அதிரடி ஆல்ரவுண்டர்! யார் இந்த விப்ராஜ் நிகம்?
ஐ.பி.எல். தொடரில் லக்னோ அணிக்கு எதிரான அறிமுக போட்டி. 15 பந்துகளை சந்தித்த விப்ராஜ், இரண்டு சிக்ஸர்கள் மற்றும் ஐந்து போர்களை அடித்து 39 ரன்களை சேர்த்தார்.
டெல்லி அணி தோற்கும் நிலையில் இருந்த போது, 260 ஸ்டைக் ரேட்டில் விப்ராஜ் ஆடிய ஆட்டம், ஆட்டத்தை தலைகீழாக மாற்றியது. பந்துவீச்சில் முதல் ஓவரிலேயே, சவுத் ஆப்பிரிக்காவை சேர்ந்த மார்க்ராம் விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார்.
UPT20 போட்டியில் விபராஜ் அதிரடியாக விளையாடி 2023 ஆம் ஆண்டு பலரது கவனத்தை பெற்றார். ஒரே ஓவரில் 28 ரன்கள் எடுத்து 2023 ஆம் ஆண்டு பலரின் கவனத்தை பெற்றார்.
போட்டியில் எட்டாவது ஆளாக களமிறங்கி, 29 பந்துகளில் 48 ரன்கள் பெற்றிருந்தார். டெல்லி கேப்பிடல்ஸ் அணி அவரை ஐபிஎல் ஏலத்தில் 50 லட்சம் ரூபாய்க்கு வாங்கி இருந்தது.
அடிப்படை விலையான, 20 லட்சத்தில் இருந்து, மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் போட்டி போட்டு அவரை வாங்க முயற்சி செய்தது. இறுதியில் டெல்லி கேப்பிட்டல் அணி 50 லட்ச ரூபாய் கொடுத்து அவரை வாங்கியது
சையது முஷ்டாக் அலி டி20 தொடரில் எட்டாம் வரிசையில் இறங்கி 8 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து வியக்க வைத்துள்ளார்.
அதிரடியான பேட்டிங், பவுலிங் என தனது திறமையை கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி வெளிகொண்டுவருகிறார் இவர்.
இவரின் அதிரடியான ஆட்டங்களை கண்டு ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.
ஐ.பி.எல். தொடரில் சிறந்த வீராக இருப்பார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.