மேலும் அறிய

Rajinikanth: ஆட்ட கடிச்சு மாட்ட கடிச்சு கடைசியா...சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தையே வம்பிழுத்த ப்ளூ சட்டை... முற்றுகையிட்ட ரசிகர்கள்!

‘ஜெயிலர்’ படம் வெளியாகட்டும் என்று ஆர்வமாக காத்திருக்கிறார்கள் ரஜினி ரசிகர்கள். ப்ளூ சட்டை மாறனுக்கு சரியான பதிலடி கிடைக்குமா

சிவகார்த்திகேயன், அஜித், பவன் கல்யாண், மாரி செல்வராஜ், அட்லீ  முதலியவர்களைத் தொடர்ந்து தற்போது ரஜினி ரசிகர்களின் பொறுமையை சோதித்துப் பார்க்க திட்டமிட்டுள்ளார் ப்ளூ  சட்டை மாறன்.

ப்ளு சட்டை மாறன்

யூட்யூபில் சினிமா விமர்சனம் செய்து வருபவர் ப்ளூ சட்டை மாறன். தனது விமர்சன மொழிக்காக நிறைய சர்ச்சைகளில் சிக்கியுள்ளார் மாறன். திரைப்படத்தை விமர்சிக்கும்போது மிகக் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி வந்தார் ப்ளூ சட்டை மாறன்.

இதற்காக கடுமையாக திரைப்பட ரசிகர்களால் இணையதளத்தில் விமர்சிக்கப்பட்டார். ரசிகர்களால் மட்டுமில்லாமல திரைப் பிரபலங்களாலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசி வந்த ப்ளூ சட்டை  சில காலம் கழித்து தனது விமர்சனங்களில் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்துவதை குறைத்துக் கொண்டு படங்கள் குறித்தான விமர்சனங்களை மட்டுமே பேசத் தொடங்கினார் .

இன்று ஒரு படம் வெளியாகி இருக்கிறதென்றால், ப்ளூ சட்டை மாறன் அந்தப் படம் குறித்து என்ன சொல்லியிருக்கிறார் என்பதை பார்த்தப் பின்பே திரையரங்குகளுக்கு செல்லும் ரசிகர்கள் இருக்கிறார்கள். ரசிகர்களை விடுங்கள் தங்களது படம் குறித்து ப்ளூ சட்டை என்ன சொல்லியிருக்கிறார் என்று கவனிக்கும் படக்குழுக்களும் இருக்கின்றன.

ரஜினி ரசிகர்களை சீண்டும் மாறன்

மக்களால் சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்படும் ரஜினிகாந்தின் படங்கள் பொதுவாக பல்வேறு வசூல் சாதனைகளை உருவாக்குபவை. படத்தின் தரத்தைக் பொறுத்து இது மாறுபடலாம்.  தற்போது ரஜினியில் ஜெயிலர் படத்தின் வேலைகள் முடிவடைந்துவிட்ட நிலையில் படத்தின்  இசைவெளியீட்டு விழா இன்று நடைபெற இருக்கிறது.  இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழ்நாட்டில் அதிக வசூல் ஈட்டும் நடிகர்களின் பட்டியல் ஒன்றை வெளியிட்டிருக்கிறார் ப்ளூ சட்டை மாறன்.

கடைசியில் ரஜினி

இந்தப் பட்டியலில் முதலிடத்தில் விஜய் , இரண்டாவது இடத்தில் கமல்ஹாசன், மூன்றாவது இடத்தில் அஜித்  கடைசியாக நான்காவது இடத்தில் ரஜினியின் பெயரைக் குறிப்பிட்டிருக்கிறார் மாறன். இதனால் கடுப்பான ரஜினி ரசிகர்கள் கமெண்ட்ஸில் அவரை விமர்சித்து வருகிறார்கள். தற்போது ரஜினி நடித்திருக்கும் ஜெயிலர் படம் நிச்சயம் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூலிலும் நல்ல எண்ணிக்கைகளை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயிலர்

நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடித்துள்ளார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு இன்று நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற இருக்கிறது.

தலைப்பு செய்திகள்

ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
“அப்போ அந்த பதிவுகள் எல்லாம் என்ன?” – அனுபமாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்
“அப்போ அந்த பதிவுகள் எல்லாம் என்ன?” – அனுபமாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!
‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லர் வெளியீட்டு விழா !
‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லர் வெளியீட்டு விழா !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
ஏலகிரியில் சினிமா பாணி அக்கிரமம்! மலைவாழ் மக்களைக் கட்டையால் அடித்து கொலை மிரட்டல்... அலறும் மக்கள்!
ஏலகிரியில் சினிமா பாணி அக்கிரமம்! மலைவாழ் மக்களைக் கட்டையால் அடித்து கொலை மிரட்டல்... அலறும் மக்கள்!
விவசாயிகளுக்கு தமிழக அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு 'ஆப்' இருந்தா போதும்... லாபம் அள்ளலாம்!
விவசாயிகளுக்கு அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு ஆப் இருந்தா போதும்! லாபம் அள்ளலாம்!
Embed widget