Biggboss Tamil 9 Finale : பிக்பாஸ் கிராண்ட் ஃபினாலேக்கு ரெடியா..! டைட்டில் வின்னர் பரிசு தொகை உள்ளிட்ட விபரங்ங்கள்
BiggBoss Tamil 9 finale : பிக்பாஸ் தமிழ் சீசன் 9 கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சி ஒளிபரப்பு மற்றும் டைட்டில் வின்னர் பெறப்போகும் பரிசுத் தொகை குறித்த விபரங்களைப் பார்க்கலாம்

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி கிராண்ட் ஃபினாலே இன்று ஞாயிற்று கிழமை ஒளிபரப்பாக இருக்கிறது. திவ்யா கணேசன் இந்த ஆண்டு டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பு மற்றும் டைட்டில் வின்னர் பெறவிருக்கும் பரிசுத் தொகை குறித்த விபரங்களை தெரிந்துகொள்ளுங்கள்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி தொடங்கிய பிக்பாஸ் தமிழின் 9 ஆவது சீசன் இறுதி எபிசோடை நெருங்கியுள்ளது. வெவ்வேறு பின்புலத்தச் சேர்ந்த 18 போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் கலந்துகொண்டனர். மேலும் வைல்டு கார்டு சுற்றில் மேலும் 4 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு நுழைந்தார்கள். சண்டைகள் , சர்ச்சைகள் , உணர்ச்சிகரமான தருணங்கள் என இந்த ஆண்டு பிக்பாஸ் 100 ஆவது நாளை எட்டியுள்ளது.
ஒளிபரப்பு
இன்று மாலை 6 மணி முதல் பிக்பாஸ் ஃபைனல் நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது. இறுதி சுற்றிற்கு திவ்யா , அரோரா , விக்ரம் , சபரி ஆகிய நான்கு போட்டியாளர்கள் ஃபைனலிஸ்ட்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். இவர்கள் தவிர்த்து இந்த சீசனில் கலந்துகொண்டு எலிமினேட் ஆன மற்ற போட்டியாளர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள். பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகமாக நடைபெற இருக்கிறது பிக்பாஸ் ஃபினாலே.
டைட்டில் வின்னர் யார்
பிக்பாஸ் தமிழ் 9 ஆவது சீசனுக்கான டைட்டில் வின்னர் குறித்த தகவல் ஏற்கனவே இணையத்தில் கசிந்துள்ளது. வைல்டு கார்ட் சுற்றில் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த திவ்யா கணேசன் இந்த ஆண்டு டைட்டில் வின்னர் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளார். முன்னதாக கானா வினோத் டைட்டில் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 18 லட்ச ரூபாய் பணப்பெட்டியுடன் அவர் கடந்த வாரம் வெளியேறினார். இதனால் வினோதை தொடர்ந்து திவ்யாவுக்கு ரசிகர்கள் அதிகம் வாக்களித்து அவரை வெற்றிபெற வைத்துள்ளார்கள் .
பரிசுத் தொகை எவ்வளவு
இந்த ஆண்டு பிக்பாஸ் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்படுபவர் ரூ 50 லட்சம் பரிசுத் தொகையுடன் வீடு செல்லவிருக்கிறார். இது தவிர்த்து தெலுங்கு பிக்பாஸ் போல் கூடுதல் பரிசுகளுடம் இந்த நிகழ்ச்சியில் வழங்கப்படலா என எதிர்பார்க்கப்படுகிறது.





















