மேலும் அறிய

Rajinikanth Yogi Adityanath: காலில் விழுந்த காலா' பற்றி கருத்து கேளுங்கள்...ரஜினியை விமர்சித்து பதிவிட்ட ப்ளூ சட்டைமாறன்...

திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் நடிகர் ரஜினிகாந்தை விமர்சித்து டிவிட்டரில் பதிவிட்டு வரும் பதிவுகள் வைரலாகி வருகிறது.

திரைப்பட விமர்சகர் ப்ளு சட்டை மாறன், ரஜினிகாந்த் ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் கழுகு- காகம் சொன்னதில் இருந்தே நடிகர் ரஜினியை விமர்சித்து டிவிட்டரில் பல்வேறு பதிவுகளை பதிவிட்டு வருகிறார்.  இந்நிலையில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் காலில் நடிகர் ரஜினிகாந்த் விழுந்தது,  விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கும் நிலையில்  ப்ளூ சட்டை மாறன் இதனை கடுமையாக சாடி இருக்கிறார்.

ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பதிவில் பதிவிட்டுள்ளதாவது : “கடந்த சில வாரங்களாக கபாலிக்கு சொம்பு தூக்கிய திருப்பூர் சுப்பு, செய்யாறு OLA, ரமேஷ் பாலா, தனஞ்செயன் மற்றும் திரையுலக அட்டகத்திகளை, மாய்ந்து மாய்ந்து பேட்டி எடுத்த செய்தி மற்றும் Youtube. சேனல்களே.. இவர்களை மீண்டும் பேட்டியெடுங்கள். 'காலில் விழுந்த காலா' பற்றி கருத்து கேளுங்கள். அதற்கு அவர்கள் எப்படி ஈயம் பூசுகிறார்கள் என்பதை உலகம் பார்க்கட்டும். எனது புகைப்படத்தை Thumbnail ஆக வைத்து 'ப்ளூ சட்டையை கிழித்த' என்று பல்வேறு வீடியோக்கள் போட்டு வஞ்சத்தை தீர்த்தீர்களே? அதுதானா உங்கள் சேனல்களின் தரம்? நன்கு யோசியுங்கள்.

என்னை கரித்துக்கொட்டி, கெட்ட வார்த்தை பேசும் டம்மி பீஸ்களின் பேட்டிகளால்.. நான் 1% கூட அசரப்போவதில்லை. All are waste efforts. Keep on doing this. So that your motive and guest's cheap tactics will be made public and they'll decide who is right. கொஞ்சமாவது maturity உள்ள Anchor களை வேலைக்கு எடுங்கள். அவர்களும் ஹீரோக்களின் முரட்டு ஜால்ராக்களாக இருப்பது கண்ணியமான மீடியா தொழிலுக்கே பேரவமானம்”. இவ்வாறு அவர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். 

ப்ளு சட்டை மாறன் தனது மற்றுமொறு டிவிட்டர் பதிவில்: “உங்கள் புகழுக்கும், உயரத்திற்கும் இந்த சறுக்கல்கள் தேவையா ரஜினிகாந்த்? ஒவ்வொரு பிரபலத்திற்கும் இறுதிக்கால வரலாறு முக்கியம். இதை உணரவே மாட்டீர்கள்போல” என பதிவிட்டுள்ளார். 

கடந்த வாரம் ஜெயிலர் படம் ரிலீசுக்கு முன் இமயமலை சென்றார் ரஜினிகாந்த். அதன் பின் ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சிக்கு சென்ற அவர், அங்கு ஆளுநராக இருக்கும் தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் சிபி ராதாகிருஷ்ணனை  சந்தித்தார். அதை தொடர்ந்து நேற்று உத்தரப்பிரதேசத்துக்கு சென்ற ரஜினிகாந்த், செய்தியாளர்களிடம் பேசுகையில், அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துடன் ஜெயிலர் படம் பார்க்கப்போவதாக தெரிவித்தார்.

ஆனால் யோகி ஆதித்யநாத் ரஜினியுடன் ஜெயிலர் படத்தை பார்க்கவில்லை. அவருக்கு பதிலாக உ.பி துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத்  ரஜினிகாந்துடன் திரைப்படம் பார்த்தார்.  இந்த நிலையில் ரஜினிகாந்த் தனது மனைவி லதாவுடன் லக்னோவில் உள்ள யோகி ஆதித்யநாத் வீட்டுக்கு சென்றார். தன்னை வரவேற்க வீட்டு வாசலில் நின்ற யோகி ஆதித்யநாத்தின் காலில் ரஜினிகாந்த் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார். இந்த வீடியோ வெளியானதை தொடர்ந்து அவரை பலரும் விமர்சித்து வருகிறார்கள்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin Vs Amit Shah: “உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
“உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
MK Stalin: உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
Udhayanidhi:
Udhayanidhi: "எதிரிகள் தப்புக்கணக்கை சுக்கு நூறாக்கும் கொள்கை கூட்டம் இது" ஆர்ப்பரித்த உதயநிதி
Udhayanidhi:
Udhayanidhi: "2026 தேர்தலில் இளைஞர்களுக்கு போட்டியிட அதிக வாய்ப்பு வழங்க வேண்டும்" - மு.க.ஸ்டாலினுக்கு உதயநிதி கோரிக்கை
ABP Premium

வீடியோ

DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata
சாக்கு சொன்ன சவுக்கு ARREST பேட்டி”G PAY-ல பணம் அனுப்புனா நான் பொறுப்பா?” | Savukku Shankar Arrest

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin Vs Amit Shah: “உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
“உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
MK Stalin: உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
Udhayanidhi:
Udhayanidhi: "எதிரிகள் தப்புக்கணக்கை சுக்கு நூறாக்கும் கொள்கை கூட்டம் இது" ஆர்ப்பரித்த உதயநிதி
Udhayanidhi:
Udhayanidhi: "2026 தேர்தலில் இளைஞர்களுக்கு போட்டியிட அதிக வாய்ப்பு வழங்க வேண்டும்" - மு.க.ஸ்டாலினுக்கு உதயநிதி கோரிக்கை
PM Modi Visit: பொங்கல் கொண்டாட தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. பாஜக போடும் ஸ்கெட்ச்!
PM Modi Visit: பொங்கல் கொண்டாட தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. பாஜக போடும் ஸ்கெட்ச்!
New Kia Seltos vs Tata Sierra: புதிய கியா செல்டோஸா.? டாடா சியராவா.? அதிக சிறப்பம்சங்களை கொண்டுள்ள SUV எது.?
புதிய கியா செல்டோஸா.? டாடா சியராவா.? அதிக சிறப்பம்சங்களை கொண்டுள்ள SUV எது.?
Australia Gun Shoot: அடப்பாவமே.! ஆஸ்திரேலிய கடற்கரையில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு; 12 பேர் பலி, பலர் காயம்
அடப்பாவமே.! ஆஸ்திரேலிய கடற்கரையில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு; 12 பேர் பலி, பலர் காயம்
Case Against Trump's Order: ட்ரம்ப்புக்கு எதிராக ஒன்றுதிரண்ட 20 மாகாணங்கள்; H-1B கட்டணம், கட்டுப்பாடுகளுக்கு எதிராக வழக்கு
ட்ரம்ப்புக்கு எதிராக ஒன்றுதிரண்ட 20 மாகாணங்கள்; H-1B கட்டணம், கட்டுப்பாடுகளுக்கு எதிராக வழக்கு
Embed widget