Coolie: எவ்வளவு முக்கினாலும் 1000 கோடி கூலி அடிக்காது.. ரஜினி ரசிகர்களை சீண்டிய ப்ளூசட்டை!
ரஜினிகாந்தின் படம் ரூபாய் 1000 கோடி வசூலை எட்டாது என்று திரை விமர்சகர் ப்ளூசட்டை மாறன் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 14ம் தேதி கூலி படம் வெளியானது. இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இந்த நிலையில், படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் ரூபாய் 1000 கோடியை படம் 4 நாட்களில் வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இது ரஜினி ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது. இந்த நிலையில், பிரபல திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் கூலி வசூலை விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தன்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,
அலப்பறை:
நெகட்டிவ் விமர்சனங்களை காலிசெய்து வசூல் சாதனை படைத்த கூலி. தலீவர் ஃபேன்ஸ் அலப்பறை. அன்பே சிவம் வசூலில் தோல்வி அடைந்தது. ஆனால் அதை மொக்கைப்படம் என்று சொன்னவர்கள் மிகக்குறைவு.
ரஜினி, ரேவதி நடித்த கை கொடுக்கும் கை படம் தேசிய விருதை வென்றது. ஆனால் வசூலில் தோல்வி.
கடைசி விவசாயி படம் வெளியான முதல்நாளே படுதோல்வி. ஆனால் அதை பாராட்டியவர்கள் அதிகம்.
திரிஷா இல்லன்னா நயன்தாரா, இருட்டு அறையில் முரட்டுக்குத்து போன்றவை வசூலில் பெரிய வெற்றி. ஆனால் அவை கடுமையாக விமர்சிக்கப்பட்டன.
நெகடிவ் விமர்சனங்களை காலிசெய்து வசூல் சாதனை படைத்த கூலி. தலீவர் ஃபேன்ஸ் அலப்பறை.
— Blue Sattai Maran (@tamiltalkies) August 19, 2025
அன்பே சிவம் வசூலில் தோல்வி அடைந்தது. ஆனால் அதை மொக்கைப்படம் என்று சொன்னவர்கள் மிகக்குறைவு.
ரஜினி, ரேவதி நடித்த கை கொடுக்கும் கை படம் தேசிய விருதை வென்றது. ஆனால் வசூலில் தோல்வி.
கடைசி விவசாயி படம்… pic.twitter.com/pohqY5n5ki
உளறுவதில் அர்த்தமில்லை:
ஆகவே.. விமர்சனங்களையும், வசூலையும் ஒப்பிட்டு உளறுவதில் அர்த்தமில்லை. இது விருதுகளை வென்ற படங்களுக்கும் பொருந்தும். லோகேஷ் கனகராஜ், அமீர்கான், ஆயிரம் கோடி என ஹைப்பை ஏற்றியதுதான் கூலி மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது.
மற்றபடி.. படம் பார்த்த பலரும் தியேட்டர் எனும் இருட்டு அறையில் வாங்கிய முரட்டு குத்துதான் இந்த கூலி. கங்குவா 2,000 கோடி அடிக்கும் எனக்கூவி பல்ப் வாங்கினார் அதன் தயாரிப்பாளர் ஞானவேல் ராசா. ஆனால் கலாநிதி மாறனோ, லோகேஷ் கனகராஜோ.. கூலி 1,000 கோடி அடிக்குமென கூறவே இல்லை.
1000 கோடி சாத்தியமில்லை:
கூலி ரிலீஸ்க்கு பல மாதங்கள் முன்பிருந்தே ஆயிரம் கோடி கன்ஃபர்மா அடிக்கும் என ஒவ்வொரு நாளும் ரஜினி ரசிகர்கள் மற்றும் அனுதாபிகள்தான் டிசைன் டிசைனாக வடை சுட்டுக்கொண்டு இருந்தார்கள். எவ்வளவு முக்கினாலும் 1,000 கோடி சாத்தியமில்லை என்பதே உண்மை.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
ப்ளூ சட்டை மாறன் அனைத்து நடிகர்களின் படங்களையும் மிக கடுமையாக விமர்சிப்பது வழக்கம். குறிப்பாக, நடிகர் ரஜினிகாந்தின் படங்களை மிக கடுமையாக விமர்சிப்பது ப்ளூசட்டை மாறனின் வழக்கம் ஆகும். ரஜினியின் கபாலி, காலா, ஜெயிலர், வேட்டையன் என பல படங்களையும் அவர் இதுபோலவே விமர்சித்துள்ளார். கூலி படத்தையும் மிக கடுமையாக விமர்சித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த படத்தில் ரஜினி மட்டுமின்றி சத்யராஜ், நாகர்ஜுனா, உபேந்திரா, செளபின் சாஹிர் என பெரிய நட்சத்திர பட்டாளங்களே நடித்திருந்தனர்.





















