிணியிடம் ஒப்படைத்தனர். மேலும் இது குறித்து நடவடிக்கை ஏதும் தேவையில்லை தாட்சாயிணி கூறியதால், அபுபக்கரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக கூறினர்.