உயர் ரத்த அழுத்தத்தால் அவதிப்படுபவர்கள் இந்த உணவுகளைச் சாப்பிடலாம்.

Published by: சுகுமாறன்
Image Source: Canva

வாழைப்பழம்

வாழைப்பழம் ஏராளமான நன்மை கொண்டது. இயற்கையாகவே சோடியம் அளவை சமன் செய்யும் வாழைப்பழத்தில் பொட்டாசியம் உள்ளது.

Image Source: Canva

பெர்ரீஸ்

பெர்ரீஸ் பழங்களில் ஃபிளாவனாய்ட், ஆன்டி ஆக்சிடன்கள் உள்ளது. இது ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்கிறது.

Image Source: Canva

ஆரஞ்சு

ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி உள்ளது. பொட்டாசியம் சத்து அதிகம் உள்ள ஆரஞ்சு பழம் ரத்த ஓட்டத்தைச் சீராக்கும்.

Image Source: Canva

ஓட்ஸ்

கெட்ட கொழுப்பை குறைக்கும் ஆற்றல் கொண்டது ஓட்ஸ். இதில் உள்ள நார்ச்சத்து ரத்த ஓட்டத்திற்கு உதவுகிறது.

Image Source: Canva

பிஸ்தா பருப்புகள்

இயற்கையாக ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுவது பிஸ்தா. இதயத்திற்கு ஆரோக்கியமான கொழுப்பு, நார்ச்சத்து இதில் உள்ளது.

Image Source: Canva

ஆளி விதைகள்

ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்துகள் நிறைந்தது ஆளி விதைகள். இது ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.

Image Source: Canva

கீரை, காய்கறிகள்

கீரை மற்றும் காய்கறிகளில் வைட்டமின், பொட்டாசியம் உள்ளிட்ட ஏராளமான சத்துகள் உள்ளது. இது ரத்தத்தில் உள்ள சோடியம் அளவை கட்டுப்படுத்தும்.

Image Source: Canva

பீட்ரூட்

பீட்ரூட்டில் உள்ள நைட்ரேட் ரத்த நாளங்களை விரிவுபடுத்தி ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.

Image Source: Canva

கிவி

ரத்தத்தில் உள்ள சோடியத்தின் அளவை குறைப்பதில் கிவி பழம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் பொட்டாசியம், ஆன்டி ஆக்சிடன்கள் உள்ளது.

Image Source: Canva