Cannes 2022: கேன்ஸ் 2022: பிரான்ஸிலிருந்து ஓட்டல் அறையை படம்பிடித்து வெளியிட்ட மாதவன்
திரைத்துறையில் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுவது பிரான்ஸ் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா (Cannes Film Festival).
![Cannes 2022: கேன்ஸ் 2022: பிரான்ஸிலிருந்து ஓட்டல் அறையை படம்பிடித்து வெளியிட்ட மாதவன் Cannes 2022 Actor R Madhavan Shares Glimpse luxury hotel room ahead Rocketry Screening cannes film festival Cannes 2022: கேன்ஸ் 2022: பிரான்ஸிலிருந்து ஓட்டல் அறையை படம்பிடித்து வெளியிட்ட மாதவன்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/17/b755277ac6adbf3f5ec8f36068d96202_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
திரைத்துறையில் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுவது பிரான்ஸ் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா (Cannes Film Festival). இவ்விழாவில் கலந்து கொள்வதற்காக நடிகரும் இயக்குநருமான ஆர்.மாதவன் பிரான்ஸ் சென்றுள்ளார். அவர் அங்கு தங்கியுள்ள அறையை வீடியோவாக பதிவு செய்து அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
நடிகர் ஆர் மாதவன், இயக்குநராக அறிமுகமான "ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்" மே 19 ம் தேதி திரையிடப்பட இருக்கிறது.
இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள படம் ‘ராக்கெட்ரி’. இப்படத்தில் நடிகர் மாதவன் நம்பி நாராயணனாக நடித்துள்ளதோடு, படத்தையும் இயக்கி உள்ளார். இப்படம் மூலம் அவர் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். இப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக சிம்ரன் நடித்துள்ளார்.
சின்னத்திரை நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமான ஜெகன் சயின்டிஸ்ட் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் நடிகர்கள் சூர்யா, ஷாருக்கான் ஆகியோர் கவுரவ வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். பிரம்மாண்ட பொருட்செலவில் இப்படம் தயாராகியுள்ளது.
இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் வீடியோவில் அவர், கேன்ஸ் 2022 விழாவின் முதல் நாள். எனது அறையிலிருந்து கேன்ஸ் விழா நடக்கும் அரங்கின் பார்வை என்று பதிவிட்டுள்ளார். கூடவே தனது அறை முழுவதையும் அவர் சுத்திக் காட்டியுள்ளார்.
View this post on Instagram
கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில், உலகெங்கும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 20 திரைப்படங்கள் போட்டியில் பங்குபெறும். இதிலிருந்து நடுவர்கள் குழு தேர்ந்தெடுக்கப்படும் கலைப்படைப்புக்கு விருது வழங்கப்படும். இந்த 75வது ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழா 2022 மே 17 முதல் 28 வரை நடைபெற இருக்கிறது.
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அக்ஷய் குமார், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், திரைப்பட தயாரிப்பாளர் சேகர் கபூர் மற்றும் நடிகை பூஜா ஹெக்டே உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் இந்தியக் குழுவின் ஒரு பகுதியாக 75 வது கேன்ஸ் திரைப்பட விழாவின் தொடக்க நாளில் சிவப்பு கம்பளத்தில் நடக்க உள்ளனர். இவர்களில், 12 பேர் தென்னிந்தியாவிலிருந்து சிவப்பு கம்பள வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.
கேன்ஸ் செல்லும் இந்த குழுவை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் இந்தியாவில் இருந்து வழிநடத்துகிறார்.
இந்த விழாவில் நாட்டுப்புற பாடகர் மேம் கான், நடிகர்கள் நவாசுதீன் சித்திக், நயன்தாரா, தமன்னா பாட்டியா மற்றும் வாணி திரிபாதி, இரண்டு முறை கிராமிய விருது பெற்ற இசையமைப்பாளர் ரிக்கி கேஜ், மற்றும் CBFC தலைவர் பிரசூன் ஜோஷி ஆகியோரும் பங்கேற்க இருக்கின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)