மேலும் அறிய

Casting Election Election: நடிகர் சங்கத்தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற விஷால்.! கார்த்தியும் வெற்றிமுகம்!

நடிகர் சங்கத் தேர்தலில் நடிகர்கள் விஷால் மற்றும் கார்த்தி வெற்றிபெற்றுள்ளனர். 

நடிகர் சங்கத் தேர்தலில் பொதுசெயலாளர் பதவிக்கு போட்டியிட்ட நடிகர் விஷாலும் பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட கார்த்தியும் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக, தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு 2019 ஜூன் மாதம் 23ஆம் தேதி நடந்த தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலுக்கு உறுப்பினர்கள் முறையாக அழைக்கப்படவில்லை மற்றும் தேர்தலை அனைத்து இடங்களிலும் நடத்தாமல் சென்னையில் மட்டும் நடத்தியதாக கூறி இதை ரத்து செய்ய வழக்கு ஒன்று தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி கல்யாணசுந்தரம் விசாரித்தார். இந்த வழக்கில் 2020ஆம் அவர் தீர்ப்பளித்தார். அதில், 2019ஆம் ஆண்டு நடைபெற்று தேர்தலை ரத்து செய்து அவர் உத்தரவிட்டார். மேலும் நடிகர் சங்கத்தை நிர்வகிக்க தனி அதிகாரி நியமனம் செல்லும் என்று தீர்ப்பளித்து,  மூன்று மாதத்தில் நடிகர் சங்கத்திற்கு புதிதாக தேர்தலை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸை நியமித்து உத்தரவு பிறப்பித்திருந்தார். 

இந்தத் தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து நடிகர் சங்கம் சார்பில் மேல் முறையீட்டு வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த வழக்கை இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை நடத்தி வந்தது. அந்த வழக்கு விசாரணையின் போது, “கடந்த 2019ம் ஆண்டு ஜூன் 23 தேதி நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில் 80 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. அனைத்து வாக்கு பெட்டிகளும் வங்கி லாக்கரில் பாதுகாப்பாக வைக்கபட்டுள்ளன.

வாக்கு பெட்டிகளில் வைக்கப்பட்டுள்ள வாக்குகளை எண்ணி முடிவுவை அறிவிக்க உத்தரவிட வேண்டும். தேர்தல் நேர்மையான முறையில் நடைபெற்றுள்ளது. ஏற்கனவே தேர்தலுக்காக 35 லட்சம் செலவு செய்யபட்டுள்ளது. மீண்டும் புதிதாக தேர்தலை நடத்த சங்கத்தில் பணம் இல்லை என்பதால் வாக்கு எண்ணிக்கைக்கு அனுமதி அளிக்க வேண்டும்” என நடிகர் சங்கம் தரப்பில் வாதிட்டப்பட்டிருந்தது. இந்த வழக்கில் நீதிபதிகள் அவர்களுடைய தீர்ப்பை ஒத்திவைத்திருந்தனர். இந்தச் சூழலில் கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், இந்த தேர்தலின் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் முன்னிலையில் வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வந்த நிலையில், இடையில் பதிவானதை விட 5 வாக்குகள் கூடுதலாக இருந்ததாக கூறி ஐசரி கணேஷ் எதிர்ப்பு தெரிவித்ததால் வாக்கு எண்ணிக்கை பணி நிறுத்தப்பட்டது. அதனைத்தொடந்து வாக்கு எண்ணிக்கை பணி தொடர்ந்த நிலையில் முதற்கட்டமாக நடிகர்கள் விஷாலும், கார்த்தியும் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

 

 

தலைப்பு செய்திகள்

Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
Vijay Sethupathi:
Vijay Sethupathi: "நான் சந்தோஷமா இருந்தால் காய்ச்சல் வரும்.." பத்தா வெற்றி விழாவில் விஜய் சேதுபதி
"என் பாடல்கள் சமுதாயத்திற்கு தீங்கா?" - விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த அசல் கோலார்!

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Maruti Suzuki Alto K10: நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
Russia Vs Ukraine: கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
Embed widget