மேலும் அறிய

மாநிலங்களவை வரை சென்ற எம்புரான் சர்ச்சை...சுரேஷ் கோபி காட்டிய ஆவேசம்

Empuraan Controversy : எம்புரான் படத்தை வைத்து மாநிலங்களவையில் பாஜக எம்பி சுரேஷ் கோபி பேசியுள்ளது பேசுபொருளாகியுள்ளது

பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்த லூசிஃபர் திரைப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்தின் இரண்டாம் பாகமாக தற்போது  எம்புரான் திரைப்படம்  உருவாகியுள்ளது .  கடந்த மார்ச் 27 ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியானது. பிருத்விராஜ்  , மோகன்லால் , டொவினோ தாமஸ் , மஞ்சு வாரியர் , சூரஜ் வெஞ்சரமூடு உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். 

 

எம்புரான் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கம்

 

பொலிட்டிக்கல் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள எம்புரான் திரைப்படம் இந்திய அரசியல் நிலப்பரப்பை மையக்கதையாக கொண்டுள்ளது. தேசிய கட்சிகளான காங்கிரஸ் , பாஜக , மார்க்ஸிய காட்சிகளை குறிப்பிட்டு விமர்சிக்கும்   விதமாக இப்படத்தில் நிறைய காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. மேலும் 2002 ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த இந்து முஸ்லிம் கலவரமும் இப்படத்தின் மையக் கதையாக இடம்பெற்றுள்ளது. இந்த காட்சியில் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் கர்ப்பினி இஸ்லாமிய பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்யும் காட்சிகளுக்கு இந்துத்துவ அமைப்புகள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இதனைத் தொடர்ந்து படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கியது எம்புரான் படக்குழு. எம்புரான் பட சர்ச்சை தற்போது மாநிலங்களவை வரை சென்றுள்ளது 

எம்புரான் படம் பற்றி சுரேஷ் கோபி

மாநிலங்களவையில் பாஜக எம்.பி சுரேஷ் கோபி மற்றும் மார்க்ஸிய கம்யூனிச் கட்சியைச் சேர்ந்த ஜான் பிரிட்டாஸ் இடையில் எம்புரான் படத்தை மையமாக வைத்து காரசாரமான விவாதம் நடந்தது.

 

முதலில் பேசிய ஜான் பிரிட்டாஸ்  "எம்புரான் படத்தில் வரும் முன்னா ( கூடவே இருந்து துரோகம் செய்யும் ஒரு கதாபாத்திரம்) பாஜக கட்சிதான். கேரளாவைச் சேர்ந்த ஒருவர் பாஜக மேஜையில் அமர்ந்திருக்கிறார். கூடிய விரைவில் அந்த கணக்கையும் தீர்த்துவிடுவோம். கேரள  செய்த தவறை அவர்களே சரி செய்துவிடுவார்கள்" என்று கூறினார். 

 

அவரைத் தொடர்ந்து பேசிய சுரேஷ் கோபி " எம்புரான் படத்தில்  நன்றி தெரிவித்தலில் இருந்து என்னுடைய பெயரை படக்குழு நீக்கியுள்ளது. இந்த சர்ச்சை எழுந்தவுடன் என்னுடைய பெயரை நான் நீக்க சொல்லிவிட்டேன் படத்தில் இருந்து காட்சிகளை நீக்கும்படி எம்புரான் படக்குழுவிற்கு எந்த அழுத்தமும் தரப்படவில்லை. படத்தின் இயக்குநர் தயாரிப்பாளர் , மற்றும் நடிகர் ஆகிய அனைவரும் கலந்து பேசி தான் படத்தில் இருந்து 22 காட்சிகளை நீக்கியுள்ளார்கள்.

 

எம்புரான் படத்தை குறிப்பிட்டு பேசிய பிரிட்டாஸ் TP 51 மற்றும் Left Right Left ஆகிய படங்களை கேரள அரசு ரீரிலீஸ் செய்யும் தைரியம் இருக்கா. ( இரு படங்களும் கேரள மார்க்ஸிய கட்சிகளை விமர்சிக்கும் விதமான உருவானவை) இந்த கட்சி 800 பேரை கொன்றிருக்கிறது. 600 குடும்பங்கள் ஏமாற்றப் பட்டிருக்கின்றன. கேரள மக்கள் உங்களை மண்ணில் உதைத்து விடுவார்கள் " என சுரேஷ் கோபி பேசினார்.

தலைப்பு செய்திகள்

Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?
த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?
அனுமதியின்றி பயன்படுத்தபட்ட என் பட பாடல்... 28 ஆண்டுகளுக்கு பின் இயக்குநர் விக்ரமன் சொன்ன உண்மை
அனுமதியின்றி பயன்படுத்தபட்ட என் பட பாடல்... 28 ஆண்டுகளுக்கு பின் இயக்குநர் விக்ரமன் சொன்ன உண்மை
இயக்குநர் ஸெனோஃபர் ஃபாத்திமா, தனது அடுத்த படைப்புப் பயணத்திற்காக சென்னையை நோக்கி பயணம்
இயக்குநர் ஸெனோஃபர் ஃபாத்திமா, தனது அடுத்த படைப்புப் பயணத்திற்காக சென்னையை நோக்கி பயணம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Maruti Baleno: ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Embed widget