உங்க சண்டைய சோசியல் மீடியால காட்டகூடாது..ஆர்த்தி மற்றும் ரவி மோகனுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு
Ravi Mohan Aarti Divorce: ரவி மோகன் மற்றும் ஆர்த்தி ரவி சமூக வலைதளங்களில் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை அடுக்கி வந்த நிலையில் தற்போது நீதிமன்றம் அதிரடி உத்தரவு போட்டுள்ளது

ரவி மோகன் ஆர்த்தி விவாகரத்து
நடிகர் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி ரவியின் விவாகரத்து நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இருதரப்பினரும் ஒருத்தர் மேல் ஒருத்தர் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகிறார்கள். இதனால் ரசிகர்கள் யார் பக்க நியாயம் என்பது தெரியாமல் குழப்பத்தில் உள்ளார்கள். விவாகரத்து கேட்டு ரவி மோகன் சென்னை குடும்ப நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். ஆர்த்தி ரவி மாதம் 40 லட்சம் ஜீவனாம்சம் கேட்டு மனுதாக்க செய்திருந்தார். இப்படியான நிலையில் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி ரவி விவாகரத்தி விஷயத்தில் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது
தன்னைப் பற்றி ஆர்த்தியும் அவரது தாயாரும் சமூக வலைதளத்தில் அறிக்கை வெளியிட தடை செய்யும்படி ரவி மோகன் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் இப்படி கூறியுள்ளது. ரவி மோகன் மற்றும் ஆர்த்தி இருவரும் சமூக வலைதளங்களில் ஒருவர் மீது இன்னொருவர் வைத்துள்ள குற்றச்சாட்டுகளை நீக்கும்படியும் இனிமேல் பொதுவெளியில் அவதூறு பரப்பும் வகையில் அறிக்கை வெளியிட கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரவி மோகன் ஆர்த்தி விவாகரத்து சர்ச்சை பின்னணி
கடந்த ஆண்டு ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிக்கை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து ஆர்த்தி இந்த விவகாரத்தில் ரவி மோகன் தன்னை கலந்தாசிக்கவில்லை என கூறி அதிர்ச்சியை கிளப்பினார். ஆர்த்தி மற்றும் அவரது தாயின் கட்டுப்பாட்டில் ரவி மோகன் இத்தனை வருடம் இருந்து வந்ததாகவும் அவரது சொத்துக்களை ஆர்த்தி அபகரித்துக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகின. அதே நேரம் பாடகி கெனிஷாவுடன் ரவி மோகனுக்கு இருந்த தொடர்பே இந்த விவாகரத்திற்கு காரணம் என ஆர்த்தி ரவி ஆதரவாளர்கள் தெரிவித்தார். சமீபத்தில் ரவி மோகன் மற்றும் கெனிஷா பிரான்சிஸ் இணைந்து திருமண நிகழ்வில் கலந்துகொண்டதைத் தொடர்ந்து இந்த சர்ச்சை மீண்டும் வலுப்பெற்றது. இதனைத் தொடர்ந்து ரவி மோகன் மற்ற்றும் ஆர்த்தி இருவரும் தங்கள் குடும்ப உறவுகளில் இருந்த சிக்கல்களை முன்வைத்து அறிக்கைகளை வெளியிட்டு வந்தார்கள். ஆர்த்தி தன்னை தன் குடும்பத்தினரிடம் இருந்து பிரித்ததாக ரவி மோகன் குற்றம் சாட்டினார். கெனிஷாவின் வருகையே இந்த பிரிவுக்கு முக்கிய காரணம் என ரவி மோகன்






















