Janhvi kapoor: மகளின் பாத்ரூம் சீக்ரெட்டை உடைத்த போனி கபூர்.. பதறிய ஜான்வி..குபீரென்று சிரித்த கபீல் சர்மா!
ஜான்வியும், போனி கபூரும் கபில் சர்மா ஷோவில் கலந்து கொண்டுள்ளனர்.இதைத் தொடர்ந்து போனி கபூர் மகள் ஜான்வியின் சில தனிப்பட்ட ரகசியங்களை பகிரங்கமாக மேடையில் பகிர்ந்து கொண்டார்.
நடிகை ஜான்வி கபூர் பிரபல பாலிவுட் நடிகையும், திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூர் - ஸ்ரீதேவி தம்பதியின் மகளும் ஆவார். இவர் தற்போது இந்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார். போனி கபூர் தயாரிப்பில் இயக்குனர் மதுகுட்டி சேவியர் இயக்கத்தில் நவம்பர் 4 அன்று வெளியாக இருக்கும் திரைப்படம் மிலி. இந்த திரைப்படத்தில் ஜான்வி கபூர், சன்னி கௌஷல் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மிலி படக்குழுவினர் திரைப்படத்தின் ப்ரோமோஷனில் படு பிஸியாக உள்ளனர். இந்த நிலையில் படத்தை மேலும் பிரோமோட் செய்யும் வகையில், ஜான்வியும் போனி கபூரும் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான கபில் சர்மா ஷோவில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த வாரம் ஒளிபரப்பாகும் அந்த ஷோவின் ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. வெளியாகியுள்ள வீடியோ பதிவில் கபில் ஷர்மா, ஜான்வி கபூர் பள்ளிக்கூடத்தில் அப்பாவால் விட்டு செல்லப்பட்ட குழந்தை போல் உணர்கிறார் என்று கேலி செய்தார். அதற்கு ஜான்வி… ஆம்! இன்றும் தந்தை போனி கபூர் தன்னை டிராப் செய்துவிட்டு கிளம்புவதாகத்தான் இருந்தது. ஆனால் பின்னர் அவர் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக முடிவெடுத்தார் என்று கூறினார்.
View this post on Instagram
இதைத் தொடர்ந்து போனி கபூர், மகள் ஜான்வியின் சில தனிப்பட்ட ரகசியங்களை பகிரங்கமாக மேடையில் பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில், ஜான்வியின் அறைக்குள் நான் நுழையும் போது, எப்பொழுதும் அவரது ஆடைகள் அங்கும் இங்குமாக கலைந்து கிடக்கும் எனவும் ஜான்வி டூத் பேஸ்ட்டின் மூடியை கூட மூடி வைத்திருக்க மாட்டார். அதை நான் தான் எடுத்து மூடி வைக்க வேண்டும் என்றும் கபில் ஷர்மாவிடம் கூறினார். மேலும், நல்ல வேலை டாய்லட்டை அவரே ஃப்ளஷ் செய்து கொள்வார் என்று கூறியுள்ளார். தந்தையின் பேச்சைக் கேட்டு சங்கடப்பட்டு நடிகை ஜான்வி..அப்பா…! என கத்தினார். இதை பார்த்த கபில் ஷர்மா சத்தம் போட்டு சிரிக்கத் தொடங்கினார்.
View this post on Instagram
மேலும் இந்த நிகழ்ச்சியின் போது மறைந்த நடிகையும் ஜான்வி கபூரின் தாயாருமான ஸ்ரீதேவியின் நினைவாக சிறப்பு நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதை பார்த்து தந்தையும், மகளும் கண்கலங்கினர். மேலும் ஸ்ரீதேவியின் ஹிட் பாடல்களுக்கு நடனக் குழுவினர் நடனம் ஆடியுள்ளனர். அவர்களுடன் ஜான்வி கபூரும் இணைந்து நடனமாடத் தொடங்கினார். மேலும் போனி கபூர் மனைவியை பற்றி கூறும் பொழுது, "ஒரு ஸ்ரீதேவி… என்றுமே ஒரே ஒரு ஸ்ரீதேவி மட்டும் தான்!"என்று கூறினார்.