Captain Miller: சாட்டிலைட், ஓடிடி ரைட்ஸ் ரூ.120 கோடிக்கு விற்பனை.. ஷூட்டிங் முடியும் முன்னரே சாதனை படைக்கும் தனுஷ் படம்!
படத்தின் ஷூட்டிங் தற்போது நடைபெற்று வரும் நிலையில், படம் முடியும் முன்னரே 120 கோடிக்கு விற்பனையாகி உள்ளது கோலிவுட் வட்டாரங்களில் பேசுபொருள் ஆகியுள்ளது.
![Captain Miller: சாட்டிலைட், ஓடிடி ரைட்ஸ் ரூ.120 கோடிக்கு விற்பனை.. ஷூட்டிங் முடியும் முன்னரே சாதனை படைக்கும் தனுஷ் படம்! Captain Miller satellite and OTT rights of Dhanush movie sold for 120 crores says sources Captain Miller: சாட்டிலைட், ஓடிடி ரைட்ஸ் ரூ.120 கோடிக்கு விற்பனை.. ஷூட்டிங் முடியும் முன்னரே சாதனை படைக்கும் தனுஷ் படம்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/21/3a55e9c4cab9a918568b3495c3f791af1666351425899574_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தனுஷின் அடுத்த படமான கேப்டன் மில்லர் படத்தின் சாட்டிலைட், ஓடிடி ரைட்ஸ் இரண்டு ம் 120 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
'த க்ரே மேன்’, ’திருச்சிற்றம்பலம்’, ’நானே வருவேன்’ என இந்த ஆண்டு முழுவதும் அடுத்தடுத்து படங்களை வழங்கில் நடிப்பு அசுரனாய் தன் ரசிகர்களை மகிழ்வித்துள்ளார் நடிகர் தனுஷ்.
அவரது நடிப்பில் அடுத்தடுத்து வாத்தி, கேப்டன் மில்லர் படங்களும் வெளியாக உள்ளன.
View this post on Instagram
இதில் சாணி காகிதம், ராக்கி படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் ’கேப்டன் மில்லர்’. இப்படத்தின் சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமைகள் 120 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி உள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இப்படத்தின் ஷூட்டிங் தற்போது நடைபெற்று வரும் நிலையில், படம் முடியும் முன்னரே 120 கோடிக்கு விற்பனையாகி உள்ளது கோலிவுட் வட்டாரங்களில் பேசுபொருள் ஆகியுள்ளது.
இப்படத்தில் எதற்கும் துணிந்தவன், டான் படங்களைத் தொடர்ந்து பிரியங்கா மோகன் ஹீரோயினாக நடித்து வருகிறார். ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கும் நிலையில் பட்டாஸ், மாறன் ஆகிய படங்களை தொடர்ந்து 3வது முறையாக தனுஷ் - சத்யஜோதி பிலிம்ஸ் கூட்டணி இப்படத்தில் இணைந்துள்ளது.
View this post on Instagram
1930களின் மெட்ராஸ் ப்ரெசிடென்சியை மையமாக வைத்து இப்படத்தின் கதை அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டு தனுஷ் ரசிகர்களுக்கு சம்மர் ட்ரீட்டாக இப்படம் வெளியாகும் என அறிவிப்புகள் வெளிவந்துள்ளன.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)