மேலும் அறிய

Alia Bhatt: ஆப்பிரிக்க காட்டில் உருவாகும் படம்.. ராஜமெளலியுடன் இணையும் ஆலியா பட்..

தெலுங்கு இயக்குநர் ராஜமவுலி இயக்கும் ஒரு படத்தில், பாலிவுட் நடிகை ஆலியா பட் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாலிவுட் திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆலியா பட். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான கங்குபாய் திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருப்பதோடு, இப்படத்தில் நடித்த ஆலியா பட்டுக்கு பாராட்டுகளை பல்வேறு தரப்பினரிடமிருந்தும் பெற்றுக்கொண்டிருக்கின்றது. விரைவில் இத்திரைப்படத்தின் வசூல் 100 கோடி ரூபாயை எட்டும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் நடிகை ஆலியாபட் இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ராஜமவுலி இயக்கத்தில் உருவாகியுள்ள ஆர்ஆர்ஆர் திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், ஆலியா பட்டின் அடுத்த பட அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருக்கிறார் ஆலியா பட். இந்த நிலையில் ராஜமவுலியின் அடுத்த படத்தில் முக்கிய வேடத்தில் ஆலியா நடிக்கவிருப்பதாக தகவல்கள் உறுதியாகியுள்ளது. 


Alia Bhatt: ஆப்பிரிக்க காட்டில் உருவாகும் படம்.. ராஜமெளலியுடன் இணையும் ஆலியா பட்..

காட்டை மையப்படுத்தி உருவாகவிருக்கும் இத்திரைப்படத்தின் திரைக்கதையை ராஜமவுலியும் அவரது தந்தை விஜயேந்திர பிரசாத்தும் இணைந்து சில மாதங்களாகவே உருவாக்கி வருகின்றனர். இந்த திரைப்படத்தில் மகேஷ் பாபு கதாநாயகனாக நடிப்பார் என்று முடிவு செய்யப்பட்டுவிட்ட நிலையில் மற்ற வேடங்களுக்கான நடிகர்களும் தேர்வு செய்யப்பட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது. இத்திரைப்படத்தில் தான் ஆலியா பட் கதாநாயகியாக நடிக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆர் ஆர் ஆர் திரைப்படத்தைப் போலவே இப்படத்தையும் இந்திய அளவிலான திரைப்படமாக உருவாக்க ராஜமவுலி  முயன்று வருவதாகக் கூறப்படுகிறது. பேச்சுவார்த்தைகள் சரியானதாக முடிந்தால் மகேஷ்பாபுவுடன் முதன் முறையாக ஆலியா பட் ஜோடி சேர்வார். ஆர்ஆர்ஆர் திரைப்படம் போல் அல்லாமல், ஆப்பிரிக்க காடுகளில் உருவாகவிருக்கும் அட்வெஞ்சர் திரைப்படத்தில் அவருக்கு முக்கிய கதாப்பாத்திரம் கொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

மகேஷ் பாபு மற்றும் ஆலியா பட்டுக்கு தற்போது கைவசம் இருக்கும் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் முடிந்த பின் இந்த ஆண்டின் பிற்பகுதியில் இப்படத்திற்கான படப்பிடிப்புகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராஜமவுலியின் திரைப்படங்கள் பெரும்பாலும் கிராபிக்ஸை சார்ந்தே இருக்கும் நிலையில், இந்த திரைப்படம் ஆப்பிரிக்காவில் உள்ள நிஜமான காடுகளில் படமாக்கப்பட இருக்கிறது.

புஷ்பா திரைப்படத்தை பார்த்த பின் அல்லு அர்ஜுனுடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆலியா பட் விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், ராஜமவுலி, மகேஷ் பாபு, ஆலியா பட் கூட்டணி இணைந்திருப்பது திரையுலகினரிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay: தவெக மாநாடு எதற்கு தெரியுமா? தொண்டர்களுக்கு தலைவராக விஜய் எழுதிய முதல் கடிதம்
TVK Vijay: தவெக மாநாடு எதற்கு தெரியுமா? தொண்டர்களுக்கு தலைவராக விஜய் எழுதிய முதல் கடிதம்
Breaking News LIVE OCT 4: ஏகப்பட்ட கேள்விகளை தவெகவினர் மீது வீசுகிறார்கள் - விஜய் அறிக்கை
Breaking News LIVE OCT 4: ஏகப்பட்ட கேள்விகளை தவெகவினர் மீது வீசுகிறார்கள் - விஜய் அறிக்கை
பிரம்ம முகூர்த்தத்தில் நடப்பட்ட மாநாட்டின் பந்தல்கால்... பிரம்மாண்டமாக தயாராகும் தவெக மாநாடு...
பிரம்ம முகூர்த்தத்தில் நடப்பட்ட மாநாட்டின் பந்தல்கால்... பிரம்மாண்டமாக தயாராகும் தவெக மாநாடு...
TN Rain Update: மக்களே குடை தயாரா? 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை
TN Rain Update: மக்களே குடை தயாரா? 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Priyanka Mohan : மொத்தமாக சரிந்த மேடை! விழுந்த பிரியங்கா மோகன்! ஷாக்கான ரசிகர்கள்Pawan Kalyan on Udhayanidhi : VCK Maanadu : ”பெண்கள் இருக்காங்க.. இப்படியா?” எல்லை மீறிய விசிகவினர்! நொந்து போன திருமாAmala supports Samantha : ’’அமைச்சர் மாதிரி பேசு..அரக்கி மாதிரி பேசாத’’வெளுத்து வாங்கிய அமலா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: தவெக மாநாடு எதற்கு தெரியுமா? தொண்டர்களுக்கு தலைவராக விஜய் எழுதிய முதல் கடிதம்
TVK Vijay: தவெக மாநாடு எதற்கு தெரியுமா? தொண்டர்களுக்கு தலைவராக விஜய் எழுதிய முதல் கடிதம்
Breaking News LIVE OCT 4: ஏகப்பட்ட கேள்விகளை தவெகவினர் மீது வீசுகிறார்கள் - விஜய் அறிக்கை
Breaking News LIVE OCT 4: ஏகப்பட்ட கேள்விகளை தவெகவினர் மீது வீசுகிறார்கள் - விஜய் அறிக்கை
பிரம்ம முகூர்த்தத்தில் நடப்பட்ட மாநாட்டின் பந்தல்கால்... பிரம்மாண்டமாக தயாராகும் தவெக மாநாடு...
பிரம்ம முகூர்த்தத்தில் நடப்பட்ட மாநாட்டின் பந்தல்கால்... பிரம்மாண்டமாக தயாராகும் தவெக மாநாடு...
TN Rain Update: மக்களே குடை தயாரா? 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை
TN Rain Update: மக்களே குடை தயாரா? 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை
MS Dhoni: கோபத்தில் டிவியை உடைத்த தோனி? ஹர்பஜன் சிங் சொன்னது குப்பை என சிஎஸ்கே பிசியோ ஆவேசம்
MS Dhoni: கோபத்தில் டிவியை உடைத்த தோனி? ஹர்பஜன் சிங் சொன்னது குப்பை என சிஎஸ்கே பிசியோ ஆவேசம்
Superstar Rajinikanth: ரசிகர்கள் உற்சாகம்..! சிகிச்சை ஓவர்,  வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த், இரவே டிஸ்சார்ஜ்
Superstar Rajinikanth: ரசிகர்கள் உற்சாகம்..! சிகிச்சை ஓவர், வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த், இரவே டிஸ்சார்ஜ்
Rasi Palan Today, Oct 4: மிதுனத்துக்கு பணியில் மாற்றம், கடகத்துக்கு தன்னம்பிக்கை வேண்டும்- உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan Today, Oct 4: மிதுனத்துக்கு பணியில் மாற்றம், கடகத்துக்கு தன்னம்பிக்கை வேண்டும்- உங்கள் ராசிக்கான பலன்
PM Kisan Yojana: பிஎம் கிசான் திட்டம் - விவசாயிகளுக்கான அடுத்த தவணை ரூ.6000 எப்போது கிடைக்கும்? விவரங்கள் இதோ..!
PM Kisan Yojana: பிஎம் கிசான் திட்டம் - விவசாயிகளுக்கான அடுத்த தவணை ரூ.6000 எப்போது கிடைக்கும்? விவரங்கள் இதோ..!
Embed widget