![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Boney Kapoor: “வலிமை மட்டுமல்ல; பீஸ்ட்டும் அப்படித்தான்! அதனால்தான் ஏகே 61” - மனம் திறந்த போனி!
வலிமை படத்திற்கு வந்த விமர்சனங்கள் பற்றியும் அடுத்தாக அஜித்துடன் இணைந்திருக்கும் படம் குறித்தும் தயாரிப்பாளர் போனி கபூர் பேசியிருக்கிறார்.
![Boney Kapoor: “வலிமை மட்டுமல்ல; பீஸ்ட்டும் அப்படித்தான்! அதனால்தான் ஏகே 61” - மனம் திறந்த போனி! Boney Kapoor on Ajith Next Movie Valimai Mixed Reaction Says Even Beast movie received Mixed Reaction Boney Kapoor: “வலிமை மட்டுமல்ல; பீஸ்ட்டும் அப்படித்தான்! அதனால்தான் ஏகே 61” - மனம் திறந்த போனி!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/17/2d4a5de3c3eb55c1173c53e74fa3ff06_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
வலிமை படத்திற்கு வந்த விமர்சனங்கள் பற்றியும் அடுத்தாக அஜித்துடன் இணைந்திருக்கும் படம் குறித்தும் தயாரிப்பாளர் போனி கபூர் பேசியிருக்கிறார்.
இது குறித்து அவர் பேசும் போது, “எல்லாப் பெரிய படங்களும் மிக்ஸிங்கான விமர்சனங்களைத்தான் பெற்றிருக்கு. பீஸ்ட் படத்துக்கு கூட மிக்ஸிங்கனா ரெஸ்ஃபான்ஸ் தான் வந்துச்சு. இவ்வளவு ஏன் 2.0, சோலே படத்துக்கு கூட மிக்ஸிங்கான ரெஸ்ஃபான்ஸ் தானே வந்துச்சு. பலதரப்பட்ட மக்கள் படம் பார்க்க வர்றாங்க. அவங்களுக்கு அவங்களோட கருத்தை சொல்ல முழு உரிமை இருக்கு.அது தப்பு கிடையாது.
வலிமை ஹிட்டா ஃப்ளாப்பா
என்ன பொறுத்தவரை மிக்ஸ் ரெஸ்ஃபான்ஸ் அப்படிங்கிறது ஹெல்த்தியான ரெஸ்ஃபான்ஸ். வலிமை பொருத்தவரைக்கும் எனக்கு எந்த கம்ளைண்ட்டும் இல்ல. அஜித் அடுத்தப்படத்திற்காக வெயிட்டை குறைச்சிருக்காரு. நியூ கெட்டப்பல வர்றாரு. சூப்பரா இருக்காரு. வினோத் ஒரு சூப்பரான டைரக்டர். அவருக்குன்னு ஒரு விஷன் இருக்கு. அவர நான் ரொம்ப மதிக்கிறேன். அதனாலத்தான் நான் அவர் கூட மூனாவது முறையா இணைஞ்சிருக்கேன்.
தகவல் உதவி:
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் அஜீத்குமார். கிங் ஆப் ஓப்பனிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அஜீத் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் ஏகே 61 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக அஜீத் உடல் எடையை அதிகளவில் குறைத்து ஒல்லியான தோற்றத்திற்கு மாறியுள்ளார்.
Prep mode on #AK61 pic.twitter.com/8VLz9yMCAq
— Suresh Chandra (@SureshChandraa) February 15, 2022
இந்த படத்தில் அஜீத் இரட்டை வேடங்களில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கும் நிலையில் போனிகபூர் தயாரிக்கும் இந்த படத்தில் நாயகியாக நடிக்க மஞ்சுவாரியர் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
View this post on Instagram
இதற்கு அடுத்தபடியாக நடிகர் அஜித் ‘நானும் ரெளடிதான்’ ‘தானா சேர்ந்த கூட்டம்’ ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய விக்னேஷ் சிவனுடன் இணைய இருப்பது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)