மேலும் அறிய

TTF Vasan :ஹீரோவாக களமிறங்கும் பைக் ரைடர் டி.டி.எப் வாசன்.. வெளியானது பர்ஸ்ட் லுக் போஸ்டர்

பைக் ரைடர் டிடிஎப் வாசன் சினிமாவில் களமிறங்குகிறார். அவர் நடிக்கவுள்ள படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

பைக் ரைடரும், யூடியூபருமான டிடிஎப் வாசன் நடிக்கவுள்ள படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்  வைரலாகி வருகிறது. 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த வெள்ளியங்காட்டை சேர்ந்தவர் டி.டி.எப் வாசன். இவர் பிரபல யூடியூபர். இவர் மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டி சென்று அதனை வீடியோவாக எடுத்து யூடியூபில் பதிவேற்றம் செய்து வருகிறார். இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.  அதிவேக பயணம் காரணமாக பல வழக்குகளையும் சந்தித்துள்ளார். டிடிஎஃப் வாசன் 2K கிட்ஸ்களுக்கு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகிறார் என்ற விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன. விமர்சனங்களைத் தாண்டி டி.டி.வி.வாசனை யூடியிபில் சப்ஸ்கிரைப் செய்துள்ளவர்களின் எண்ணிக்கை 35 லட்சத்தை தாண்டியுள்ளது. 

இந்நிலையில் இவர் தற்போது தமிழ் சினிமாவில் கதாநாயகனாக களமிறங்கவுள்ளார். அதாவது, இயக்குனர் செல்அம் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இப்படத்தை தி பட்ஜெட் பிலிம் கம்பெனி தயாரிக்கிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் டி.டி.எப் வாசனின் பிறந்த நாளான இன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிப்பு வெளியானது.

அதன்படி, இன்று இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இப்படத்திற்கு 'மஞ்சள் வீரன்' என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. டி.டி.எப்.வாசன் கையில் சூலாயுதத்துடன் புல்லட் பைக்கில் சீறிப் பாய்வது போல உள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் '299 கி.மீ. வேகத்தில் படப்பிடிப்பு ஆரம்பம்' என குறிப்பிடப்பட்டுள்ளது.

டிடிஎஃப் வாசன் 2கே கிட்ஸ்களின் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறார். இவர் பைக் ஓட்டும் ஸ்டைலை பார்த்து  இவருக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.  இவரின் ரசிகர்களாக இருக்கும் 2கே கிட்ஸ்கள் பலர் இவரை சந்திக்க ஆர்வம் காட்டுகின்றனர்.  சில மாதங்களுக்கு முன்பு டிடிஎஃப் வாசான் வைத்த மீட் அப்-க்கு யாரும் எதிர்பார்க்காத வகையில் ஏராளமான  பைக் ரைடர்ஸ் மற்றும் அவரின்  தீவிர ரசிகர்கள் பங்கேற்றனர். இதனால் அப்பகுதியில்  நெரிசல் ஏற்பட்ட நிலையில், போலீசார் அங்கிருந்தவர்களை அப்புறப்படுத்தினர். 

அடிக்கடி டிடிஎஃப் வாசன் நெடுஞ்சாலைகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட மிகவும் வேகமாக பைக்குகளை இயக்குவதாக இவர் மீது அடிக்கடி குற்றச்சாட்டுகள்  எழுவது வழக்கம். இவர்  கைது நடவடிக்கைகளுக்கும் ஆளாகி இருக்கிறார். இன்று அவருடைய பிறந்தநாள் இதற்கு முன்பு அவருடைய பிறந்தநாளில் ஃபேன்ஸ் மீட் வைத்து தன்னுடைய ரசிகர்களை அடிக்கடி சந்திக்கும் இவர் தற்போதைய பிறந்த நாளில் தன்னுடைய ரசிகர்களை சந்திக்க முடியாது என்று தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை பகிர்ந்து இருக்கிறார். தற்போது தான் நடித்துக் கொண்டிருக்கும் படத்தின் பூஜை ஆரம்பித்து இருப்பதால் தான் இந்த வருடம் மீட் அப் வைக்க முடியவில்லை என்றும் அவர் தனது வீடியோவில் தெரிவித்து இருக்கிறார். 


தலைப்பு செய்திகள்

Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Embed widget