KRK TROLL : தென்னிந்திய ரசிகர்களுக்கு மூளை இல்லை.. வார்த்தையை விட்ட பாலிவுட் நடிகர்! கொதித்த இணையம்!
தென்னிந்திய ரசிகர்களை விமர்சித்த பாலிவுட் நடிகரை ட்விட்டரில் தென்னிந்திய ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்திய திரையுலகின் முன்னணி இயக்குனர் எஸ்.எஸ். ராஜமவுலி. இவரது இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ரத்தம் ரணம் ரவுத்திரம் என்ற ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஜூனியர் என்.டி.ஆர். மற்றும் ராம்சரண் ஆகியோரின் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில், பாலிவுட்டின் நடிகரான கே.ஆர்.கே. ராஜமவுலியின் கே.ஆர்.கே. படத்தை மிகவும் மோசமாக விமர்சித்துள்ளார். அவரது டுவிட்டைப் பார்த்த ரசிகர்கள் மிகவும் கோபமடைந்துள்ளனர். கே.ஆர்.கே. தனது டுவிட்டர் பக்கத்தில், “ ராம்சரணை ஜூனியர் என்.டி.ஆர். தோள்களில் அமரவைக்கிறார். அதன்பிறகு, அடுத்த 15 நிமிடங்களுக்கு துப்பாக்கிய ஏந்திய 1000 பேரை இருவரும் எதிர்கொள்கிறார்கள். என்ன இது ராஜமவுலிஜி..? இதுபோன்ற முட்டாள்தனமான காட்சிகளை எல்லாம் மூளையில்லாத தென்னிந்திய ரசிகர்களால் மட்டுமே ரசிக்க முடியும் என தெரிவித்துள்ளார்.
JrNTR put Ramcharan on his shoulder and then they both fight with 1000 gunmen for next 15 minutes. Are you serious @ssrajamouli Ji? Such stupid scenes can be liked by brainless South audiences only. #RRR
— KRK (@kamaalrkhan) March 26, 2022
கே.ஆர்.கே.வின் டுவீட்டைப் பார்த்து தென்னிந்திய ரசிகர்கள் மிகவும் கோபமடைந்துள்ளனர். சிலர் கே.ஆர்.கே.விற்கு ஆதரவாகவும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். தென்னிந்திய ரசிகர் ஒருவர் அவரது டுவிட்டை வைத்தே அவரை கலாய்த்துள்ளார்.
கே.ஆர்.கே. நடித்த திரைப்படம் ஒன்றில் அவர் வில்லன் அடியாட்களை பறக்கவிட்டு, பின்னர் தன்னுடைய இரண்டு துப்பாக்கிகளையும் வைத்து காரில் சென்று கொண்டிருக்கும் வில்லனை நெஞ்சில் சுடுகிறார். இந்த காட்சியை டேக் செய்த ஒருவர் இந்த காட்சியில் மட்டும் என்ன லாஜிக் உள்ளது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
What a performance Bollywood actress
— murari (@W8ObjtYQ0hoFAjS) March 26, 2022
😪 pic.twitter.com/dDT4fslT7x
ராஜமவுலி இயக்கத்தில் வெளியாகியுள்ள ரத்தம் ரணம் ரவுத்திரம் திரைப்படம் நீண்ட நாட்களாக படப்பிடிப்பில் இருந்தது, கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக படத்தின் வெளியீடும் ஒத்திவைக்கப்பட்டே இருந்தது. பாகுபலி படத்திற்கு பிறகு வெளியாகிய ராஜமவுலியின் திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ரசிகர்கள் மத்தியிலும் இந்த திரைப்படம் மிகுந்த வரவேற்பை பெற்றதுடன் திரையரங்கில படமும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்