Bigg Boss Thamarai Salary: பிக்பாஸ் அல்டிமேட்டுக்காக தாமரை வாங்கிய சம்பளம் என்ன தெரியுமா..?
Bigg Boss Ultimate Thamarai Selvi Salary: பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் 3வது இடம்பிடித்த தாமரை பெற்ற சம்பள விவரம் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி சமீபத்தில் நிறைவு பெற்றது. இந்த நிகழ்ச்சியில் தொடக்கம் முதலே இந்த நிகழ்ச்சியில் அசத்தி வந்த பாலா டைட்டில் வின்னராக வெற்றி பெற்று அசத்தினார். இந்த நிகழ்ச்சியில் தொடக்கம் முதலே தாமரையும் போட்டியாளராக பங்கேற்று இருந்தார். அவர் 3வது இடத்தை பிடித்து அசத்தினார்,
கடந்த பிக்பாஸ் போட்டியின் 5வது சீசனில் தாமரை பங்கேற்று தமிழ்நாட்டில் பரிச்சயம் ஆனார். இந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி மூலமாக மேலும் பிரபலம் ஆகியுள்ளார். இந்த நிலையில், பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்ற தாமரையின் சம்பள விவரம் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்றதற்காக தாமரைக்கு வாரத்திற்கு ரூபாய் 80 ஆயிரம் சம்பளமாக பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தாமரை என்ற தாமரை செல்வி(Thamarai Selvi) பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்காக பிக்பாஸ் வீட்டில் 70 நாட்கள் வரை தங்கியிருந்தார். வாரத்திற்கு 80 ஆயிரம் என்ற வீதத்தில் 10 வாரத்திற்கு 8 லட்சம் வரை சம்பளம் பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் தாமரை அந்தளவு பிரபலம் இல்லாததால் அவருக்கு குறைவான சம்பளம் அளிக்கப்பட்டது. ஆனால், பிக்பாஸ் சீசன் 5 மூலமாக அவர் மிகவும் பிரபலம் ஆன காரணத்தாலே இந்த சீசனில் அவருக்கு 8 லட்சம் சம்பளம் வரை அளிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இவர்கள் தவிர இந்த அல்டிமேட் சீசனில் பங்கேற்ற பாலா, நிரூப், ஜூலி, அபிராமி, ஸ்ருதி ஆகியோருக்கு ஓரளவு நல்ல சம்பளம் கிடைத்தாக கூறப்படுகிறது. மேலும், பிக்பாஸ் மூலம் பிரபலமான தாமரைக்கு சில பட வாய்ப்புகளும் தொடர்ந்து வருவதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க : Oh My Dog: “சிவக்குமார் அவ்வளவு ஒழுக்கமானவர்; அவர் விதைத்த விதைதான் சூர்யா” - நடிகர் விஜயகுமார்
மேலும் படிக்க : எகிற வைத்த எதிர்ப்பார்ப்பில் ரன்பீர் - ஆலியா திருமணம்: வாழ்த்து சொன்ன வொண்டர் வுமன்
மேலும் படிக்க : "என்னை தேடவேண்டாம்ன்னு லெட்டர் எழுதி வச்சுட்டு போனவரு விஜய்" - மனம் திறந்த எஸ்.ஏ.சந்திரசேகர்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

