இந்திய கலாச்சாரத்தை கெடுக்கும் டேட்டிங் ஆப்.. பெண்களே நம்பாதீங்க.. கங்கனா ரணாவத் சர்ச்சை பேச்சு
பாலிவுட் நடிகையும், எம்.பியுமான கங்கனா ரணாவத் லிவிங் உறவு குறித்து பேசியிருப்பது சர்ச்சையாக மாறியுள்ளது.

2006இல் வெளியான கேங்க்ஸ்டர் படத்தின் மூலம் பாலிவுட்டில் நடிகையாக அறிமுகமான கங்கனா ரனாவத் கடைசியாக எமர்ஜென்சி என்ற படத்தில் நடித்தார். இப்படத்தில் இந்திய நாட்டின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியா கங்கனா ரணாவத் நடித்திருந்தார். இப்படம் பெரும் சர்ச்சையை சந்தித்தது. படம் வெளியாவதற்கு முன்பே பல காட்சிகளை சென்சார் போர்டு நீக்க வலியுறுத்தியது. பாலிவுட் சினிமாவில் பிரபலங்கள் யாரையும் விட்டு வைக்காமல் மிகவும் மோதல் போக்கையை கங்கனா ரணாவத் கடைப்பிடித்து வருகிறார்.
கடந்த மக்களவை தேர்தலில் இமாச்சல பிரதேச மாநிலத்தின் மண்டி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட கங்கனா ரணாவத் எம்.பி. ஆக வெற்றி பெற்றார். தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் இவர் தற்போது அளித்த பேட்டியில் ஆண் நடிகர்களை கடுமையாக சாடியுள்ளார். அதில், "பாலிவுட்டில் நான் பல நடிகர்களுடன் நடித்திருக்கிறேன். ஆனால், சில நடிகர்கள் மிக மோசமாக நடந்துகொள்கிறார்கள். அவர்களது அநாகரீக செயல் எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.
நான் ஒரு போதும் அதுபோன்ற விசயத்தில் இருந்து தப்பித்துக்கொள்வேன். பெரும்பாலான நடிகர்கள் ஏன் இப்படி மோசமாக இருக்கிறார்கள் என்பதை நினைத்து கவலையடைந்திருக்கிறேன். நான் பாலியல் ரீதியான பிரச்னையை மட்டும் சொல்லவில்லை. படப்பிடிப்புக்கு தாமதமாக வருவது, நடிகைகளை கீழ்த்தரமாக நடத்துவது, அவர்களது செயல்பாடும் மோசமாகவே இருக்கும்" என்று அவர்களது பெயரை குறிப்பிடாமல் குற்றம் சாட்டினார்.
திருமணம் செய்துகொள்ளாமல் முரட்டு சிங்கிளாக வலம் வரும் கங்கனா ரணாவத்திற்கு 39 வயது ஆகிறது. இந்நிலையில் திருமணம் குறித்து பேசிய அவர், லிவின் உறவு மற்றும் டேட்டிங் செயலி இந்திய கலாச்சாரத்தை அரித்துவிடும். டேட்டிங் செயலிகளை பயன்படுத்தும் நபர்களுடன் தொடர்பு கொள்வதை கற்பனையில் கூட நினைத்து பார்க்க முடியாது. ஆணோ பெண்ணோ இருவரும் படிக்கும் இடத்தில் அல்லது வேலை பார்க்கும் இடத்தில் நல்ல துணையை தேடிக்கொள்வது நல்லது. அப்படி இல்லை என்றால் பெற்றோர் பார்க்கும் வரன்களை பார்த்து பேசி பழகிக்கொள்வது நல்லதாக இருக்கும்.
லிவிங் உறவால் நல்ல உறவை ஏற்படுத்த முடியாது. பெயர் முகம் தெரியாத ஒருவருடன் டேட்டிங் செயலியில் பழகுவதால் நம்பிக்கை கிடைத்துவிடுமா, தைரியம் இல்லாதவர்கள் தான் டேட்டிங் ஆப்பை பயன்படுத்துகிறார்கள். அதுவும் லிவிங் உறவு பெண்களுக்கு ரொம்பவே ஆபத்தை ஏற்படுத்தும். திருமணம் போன்ற குடும்ப அமைப்பை சிதறாமல் பாதுகாப்பது நமது கடமை. இந்திய சமூகத்தில் திருமணம் மிக முக்கியம் என கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.





















