Chennai Tamil songs : “வா வாத்தியாரே முதல் கருத்தவன்லாம் கலீஜாம் வரை”.. சென்னையின் பெருமையை பேசும் டாப் 10 பாடல்கள்..!
சென்னை மாநகரின் புகழை தமிழ் சினிமா காலம் காலமாக பாடி வருகிறது. சென்னை தினத்தையொட்டி சென்னை நகரை பற்றி பாடல்களை பற்றி விரிவாக காணலாம்.
சிங்கார சென்னை, வந்தாரை வாழவைக்கும் சென்னை என பல அடைமொழிகளுக்கு சொந்தமான சென்னைக்கு 384 வயதாகிவிட்டது. பல்லவர்களை தொடங்கி போர்த்துகீசியர்கள், பிரெஞ்சுக்காரர்கள், ஆங்கிலேயர்களால் ஆட்சி செய்த இடம் வணிக தலைநகரமாக விளங்கியது. வரலாற்று பெருமையை சுமக்கும் சென்னை மாநகரின் புகழை தமிழ் சினிமா காலம் காலமாக பாடி வருகிறது. சென்னை தினத்தையொட்டி சென்னை நகரை பற்றி பாடல்களை பற்றி விரிவாக காணலாம்.
1.வா வாத்தியாரே ஊட்டாண்ட - பொம்மலாட்டம் (1968)
பிற மொழி கலப்புடன் இருக்கும் சென்னை தமிழின் வரிகளில் அமைக்கப்பட்ட இந்த பாடலில் ஜாம்பஜார் முதல் சைதாப்பேட்டை உள்ளிட்ட இடங்களின் பெயர்களும், இந்த ஊருக்கே உரிய உணவான பாயா, சால்னாவின் வாடையையும் உணரமுடியும்.
2.உதயம் தியேட்டர் - ஆனந்த பூங்காற்றே (1999)
ட்ராபிக் இல்லாத சென்னை தெருக்களை காண்பது அரிது. அதுபோல், கானா இசை ஒலிக்காத சென்னை தெருக்களும் அரிது. இளையராஜா, ஏ.ஆர்.ஆர் உள்ளிட்ட இசை கலைஞர்கள் உச்சத்தில் இருக்க, கானா பாடல்கள் மூலம் கவனத்தை ஈர்த்தார் தேனிசை தென்றல் தேவா. சென்னையில் உள்ள உதயம், சாந்தி, கமலா, பத்மா, ஜெயந்தி, ராகினி ரோகினி, ரூபினி, ருக்மணி, கிருஷ்ணவேணி ஆகிய திரையரங்களின் பெயர்கள் இந்த பாடலில் இடம் பெற்றிருக்கும்.
3. மெட்ராஸ சுத்தி பார்க்க போறேன் - மே மாதம் (1994)
சென்னையை சுற்றி பார்க்கும் போது ஆரம்பிக்கும் இப்பாடலை ஜி.வி. பிரகாஷ், ஸ்வர்ணலதா, ஷாகுல் ஹமீத் உள்ளிட்டோர் பாடியுள்ளனர். வைரமுத்து வரிகளில் உருவான இப்பாடலுக்கு மனோரமாவின் ஹம்மிங் ஹைலைட்டாக அமைந்தது.
4.சென்னை பட்டினம் - அள்ளி தந்த வானம் (2001)
சென்னையில் காசு இல்லாமல் இருப்பது மிகவும் சிரமமான விஷயம் என்பதை உணர்த்தும் வகையில் அமைந்தது இப்பாடல். வித்யாசாகரின் இசையில் உதித் நாராயணின் குரலில் வெளிவந்த இப்பாடல் செம ஹிட்டானது.
5. வாம்மா துரையம்மா - மதராசபட்டினம் (2010)
சுதந்திரம் பெறும் சமயத்தில் சென்னை எப்படி இருந்து இருக்கும் என்பதை கண் முன் காட்டியது மதராசப்பட்டினம். மெட்ராஸிற்கு புதிதாக வந்த வெளிநாட்டவருக்கு ஊரின் அழகை பாடிகாட்டுவார் படத்தின் கதாநாயகன்.
6. வணக்கம் வாழ வைக்கும் சென்னை - மெரினா (2012)
ஊரை விட்டு சென்னைக்கு பிழைப்பு தேடி வருபவர்களுக்கான பாடலே இது. மூன்று நபர்கள் சேர்ந்து பாடிய இப்பாடலில், பல ஹீரோக்களின் காட்சி இடம் பெற்று இருக்கும்.
7. சென்னை சிட்டி கேங்ஸ்டர் - வணக்கம் சென்னை (2013)
அனிருத் அறிமுகமான காலத்தில் வெளியான இப்பாடல், அவருக்கான அடையாளத்தை தேடிக்கொடுத்தது. அத்துடன் இப்பாடல் வெளியாகும் போது இணையத்தின் பயன்பாடு தொடங்கி வந்ததால், சென்னை சிட்டி கேங்ஸ்டர் வைரலானது.
8. சென்னை வட சென்னை - மெட்ராஸ் (2014)
உழைக்கும் வர்க்கத்தின் மக்கள் வாழும் சென்னையின் வட பகுதியை பறைசாற்றும் விதமாக அமைந்தது பா.ரஞ்சித்தின் மெட்ராஸ் படத்தில் இடம்பெற்ற சென்னை வட சென்னை பாடல். இதில் இடம்பெற்ற காட்சிகளும் பார்க்க நிதர்சனமாக இருக்கும்.
9. சான்ஸே இல்லை சென்னை (2014)
அனிருத் இசையில் சென்னை பெருமையை பாடும் மற்றொரு ஆல்பம் பாடலாக அமைந்தது ‘சான்ஸே இல்லை..நம்ம சென்னை போல ஒரு ஊறே இல்லை.’
10. கருத்தவெல்லம் கலீஜாம் - வேலைக்காரன் (2017)
‘நெட்டு குத்தா நிக்குது பார்…ஷாப்பிங் மாலு…அத நிக்க வச்ச கொம்பன்…எங்க குப்பம் ஆளு…’ என உழைக்கும் சென்னை மக்களை பற்றி வந்த பாடல் வேலைக்காரன் படத்தில் இடம்பெற்ற கருத்தவன்லாம் கலீஜாம்.