மேலும் அறிய

GOAT Movie: விஜய்யின் கோட் படத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் - சஸ்பென்ஸை உடைத்த அஜ்மல்!

நடிகர் விஜய் The Greatest of All Time என்ற படத்தில் நடித்து வருகிறார். பிகில் படத்துக்கு பிறகு இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

நடிகர் விஜய் நடிக்கும் The Greatest of All Time படத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் நடித்துள்ளதாக தகவல் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

லியோ படத்திற்கு நடிகர் விஜய் The Greatest of All Time என்ற படத்தில் நடித்து வருகிறார். பிகில் படத்துக்கு பிறகு இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்தில் மீனாட்சி சௌத்ரி, சினேகா, லைலா, பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல், ஜெயராம், பிரேம்ஜி அமரன், வைபவ், விடிவி கணேஷ் என ஏகப்பட்ட பேர் இடம் பெற்றுள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படம் செப்டம்பர் 5 ஆம் தேதி விநாயகர் சதுர்த்திக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

The Greatest of All Time படத்தில் விஜய் அப்பா- மகன் என இரட்டை வேடத்தில் நடிக்கிறார். மேலும் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படம் எடுக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. முன்னதாக கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி The Greatest of All Time படத்தில் இருந்து விசில் போடு பாடல் வெளியானது. விஜய் பாடிய இந்த பாடல் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. 

இந்த படத்தில் ஏஐ தொழில்நுட்பத்தில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தை நடிக்க வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, இந்த நிலையில் கோட் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் ரஷ்யாவில் நடந்து வருகிறது. அடுத்த அப்டேட் ஜூன் 22 ஆம் தேதி விஜய் பிறந்தநாளன்று வெளியாகும் என வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தான், அஜ்மல் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் முக்கியமான விஷயம் பற்றி பேசியுள்ளார். 

அதில் The Greatest of All Time  படத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறதே? என்ற ரீதியில் கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு, ”எதையும் நான் இப்போது கூற முடியாது. ஏஜிஎஸ் நிறுவனமும், வெங்கட் பிரபுவும் படம் பற்றிய சுவாரஸ்ய முடிச்சுகளை ஒவ்வொன்றாக வெளியிடுவார்கள்” என தெரிவித்துள்ளார். இதனால் அந்த சென்னை அணி வீரர்கள் யார்? யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. 

ஏற்கனவே ஃபிலிம் சிட்டியில் நடந்த இருவேறு ஷூட்டிங்கின்போது தோனியும், விஜய்யும் சந்தித்து கொண்டனர். இதன் புகைப்படம் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget