Captain Miller Release Date: தனுஷின் கேப்டன் மில்லர் படத்தின் ரிலீஸ் தேதி இதுவா? படக்குழு தந்த சூப்பர் அப்டேட்..
ஜனவரி 12ஆம் தேதி கேப்டன் மில்லர் படம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

Captain Miller Release Date: ஜனவரி 12ஆம் தேதி கேப்டன் மில்லர் படம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
கேப்டன் மில்லர்:
ராக்கி, சாணிக்காயிதம் உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ் நடித்துள்ளார். வரலாற்று பாணியில் எடுக்கப்பட்ட இந்த படத்தில் தனுஷுக்கு ஹீரோயினாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். இவர்கள் தவிர படத்தில் நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர், சிவக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஆறுமாதங்களாக நடந்த படபிடிப்பு கடந்த ஜூலையுடன் முடிந்தது.
எப்போது ரிலீஸ்?
U/A certificate #CaptainMiller 😎
— Sathya Jyothi Films (@SathyaJyothi) December 29, 2023
KIDS, YOUTH & FAMILIES get ready for the biggest Action Extravaganza #CaptainMillerPongal 🔥🔥
JANUARY 12th,2024 Blasting Theatres Worldwide@dhanushkraja @ArunMatheswaran @NimmaShivanna @sundeepkishan @gvprakash @priyankaamohan @saregamasouth pic.twitter.com/ox4lg5x21c
முன்னதாக படத்தின் டீசர் மற்றும் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் கேப்டன் மில்லர் படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்தது. பொங்கலுக்கு வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது படத்தின் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, ஜனவரி 12ஆம் தேதி கேப்டன் மில்லர் படம் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. போஸ்டருடன் கூடிய, படம் குறித்த தேதியையும் அறிவித்துள்ளது படக்குழு.
மூன்று பாகம்:
இந்த படம் மூன்று பாகங்களாக உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. பீரியட் டிராமாவாக உருவாகி இருக்கும் இப்படம், முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகளால் நிறைந்திருக்கும் என்பது உறுதி. 1930 முதல் 40 காலக்கட்டத்தில் நடக்கும் கதை என்றும், தனிமனிதனின் சுதந்திரத்தை மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டிருப்பதாகவும் அருண் மாதேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஒரு சாதாரண மனிதன் எப்படி போராளியாக மாறுகிறார் என்பதே இந்தப் படத்தில் தனுஷின் கதாபாத்திரம் என்று அவர் தெரிவித்தார்.
மேலும் படிக்க
RIP Vijayakanth: மீளா துயிலில் கலந்தார் விஜயகாந்த் : சந்தனப் பேழைக்குள் அடங்கியது கருப்பு வைரம்





















